செண்டினல் மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செண்டினல் பழங்குடியினர்
மொத்த மக்கள்தொகை

(ஏறத்தாழ 250

2001 மக்கட்தொகை கணக்கெடுப்புபடி: 39)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
வடக்கு செண்டினல் தீவில் மட்டும், இந்தியா
மொழி(கள்)
அந்தமான் மொழிகளில் ஒன்றான செண்டினல் மொழி
சமயங்கள்
இதுவரை தெரியவில்லை
தொடர்புள்ள இனக்குழுக்கள்
அந்தமான் ஜாரவா பழங்குடியினர், ஒன்கே மக்கள், அந்தமானியப் பழங்குடிகள்
செண்டினல் பழங்குடி மக்களின் உருவ மரச்சிற்பம்
செண்டினல் பழங்குடி மக்களின் உருவ மரச்சிறபம்
செண்டினல் பூர்விக குடிமகனின் உருவ மரச்சிற்பம்

செண்டினல் மக்கள் (Sentinelese, Sentineli, Senteneli, Sentenelese) வெளி உலக தொடர்பின்றி, வெளி உலக மக்களையும் பார்க்க விரும்பால் அந்தமான் தீவின் அடர்ந்த காடுகளில் வாழ்கின்றனர்.[1]

செண்டினல் பழங்குடியின மக்கள் தெற்கு அந்தமானில் உள்ள வடக்கு சென்டினல் தீவில் ஒரு சிறு கிராமத்தில் வாழ்கின்றனர். இப் பழங்குடிமக்கள் வில் அம்புகளுடன் காட்டு விலங்குகளை வேட்டையாடி உண்டு வாழ்கின்றனர். செண்டினல் பழங்குடியின மக்கள் வெளி உலக மக்களிடம் தொடர்பு கொள்வதை மிகவும் வெறுக்கிறார்கள். 2004-ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி பேரலையால் இம்மக்கள் பாதிக்கப்படவில்லை. 2004-இல் மேற்கொள்ளப்பட்ட ஹெலிகாப்டர் மூலம் நடத்திய ஆய்வில் தற்போது செண்டினல் பழங்குடி மக்கள் 250 முதல் 500 செண்டினல் மக்களே உள்ளதாக இந்திய அரசு கணக்கிட்டுள்ளது.[2]

செண்டினல் பழங்குடி மக்கள் அறுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அந்தமானில் வாழ்ந்து வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். செண்டினல் பழங்குடி மக்கள் பேசு மொழி, மற்ற அந்தமான் பழங்குடி மக்கள் பேசும் மொழிகளுக்கும் அதிக வேறுபாடு உள்ளது. செண்டினல் இன மக்கள் ஆப்பிரிக்காவின் கருப்பின மக்களைப் போல உருவமும் நிறமும் கொண்டுள்ளனர். செண்டினல் மக்களை இந்திய அரசு பழங்குடி மக்கள் பட்டியலில் வைத்துள்ளது.[3]

உலகில் உள்ள 6 அதி பயங்கர பழங்குடிகளில் இவர்கள் முக்கிய இடம் பிடிக்கிறார்கள். [4]

ஆதாரம்[தொகு]


மேற்கோள்கள்[தொகு]

  1. B. K. Roy, தொகுப்பாசிரியர் (1990). Cartography for development of outlying states and islands of India: short papers submitted at NATMO Seminar, Calcutta, December 3-6, 1990. National Atlas and Thematic Mapping Organisation, Ministry of Science and Technology, Government of India. பக். 203. OCLC 26542161. 
  2. Indian Census
  3. "List of notified Scheduled Tribes". Census India. பார்த்த நாள் 15 December 2013.
  4. அதி பயங்கரமான பழங்குடியினர் இருப்பது யாழ்ப்பாணத்திற்கு கிழக்கேயுள்ள தீவில்!தமிழ்வின் 03 செப்டம்பர் 2016

வெளி இணைப்புகள்[தொகு]

  • செண்டினல் பழங்குடி மக்களின் புகைப்படக் காட்சிகள்[2]
  • செண்டினல் பழங்குடி மக்கள், காணொலி காட்சி [3]

[4]

இதனையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செண்டினல்_மக்கள்&oldid=2113435" இருந்து மீள்விக்கப்பட்டது