செண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செண்டு ஆயுதத்தை வலக்கையில் ஏந்திய ஐயனார்

செண்டு (Chentu) என்பது ஒரு வளைந்த குச்சியைப் போல உள்ள ஒரு ஆயுதமாகும். இது சிவன், நந்தி தேவர், ஐயனார், கிருட்டிணன் ஆகியோருக்கு உரிய ஆயுதமாகும். இந்த ஆயுதத்தின் பெயரான செண்டு என்பது ஒரு தமிழ் சொல்லாகும். இந்த ஆயுதமானது தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள இந்துக் கோயில் சிற்பங்களில் காணப்படுகிறது.[1]

தமிழ் இலக்கியங்களில்[தொகு]

உக்கிரபாண்டியனுக்கு சிவன் செண்டு ஆயுதத்தை வழங்கியதாகவும், செறுக்குற்ற மேரு மலையை பாண்டியன் அந்த ஆயுததத்தால் அடித்து அதன் செறுக்கை நீக்கினான் என்று திருவிளையாடல் புராணத்தின் செண்டால் அடித்த படலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.[2]

கரிகால் சோழன் வடக்கே படையெடுத்துச் சென்று வென்று, இமயத்தைச் செண்டால் அடித்தது, புலி பொறித்ததான் என்று சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.[3]

குறிப்புகள்[தொகு]

  1. Dictionary of Hindu Lore and Legend (ISBN 0-500-51088-1) by Anna Dallapiccola
  2. "செண்டால் அடித்த படலம்". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 6 மே 2019.
  3. புகார் - சோழர் சிறப்பு (1992). சிலம்போ சிலம்பு. சென்னை: வானதி பதிப்பகம். பக். 337. https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZh8juhy.TVA_BOK_0002348. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செண்டு&oldid=3582599" இலிருந்து மீள்விக்கப்பட்டது