உள்ளடக்கத்துக்குச் செல்

செஞ்செதில் தவிட்டுப்புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செஞ்செதில் தவிட்டுப்புறா
தென்னிந்தியாவில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
கொலும்பிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
சிரிடெப்டோபெலியா
இனம்:
சி. ஒரியலெண்டாலிசு
இருசொற் பெயரீடு
சிரிடெப்டோபெலியா ஒரியலெண்டாலிசு
(லாதம், 1790)
Range of S. orientalis     Breeding      Resident      Passage      Non-breeding

செஞ்செதில் தவிட்டுப்புறா[2] [Oriental turtle dove (Streptopelia orientalis)] என்பது கொலம்பிடே என்ற குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும்; ஐரோப்பாவின் சில பகுதிகள் தொடங்கி மத்திய ஆசியா, இந்தியத் துணைக்கண்டம் வழியாக தென்கிழக்கு ஆசியா[3] வரை காணப்படும் S. orientalis இனம், ஆறு உள்ளினங்களை உள்ளடக்கியது[4]. இதில் ஒரு உள்ளினமான S. o. erythrocephala மத்திய இந்தியப் பகுதிகளிலும் தென்னிந்தியாவில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் கிழக்குத் தொடர்ச்சி மலையின் வட பகுதியிலும் காணப்படுகிறது[5].

வகைபிரித்தல்[தொகு]

புவியியல் ரீதியாக இறகுகளில் சில மாறுபாட்டுடன் இந்த இனம் பரந்த அளவில் பரவியுள்ளது. இந்த மாறுபாடுகளால் இது குறைந்தது ஆறு கிளையினங்களாக பிரிக்கபட்ட காரணமாயிற்று. இதில் உள்ள ஆறு கிளையினங்கள் பின்வருமாறு:

 • western Oriental turtle dove (S. o. meena) (Sykes, 1832) – கிழக்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியா தெற்கே இமயமலை வரை அதாவது காஷ்மீர் முதல் நடு நேபாளம் வரை. குளிர்காலத்தில் இந்தியாவிலும் தென் இலங்கை வரையில் காணப்படுகிறது.
 • eastern Oriental turtle dove (S. o. orientalis) (Latham, 1790) – நடு சைபீரியா முதல் யப்பான் மற்றும் கொரியா வரையும், தெற்கே இமயமலை வரை அஸ்ஸாம் முதல் யுனான் மற்றும் வடக்கு வியட்நாம் வரை. குளிர்காலத்தில் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகிறது.
 • S. o. stimpsoni (Stejneger, 1887) – யூகியூ தீவுகள்
 • S. o. orii Yamashina, 1932 – தைவான்
 • தென்னிந்தியப் புதுப்பானைக் கள்ளிப் புறா S. o. erythrocephala (Bonaparte, 1855) – தீபகற்ப தென்னிந்தியா. இந்த கிளையினம் மற்ற கிளையினங்களைப் போலல்லாமல், நெற்றியில் அல்லது உச்சியில் சாம்பல் நிறமற்று தலையில் சிவப்பு-பழுப்பு நிறமாக இருக்கும். இறக்கை அடி போர்வை இறகுகள் மற்றும் வால் முனை பட்டை ஆகியவை சிலேட் சாம்பல் நிறத்தில் இருக்கும்.[6]
 • S. o. agricola (Tickell, 1833) – ஒரிசா மற்றும் வங்காளத்திலிருந்து வடகிழக்கு இந்தியா மற்றும் மியான்மருக்கு தெற்கே ஹைனான் வரை

உடலமைப்பும் கள அடையாளங்களும்[தொகு]

மணிப்புறாவை விட சற்றுப் பெரிய புறா (நீளம் = 33 செமீ). செதில் போன்ற தோற்றமளிக்கும் மேற்பகுதியுடன் கழுத்தின் பக்கத்தில் நான்கைந்து கருப்புக் கீற்றுகள் கொண்டிருக்கும்; நல்ல செம்பழுப்பு நிறமும் குண்டான தோற்றமும் மணிப்புறாவிலிருந்து இதை வேறுபடுத்த உதவும்[7].

மேலக்காடு புலிகள் காப்பகத்தில் செஞ்செதில் தவிட்டுப்புறா (S. orientalis erythrocephala)

பரவல்[8][தொகு]

இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் நாடுகள். இந்தியா, இலங்கை, நேபாளம், பூட்டான், மியான்மர், தாய்லாந்து, வியட்நாம், வட கொரியா, தென் கொரியா, ஜப்பான்

மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பா. மங்கோலியா, கசகஸ்தான், ஆப்கானிஸ்தான், கிருகிஸ்தான், தஜிகிஸ்தான், வடக்கு பாகிஸ்தான், ரஷ்யா

வாழிடம்[தொகு]

ஊசியிலைக்காடுகளிலிருந்து வெப்பமண்டலக் காடுகள் வரை பலதரப்பட்ட பகுதிகள்; காடுகளின் எல்லைகளிலும் புதர், மரங்கள் நிறைந்த வயல்வெளிகளிலும் இவை காணப்படும். காஷ்மீரில் பர்ச்சு, நெட்டிலிங்க மரங்களுடன் கலந்த பைன் காட்டுப்பகுதியிலும் அதனையொட்டிய புல்வெளிப் பகுதிகளிலும் இனப்பெருக்கம் செய்கின்றன[9].

மேற்கோள்கள்[தொகு]

 1. BirdLife International (2016). "Streptopelia orientalis". IUCN Red List of Threatened Species 2016: e.T22690439A93273750. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22690439A93273750.en. https://www.iucnredlist.org/species/22690439/93273750. பார்த்த நாள்: 13 November 2021. 
 2. கிரமிட் & பலர் (2005). தென் இந்திய பறவைகள். பக். 86:4. பி. என். எச். எஸ்.
 3. "ebird -- Range Map". ebird.org. பார்க்கப்பட்ட நாள் 02 June 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help)
 4. "Birds of India|Birds of World". பார்க்கப்பட்ட நாள் 02 June 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help)
 5. "birds of the world -- Oriental Turtle-Dove -- Subspecies". birdsoftheworld.org/. பார்க்கப்பட்ட நாள் 02 June 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help)
 6. Ali, Salim; Ripley, S. Dillon (1981). Handbook of the Birds of India and Pakistan. Volume 3. Stone curlews to owls (2 ed.). Delhi: Oxford University Press. pp. 142–146.
 7. Ali. S, Ripley. S.D. (1972). Handbook of the Birds of India and Pakistan (Vol. 3). p. 144. OUP
 8. "Oriental turtle dove -- Origin, geographical range and distribution". indianbirds.thedynamicnature.com. பார்க்கப்பட்ட நாள் 03 சூன் 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help)
 9. "Habitat". birdsoftheworld.org. பார்க்கப்பட்ட நாள் 03 சூன் 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help)