உள்ளடக்கத்துக்குச் செல்

செச்சில் ஏவுகணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Sejil
வகைநடுத்தர திடஎரிபொருள் ஏவுகணை
அமைக்கப்பட்ட நாடுஈரான்
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது2014 ஆம் ஆண்டு முதல் பயனாகிறது
பயன் படுத்தியவர்ஈரான்
உற்பத்தி வரலாறு
தயாரிப்பாளர்ஈரான்
ஓரலகுக்கான செலவு$500,000 [சான்று தேவை]
அளவீடுகள்
எடை22.5 டன்கள்[1]
நீளம்18.2மீட்டர்[1]
விட்டம்1.25 மீட்டர் [1]
போர்க்கலன் எடை500–1,500 kg[2]

உந்துபொருள்திட எரிபொருள்
இயங்கு தூரம்
2,000[3]–2,500 கி.மீ[1] [4]
துல்லியம்to 50மீட்டர்
ஏவு
தளம்
நகரும் ஏவுகணை வகை[5]

செச்சில், அல்லது செஜில், (பாரசீக மொழி: سجیل,) என்பது ஈரானிய திட எரிபொருள் கொண்ட நடுத்தர தூரம் பாயும் ஏவுகணை ஆகும். செச்சில் என்பது திரவ எரிபொருள் கொண்ட பாலிசுடிக் ஏவுகணைகளுக்கு மாற்றாகும். அமெரிக்க பென்டகன் ஆதாரங்களின்படி, செச்சிலின் ஏவுகணை விவரக்குறிப்பு ஆஷுரா, கத்ர்-110 மற்றும் சாமென் ஆகியவற்றுடன் நெருக்கமாக பொருந்துகிறது.[5]

வடிவமைப்பு

[தொகு]

1990 களின் பிற்பகுதியில் செச்சில் ஏவுகணையின் கட்டமைப்புத் தொடங்கியது, முந்தைய ஏவுகணைத் திட்டங்களிலிருந்து ஈரானின் திரட்டப்பட்ட அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட திட்டமே இதன் கட்டமைப்பு ஆகும். உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர தூர பாயும் ஏவுகணை ஆகும். இந்த ஏவுகணை இரண்டு நிலைகளைக் கொண்டதுடன், திண்ம எரிபொருளைப் பயன்படுத்தி இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 2,000 கிலோமீட்டர் தொலைவு வரை சென்று தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணை, மத்திய கிழக்கு நாடுகள் முழுவதிலும் உள்ள இலக்குகளைத் துல்லியமாக அழிக்க வல்லது.[6][7][8]

தொழில்நுட்பம்

[தொகு]

செஜ்ஜில் ஏவுகணை சுமார் 18 மீட்டர் நீளமும், 1.25 மீட்டர் விட்டமும் கொண்டது. இதன் மொத்த எடை தோராயமாக 23,600 கிலோகிராம் ஆகும், மேலும் இது 700 கிலோகிராம் எடையுள்ள வெடிபொருட்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது. திரவ எரிபொருளைப் பயன்படுத்தும் முந்தைய ஷஹாப் (Shahab) ஏவுகணைகளை விட, திண்ம எரிபொருளைக் கொண்டுள்ளதால் இதனை மிக விரைவாக ஏவ முடியும்.

நடனமாடும் ஏவுகணை

[தொகு]

பறக்கும் போது தனது பாதையை மாற்றியமைத்துச் செல்லும் தனித்துவமான திறனை இது கொண்டுள்ளதால், பாதுகாப்பு வல்லுநர்களால் இது "நடனமாடும் ஏவுகணை" (Dancing Missile) என்று அழைக்கப்படுகிறது. வழக்கமான பாலிஸ்டிக் ஏவுகணைகள் போல கணிக்கக்கூடிய பாதையில் பயணிக்காமல், இது நடுவானில் தனது திசையை மாற்றிக்கொள்கிறது. இத்தகைய சூழ்ச்சித் திறனால், எதிரிகளின் ரேடார் அமைப்புகளாலும் வான் பாதுகாப்பு அமைப்புகளாலும் இதனை இடைமறித்து அழிப்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.

போர் பயன்பாடு

[தொகு]

ஈரான் தனது செச்சில் ஏவுகணையின் முதல் சோதனையை 2008 ஆம் ஆண்டில் வெற்றிகரமாக நடத்தியது. சமீபத்தில் நடைபெற்று வரும் மோதல்களில், இசுரேல் - அமெரிக்க இலக்குகளைத் தாக்க, ஈரான் இந்த ஏவுகணையை முதன்முறையாகப் யன்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.[9] ஈரானின் ஏவுகணைத் தொழில்நுட்ப வளர்ச்சியிலும், பிராந்திய ராணுவ வலிமையிலும் செஜ்ஜில் ஏவுகணை ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Theodore Postol (31 May 2009). The Sejil Ballistic Missile (PDF) (Report). Massachusetts Institute of Technology. Archived from the original on 3 February 2013. Retrieved 14 September 2012.
  2. "Sejjil | Missile Threat | CSIS Missile Defense Project". Missile Threat.
  3. BALLISTIC AND CRUISE MISSILE THREAT nasic.af.mil
  4. Sajjil/Ghadr-110 globalsecurity.org
  5. 5.0 5.1 "Iran Tests Second Solid-Fuelled Sejil Missile, Capable of 2,900 km". Defense Update. 2009-05-20 இம் மூலத்தில் இருந்து 2009-05-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090523154250/http://www.defense-update.com/newscast/0509/news/sejjil_test_200509.html. 
  6. "Sejjil". Missile Threat. Center for Strategic and International Studies. Retrieved 2026-03-17.
  7. "Sejjil Missile, Country, Speed, Impact, Range, Latest News". Vajiram & Ravi. Retrieved 2026-03-17.
  8. "Iran Deploys Sejjil Ballistic Missile in Ongoing West Asia Conflict". GKToday. Retrieved 2026-03-17.
  9. 7 நிமிடங்களில் 2,000 கிமீ பாயும்: இஸ்ரேல் மீது இரான் ஏவிய செஜில் ஏவுகணை எவ்வளவு சக்தி வாய்ந்தது?
"https://ta.wikipedia.org/w/index.php?title=செச்சில்_ஏவுகணை&oldid=4491434" இலிருந்து மீள்விக்கப்பட்டது