உள்ளடக்கத்துக்குச் செல்

செட்டள்ளி

ஆள்கூறுகள்: 12°22′14″N 75°49′54″E / 12.37056°N 75.83164°E / 12.37056; 75.83164
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செட்டள்ளி
செட்டள்ளியல் உள்ள செம்பருத்தி மலர்
செட்டள்ளியல் உள்ள செம்பருத்தி மலர்
ஆள்கூறுகள்: 12°22′14″N 75°49′54″E / 12.37056°N 75.83164°E / 12.37056; 75.83164
இந்தியா இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்குடகு மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்7.14 km2 (2.76 sq mi)
ஏற்றம்
1,020 m (3,350 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,128
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீடு
571248

செட்டள்ளி (Chettalli) என்பது இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் உள்ள குடகு மாவட்டத்தில் சித்தபுராவிற்கு அருகிலுள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும்.

அஞ்சல் நிலையம்

[தொகு]

செட்டள்ளியில் ஓர் அஞ்சல் நிலையம் உள்ளது.[1] இதன் அஞ்சல் குறியீடு எண் 571 248 மற்றும் தொலைபேசி குறியீடு 08276 ஆகும்.

மத்திய தோட்டக்கலை பரிசோதனை நிலையம்

[தொகு]

இந்தியத் தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் செட்டள்ளியில் ஒரு மத்திய தோட்டக்கலை பரிசோதனை நிலையத்தை பராமரிக்கிறது. இந்நிலையம் ஆசியாவிலேயே மிகப்பெரிய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனமாகும்.[2] இங்கு அதிகமான ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடகு மாவட்டத்தின் கூர்க்கில் 92 எக்டேர் பரப்பளவில் குடகு ஆரஞ்சு பழம் பயிரிடப்படுகிறது. பப்பாளி, கொடித்தோடை, இறம்புட்டான், பம்புளிமாசு, ஆனைக்கொய்யா, மங்குசுத்தான், கிளா (தாவரம்), போன்ற பழ வகைகளும் உரோசா, ஆஸ்ட்டர், ஆர்க்கிட் போன்ற பூ வகைகளும் இங்கு பயிர் செய்யப்படுகின்றன.

காப்பி ஆராய்ச்சி மையம்

[தொகு]

செட்டள்ளியில் ஒரு காப்பி ஆராய்ச்சி மையம் செயல்படுகிறது. சாகுபடி முறைகள் மற்றும் காப்பியை தாக்கும் நோய்கள் பற்றியும் அந்நோய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் பல்வேறு ஆராய்ச்சிகளை இம்மையம் மேற்கொள்கிறது.

நிர்வாகம்

[தொகு]

குடகு மாவட்டத்தில் உள்ள குசால்நகர் வட்டத்தின் ஒரு பகுதியாக செட்டள்ளி நிர்வகிக்கப்படுகிறது.

சுற்றுலா

[தொகு]

செட்டள்ளி பகுதியில் காணப்படும் மலைகளை பார்வையிட தினமும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மேலும் இங்கு காணப்படும் சேரல பகவதி கோயில் மிகவும் புகழ் பெற்றதாகும்.

மக்கள் தொகையியல்

[தொகு]

2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி செட்டள்ளியின் மொத்த மக்கள் தொகை 1128 ஆக இருந்தது.

மாெழிகள்

[தொகு]

இங்குள்ள மக்கள் கன்னடம், குடகு மொழி, மற்றும் துளு அரேபாசே (கெளடா மக்கள்) போன்ற மொழிகளை பேசுகிறார்கள்.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Pin Code: CHETTALLI, KODAGU, KARNATAKA, India, Pincode.net.in". pincode.net.in.
  2. "Tourist Places Near Coorg | Sightseeing Nearby Coorg | Coorg Sightseeing". 19 August 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செட்டள்ளி&oldid=4369637" இலிருந்து மீள்விக்கப்பட்டது