செட்டியாபத்து ஐந்துவீட்டு சுவாமி கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் உடன்குடி அருகே உள்ள செட்டியாபத்து ஐந்துவீட்டு சுவாமி கோவிலும் ஒன்றாகும். கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பூஜை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.

ஐந்து வீட்டு சுவாமி கோவில் திருத்தெய்வங்கள் ஸ்ரீ பெரியசுவாமி, ஸ்ரீ வயணபெருமாள், ஸ்ரீ அனந்தம்மாள், ஸ்ரீ ஆத்திசுவாமி, ஸ்ரீ திருப்புளி ஆழ்வார், ஸ்ரீ பெரியபிராட்டி, ஸ்ரீ ஹனுமான், ஸ்ரீ குதிரை சுவாமி


முன்பு ஒரு காலத்தில் இன்றைய ஆத்திகோவில், ஆதிகோவிலாக (பழைய) இருந்த பொழுது, மலையாள தேசத்திலிருந்து மந்திரவாதி ஒருவன் தினசரி ஆகாய மார்க்கமாக வந்து பூஜை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தான், ஒரு நாள் பெரியசுவாமிகள் கோயிலுக்கு சென்றார், அங்கே பூட்டப்பட்டிருந்த கோயில் கதவுகளின் மேல் தனது கையை வைத்தார் உடனே திறந்து கொண்டது, உள்ளே சென்ற சுவாமிகள் பூஜைகள் செய்துவ்ட்டு திரும்பினார், பிறகு கதவு தானே தாள் இட்டுக்கொண்டது, வழக்கம் போல பூஜை செய்ய வந்த மந்திரவாதி, கதவை திறந்து உள்ளே சென்றான் சாமிக்கு பூஜை செய்துள்ளதை பார்த்து பூட்டிய கதவுகள் அப்படியே இருக்க யார் உள்ளே வந்திருக்க முடியும் என மந்திரவாதி குழம்பினான், கோயில் அருகில் தங்கி இருந்த பெரியசாமிகளிடம் சென்று பூஜை செய்தது யார் எனகேட்டான் அதற்கு சாமிகள் நான் தான் என்பதை ஒப்புக்கொண்டார், மந்திரவாதி இனிமேல் இந்தமாதிரி பூஜை செய்யக்கூடாது என மிரட்டிவிட்டு சென்றான்.


        மறுநாள் பூஜை செய்ய மந்திரவாதி வந்தான், முதல் நாள் போலவே பூஜை நடந்திருப்பதை பார்த்தவன், கோபம் அடைந்து சாமிகளிடம் சென்று நேற்றே நீ பூஜை செய்யக்கூடாது என கூறினேன் பின்பும் ஏன் பூஜை செய்தாய் என கேட்டான் அதற்க்கு சாமிகள் கோவில் திறந்து இருந்தது நான் பூஜை செய்தேன் நீ கோவிலை நன்றாக பூட்டிசெல் என அமைதியாக கூறினார். சுவாமிகளின் பதிலை கேட்ட மந்திரவாதி கோவிலுக்கு சென்று கதவை நன்றாக சாத்தி வலுவாக பூட்டி சரிபார்த்து சென்றான். மறுநாள் வந்தான் கோயில் திறந்து பூஜை செய்திருந்தது கண்டான் கடும் கோபம் கொண்டு சாமிகளிடம் சென்று நீ இந்த இடத்தை விட்டு சென்று விடு இல்லாவிட்டால் நீ கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டும் என கூறி வாக்குவாதம் செய்தான், அதற்க்கு சாமிகள் நான் பூஜை செய்த முறைகள் தவறா? அல்லது திறந்திருந்த கோவிலில் பூஜை செய்தது தவறா ? இதில் எதுவும் தவறில்லை எனவே எனக்கு எந்த தீங்கும் நேராது என்றார், இதைக்கேட்ட மந்திரவாதி கோபமுற்று சாமிகளை பழி வாங்க வேண்டுமென தீர்மாணம் செய்து தனது குருவிடம் நடந்ததை கூறி, சுவாமிகள் மீது ஏவல் பூஜை செய்து அவரை கொல்லுமாறு பூதம் ஒன்றை ஏவினர், சாமிகள் தன்னை கொல்ல வந்த பூதத்தை பார்த்து சாந்தி என சொல்லவும், அந்த பூதம் சாமிகளின் காலடியில் அமைதியாக மண்டியிட்டு அமர்ந்தது விட்டது, சென்ற பூதம் திரும்பி வராததால் மந்திரவாதி மற்றுமொரு கொடுமையான பூதத்தை பழிவாங்க அனுப்பி வைத்தான் அந்த பூதமும் சாமிகள் சாந்தி என சொல்ல அமைதியாகிவிட்டது,
          அனுப்பிய பூதங்கள் செயலற்று போனதால் மந்திரவாதி மிக கோபம் கொண்டு யாராலும் வெல்ல முடியாது என கருதப்படும் ருத்ரபூதத்தை அனுப்பி வைத்தான், ருத்ர பூதம் சாமிகளை கொல்ல விண்ணுக்கும் மண்ணுக்கும் தீப்பிழம்பாய் கொடுரமாக சென்று சாமிகளை நெருங்கியது சாமிகள் சாந்தி என்றார் ஆனாலும் பூதம் அடங்கவில்லை மேலும் தீவிரமாகியது அதைக்கண்ட சாமிகள் பதறினார் உடனே அன்னையை (மீனாட்சியம்மன் அதாவது பெரிய பிராட்டி )நினைத்து வணங்கினார் உடனே அவ்விடம் வந்த அன்னை மிகவும் பலம் வாய்ந்த அந்த பூதத்தை பார்த்து ஆற்றி இரு (அதாவது ஆத்தி இரு அல்லது ஆறுதலாக இரு) என கட்டளை இட்டார் பூதம் சற்று அமைதியானது, பூதத்தை பார்த்து அன்னை நீ வந்த காரணமென்ன ? என்று வினாவினார் அதற்க்கு ருத்ரபூதம் அருகில் இருந்த சுவாமிகளை காட்டி இவரை கொன்று வர எனக்கு உத்தரவு இடப்பட்டுள்ளது எனக்கூறி இவர் தங்களின் பக்தன் என எனக்கு தெரியாது, தெரிந்திருந்தால் நான் வந்திருக்கவேமாட்டேன் எனக்கூறி மன்னிப்பு கோரியது. அன்னை கருணையுடன் பூதத்தை மன்னித்து நீ இங்கேயே கோவிலில் ஆத்தி இரு உனக்கு இரு வகை படையல் உண்டு என அருளினார், ருத்ரபூதமும் அன்னையை வணங்கி அப்படியே ஏற்றுக்கொண்டு, தான் இப்பொழுது எழும்பியதால் எப்படியும் நரபலி கொள்ளவேண்டும் அதற்க்கு நான் என்ன செய்ய வேண்டும் என கேட்க, அன்னை உன்னை அனுப்பியவனையே பலி கொள்ளுமாறு சொல்ல தன்னை அனுப்பிய மந்திரவாதியை நரபலி கொண்டு அமைதியாகியது, பின்னர் அன்னையிடம் கொடுத்த வாக்கின் படி இங்கு வந்து அமர்ந்தது, அன்னையின் வாக்குபடி ஆத்தி கோயிலில் மற்ற பணிவிடைகளோடு மச்ச பணிவிடையும் கீரிச்சுட்டான் பணிவிடையும் சேர்த்து கொடுக்கப்பட்டு வருகிறது 
பெரிய கோவிலின் உள்ளே எல்லா சாமிகளுக்கும் தனி தனி கோவில்கள் உள்ளன. 

இங்கு நடக்கும் சித்திரை பூசை கூட்டம் ரொம்ப விசேஷம். லட்சகணக்கில் மக்கள் வருகிறார்கள்.


வரலாறு II

அருள்மிகு ஐந்துவீட்டுசுவாமி திருக்கோயில் வரலாறு


ஜாதி பேதமில்லாத கோவில்


பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலம் ஆலய வழிபாட்டு செலவுகளை பஞ்சபாண்டியர்கள் பகிர்ந்து அளித்ததாக வரலாறு உள்ளது. நாயக்கர்கள் படையெடுப்பின்போது, ஆலயத்தை தங்கள் வசப்படுத்திக் கொண்டனர். ”அன்னதானம்” என்ற சமபந்தி விருந்து இந்த ஆலயத்தின் ”தனிச்சிறப்பு” அன்னதான செலவுகளுக்கு பாண்டிய மன்னர்கள் பல சமூக மக்களிடமிருந்து வரியாக பொருள் பெற்றார்கள் . பரமன் குறிச்சியில் உள்ள வாதிரியார்கள் என்ற பட்டப் பெயர் கொண்ட நெசவாளர்கள் ”தறி இறை” எனவும்,வியாபாரிகள் ”அங்காடி பாட்டம்”எனவும், மணப்பாடு, ஆலந்தலை மீனவர்கள் “ஓடக்கூலி ” எனவும், மானாடு தேவர்கள் ” நாடு காவல் ” எனவும் , வெற்றிலை விளைவித்த பிட்சுவிளை,உடன்குடி நாடார்கள் ”இலை கூலம்” எனவும் ,நங்கை மொழி தேரியில் வாழ்ந்த குரவர்கள், குளுவர்கள் “விற்பிடி” எனவும்,ஆடு,மாடு,வளர்த்த குலசகரபட்டினம் கோனார்கள் ”இடைப்பாட்டம்”எனவும் வரி செலுத்தினார்கள், இந்த பொருளாதாரத்தைக்கொண்டு ஆலயம் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது

திருச்செந்தூருக்கு தென்மேற்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் உடன்குடியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது செட்டியாபத்து என்ற ஊர். இங்கு ஐந்துவீட்டு சுவாமி திருக்கோவில் எழிலுற அமையப்பெற்றுள்ளது. சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் ஒரே காம்பவுண்டுக்குள், 5 கட்டிடத்தில் சுவாமிகள் வீற்றிருப்பதால், இந்தக் கோவில் ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவில் என்று பெயர் பெற்றது. இந்த ஆலயத்தில் பெரிய சுவாமி (பெருமாள்) சன்னிதி, வயணப் பெருமாள் சன்னிதி, அனந்தம்மாள் சன்னிதி, ஆத்திசுவாமி சன்னிதி, திருப்புளி ஆழ்வார் சன்னிதி, பெரிய பிராட்டி சன்னிதி ஆகியவை உள்ளன. பெரிய சுவாமி திருக்கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பெரியசுவாமி சன்னிதியின் எதிர் புறம் மதுரையைச் சேர்ந்த பக்தர் ஒருவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆஞ்சநேயர் சன்னிதி அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் கோவில் மூலஸ்தானம் வரை சென்று சுவாமியை தொட்டு தரிசனம் செய்யலாம். ஜாதி, மத வேறுபாடின்றி எல்லோரும் மூலஸ்தானம் வரை சென்று வணங்குவதால், பிரிவினையை தவிர்க்கும் மனித ஒற்றுமையின் சிறப்பிடமாக இந்த தலம் விளங்குகிறது. சுவாமியை தரிசனம் செய்யும் பக்தர்கள், திருமணிக்கட்டியை பிரசாதமாக வாங்கி சென்று பயன்பெறுகிறார்கள். சிறப்பு மிக்க பிரார்த்தனை தலமான இந்த ஆலயத்தில் வினை மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள், தீராத பணிகளால் பாதிக்கப்பட்டவர்கள் வந்து தங்கள் குறைகள் நீங்கப்பெறுகின்றனர். இத்தலத்தில் விரதம் இருந்து தரிசனம் செய்பவர்களுக்கு தீராத வியாதிகள் தீரும். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு மக்கள் செல்வம் கிட்டும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. வேண்டுவோருக்கு வேண்டுபவை எல்லாம் கிடைக்கும் அற்புதத் தலம் இதுவாகும். குழந்தைப்பேறு மற்றும் சுகப்பிரசவம் வேண்டுவோர் இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் பெரியபிராட்டி அம்மனுக்கு வளையல் காணிக்கை செலுத்தினால் வேண்டியது நிறைவேறும். கால் உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஆத்தி சுவாமி கோவிலுக்கு நேர்த்திக்கடனாக செருப்பு மற்றும் கதாயுதம் காணிக்கை செலுத்துகின்றனர். இவ்வாறு பக்தர்கள் செலுத்தும் செருப்புகளை அணிந்ததின் அடையாளமாக, கோவிலில் உள்ள செருப்புகளில் ஆத்திசுவாமியின் கால்விரல்கள் பதிந்த தடங்களை இன்றும் காணலாம். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 18–ந் தேதி தொடங்கி 6 நாட்கள் வரை சித்திரை திருவிழாவும், தை மாதம் 5–ந் தேதி தொடங்கி 3 நாட்கள் தைத் திருவிழாவும் இங்கு விமரிசையாக நடைபெறும். அமாவாசை, பவுர்ணமி, திருக்கார்த்திகை ஆகிய விழாக்களும் வெகு விமரிசையாக நடத்தப்படுகின்றன. சித்திரைத் திருவிழாவின் இறுதி நாள் அன்று ஆலயத்தில் வழங்கப்படும் அன்னமுத்திரி என்ற பிரசாதம் மிகவும் மகிமை பெற்றதாக கருதப்படுகிறது. ஆலயத்தில் திருமணிக்கட்டியே பிரசாதமாக வழங்கப்படுகிறது. கோவிலில் முடி காணிக்கை செலுத்தியவர்கள் கூட, தலையில் சந்தனத்திற்குப் பதிலாக திருமணிக்கட்டியை குழைத்து தான் பூசிக் கொள்கின்றனர். இவ்வாலயம் வந்து வழிபடும் பக்தர்கள் பலரும் தங்கள் குழந்தைகளுக்கு திருமணி என்று பெயர் சூட்டியிருப்பதில் இருந்தே திருமணிக்கட்டி பிரசாதத்தின் மகிமையை நாம் உணர முடியும். இந்தக் கோவிலில் வேப்பமரம், ஆத்தி மரம் போன்ற மூலிகை விருட்சங்கள் இருக்கின்றன. ஆத்தி மர இலையை அரைத்து நீரில் கலந்து குடிப்பது பக்தர்களிடையே தொன்றுதொட்டு இருந்து வரும் பழக்கமாகும். கோவில் திருவிழாக்காலங்களில் பூசாரியானவர், அனைத்து சன்னிதிகளிலும் அஷ்டாட்சரம் என்னும் எட்டு எழுத்தை திருமணி கொண்டு யந்திரம் போட்டு வைத்துவிட்டு வந்து விடுவார். திருவிழா முடியும் வரை அந்தந்த சன்னிதிகளில் ஜாதி பேதமின்றி நியமிக்கப்பட்டு இருப்பவர்கள் பூஜை செய்து கொள்வார்கள். இது இன்றும் நடைமுறையில் இருந்து வருகிறது. ஆலய திருவிழாவின் போது ஐந்து வீட்டு சுவாமிகளுக்கு, ஆடு, கோழி, பன்றி போன்றவை பலியிடப்பட்டு படையல் போடப்படும்.

ஐந்து வீட்டு சுவாமி திருக்கோயில் செட்டியாபத்து-628 203 திருச்செந்தூர் தாலுகா தூத்துக்குடி மாவட்டம் தமிழ் நாடு இந்தியா தொலை பேசி எண்:04639-250630 IYNTHUVEETU SWAMY THIRUKKOVIL CHETTIYAPATHU- 628 203 THIRUCHENTHUR- TALUK THOOTHUKUDI- DISTRIC TAMILNADU-- INDIA PHONE-04639-250630

அருள்மிகு ஐந்து வீட்டுசுவாமி ஆலயம் செட்டிய பத்து பூஜை கால அட்டவனை காலசந்தி நடைதிறப்பு காலை 7.30 பூஜை ஆரம்பம் காலை 8.30 உச்சி காலை நடைதிறப்பு பகல் 11.00 பூஜை ஆரம்பம் பகல் 12.00 இராக்காலம் நடை திறப்பு மாலை 5.30 பூஜை ஆரம்பம் இரவு 7.00


இடம் : செட்டியாபத்து, உடன்குடி ஒன்றியம், தூத்துக்குடி மாவட்டம்.