செட்டு-உரைத்தொகுப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செட்டு-உரைத்தொகுப்பி-அறிமுக நிகழ்படம்

செட்டு(xed) என்பது லினக்சு வகைக் கணினிகளில் பயன்படும் உரைத்தொகுப்பிகளில் ஒன்றாகும். குறிப்பாக இது லினக்சு மின்டு என்ற உபுண்டு வழி தோன்றலான இயக்குதளத்தில் இயல்பிருப்பாக அமைந்துள்ளது. இந்தத் தொகுப்பியானது, வேகமான கூட்டுமுயற்சியின் விளைவால் வளர்ந்தோங்கி வருகிறது.

கிழக்கத்திய மொழிகளின், கணினி வழிச்சார்ந்தத் தேவைகளுக்கு ஒப்ப, இதன் கணிய நிரலாக்கம் மாறுபட்டு வளர்ந்து, அத்தேவையை நிறைவு செய்து வருகிறது. அந்த வகையில், இத்தனிவகை உரைத்தொகுப்பியானது தேவைப்படுகிறது. இதில் உள்ள பல வசதிகள், ஏற்கனவே இருக்கும் லினக்சு வகை உரைத்தொகுப்பிகளில் இருந்தாலும், இதிலுள்ள பல வசதிகள் இயல்பிருப்பாக அமைய இதன் உருவாக்குனர்கள் பங்களிக்கின்றனர்.[1] இரு (Gedit,pluma) வேறு லினக்சு வகை உரைத்தொகுப்பிகளிலிருத்து, இது தோன்றியுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]