செட்டி தனுஜா இராணி
செட்டி தனுஜா இராணி | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 4 June 2024 | |
முன்னையவர் | கீதா கொத்தபள்ளி |
தொகுதி | அரக்கு |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி |
பணி | அரசியல்வாதி |
செட்டி தனுஜா இராணி (Chetti Thanuja Rani; பிறப்பு 1993) என்பவர் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் அல்லூரி சீதாராம இராஜு மாவட்டத்தில் உள்ள அரக்கு மக்களவைத் தொகுதியின் உறுப்பினர் ஆவார்.[1][2] இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர்.[3] 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து வெற்றி பெற்றவர்களில் ஒருவர் ஆவார்.[4][5][6]
இளமையும் கல்வியும்
[தொகு]கும்மா தனுஜா இராணி, அல்லூரி சீதாராம இராஜு மாவட்டத்தில் உள்ள அடுமண்டாவினைச் சார்ந்த கும்மா சியாம் சுந்தர் ராவ் மகளாக உக்கும்பேட்டில் பிறந்தவர். இவர் செட்டி வினய் என்பவரை மணந்து செட்டி யஷ்னா என்ற மகளின் தாயாக உள்ளார்.[7] இராணி செட்டி பால்குணனின் மருமகள் ஆவார். கிர்கிசுத்தானின் பிசுக்கெக்கில், கிர்கிசுத்தான் பன்னாட்டுப் பல்கலைக்கழகத்தில் உள்ள உயர் மருத்துவப் பள்ளியில் மருத்துவப் பட்டப்படிப்பை முடித்தார். இவர் அல்லூரி சீதாராம இராஜு மாவட்டத்தில் தொற்றுநோயியல் நிபுணராகவும் பணியாற்றினார்.[8]
தொழில்
[தொகு]ஆந்திரப் பிரதேசத்தில் 14.5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய தொகுதிகளில் ஒன்றான அரக்கு மக்களவைத் தொகுதியில் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அரசியல் அறிமுகமானார் இராணி.[4][9] இவர் 4,77,005 வாக்குகள் பெற்று பாரதிய ஜனதா கட்சியின் கொத்தப்பள்ளி கீதாவை 50,580 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் [10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Pranathi, Laxmi (2024-04-29). "Two Educated Women in Clash for Araku Lok Sabha Seat". www.deccanchronicle.com (in ஆங்கிலம்). Retrieved 2024-06-05.
- ↑ "Election Commission of India". results.eci.gov.in. Election Commission of India. Retrieved 5 June 2024.
- ↑ Correspondent, D. C. (2024-03-17). "YSRC changes Araku MP candidate for second time". www.deccanchronicle.com (in ஆங்கிலம்). Retrieved 2024-06-05.
{{cite web}}
:|last=
has generic name (help) - ↑ 4.0 4.1 "Gumma Thanuja Rani, YSRCP Candidate from Araku Lok Sabha Election 2024 Seat: Electoral History & Political Journey, Winning or Losing - News18 Lok Sabha Election 2024 Result News". www.news18.com (in ஆங்கிலம்). Retrieved 2024-06-05.
- ↑ "Araku, Andhra Pradesh Lok Sabha Election Results 2024 Highlights: Gumma Thanuja Rani Wins the Seat by 50580 Votes". India Today (in ஆங்கிலம்). 2024-06-04. Retrieved 2024-06-05.
- ↑ https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S011.htm
- ↑ https://affidavit.eci.gov.in/CandidateCustomFilter?_token=mNzTVBX5iK8YCzsTMWLj7KL8Y7Aw37PTEmbVowZF&electionType=24-PC-GENERAL-1-46&election=24-PC-GENERAL-1-46&states=S01&constId=1&submitName=6&page=2
- ↑ "Former deputy collector to take on young doc in Araku LS constituency". The Times of India. 2024-04-02. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-8257. https://timesofindia.indiatimes.com/city/visakhapatnam/former-deputy-collector-to-take-on-young-doc-in-araku-ls-constituency/articleshow/108956815.cms.
- ↑ https://www.moneycontrol.com/elections/lok-sabha-election/andhra-pradesh/constituencies/araku-constituency-s01led2008p001/
- ↑ https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S011.htm