செஞ்சி கமலக்கண்ணியம்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செஞ்சி கமலக்கண்ணியம்மன் இது சீற்றதெய்வமாகும். எனவே ஊர்மக்கள் ஊருக்கு வெளியே வைத்து வழிபடுகின்றனர்.

அமைவிடம்[தொகு]

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்தில் செஞசி கோட்டை உள்ளது. அக்கோட்டைக்கு மேலே ஏறும்போது நடுவழியில் கமலக்கண்ணியம்மன் கோயில் உள்ளது.

சிலையமைப்பு[தொகு]

வலதுகையில் சக்கரமும் இடதுகையில் சங்கும் ஏந்தி, நின்ற கோலத்தில் முழு உருவ கற்சிலை உள்ளது.

கோயில் அமைப்பு[தொகு]

நாற்சதுர "சிறுமண்டபக் கோயில்" அமைந்துள்ளது. இக்கோயில் கருங்கல், சிமெண்டால் உருவாக்கப்பட்டுள்ளது. கோயில் எதிரில் எருமைத்தலை வடிவில் கற்சிலை பலிபீடமாக அமைக்கப்பட்டுள்ளது.

வழிபடுவோர்[தொகு]

செஞ்சிப் பகுதி மக்கள் மட்டுமின்றி, செஞசி கோட்டையைக் காணவரும் வெளியூர், வெளிநாட்டு மக்களும் இவ்வம்மனை வழிபட்டுச் செல்கின்றனர். இவ்வம்மன் நெல்லை மாவட்டத்திலும் வழிபடப்படுகிறது.

[[துணை நுால்:பெண்ணிய நோக்கில் செஞ்சி நாட்டுபடபுற அம்மன் தெய்வங்கள், ஜோதிராஜன் பதிப்பகம், ஓசூர், 2008.]] [[பார்வை நுால்: துளசி.இராமசாமி,நெல்லை மாவட்ட நாட்டுப்புறத்தெய்வங்கள், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1985. கணபதிராமன்,ச.திருநெல்வேலிப் பகுதியில் சிறுதெய்வ வழிபாடு, திருமகல் நுாலகம், துாத்துக்குடி,1986.]]