செசசத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(செசெஷெட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

செசெசெட் அரசி (Queen Sesheshet, ஐபிஏ: sɘʃɘsɐʈ) என்பவள் பண்டைய எகிப்தின் ஆறாம் வம்சத்தின் முதலாவது பார்வோனும் தேத்தியின் தாயாரும் ஆவார். அரச வம்சத்தின் இரு பிரிவுகளிடையே இருந்த பிளவை சீர்ப்படுத்தி தனது மகன் தேத்தியை எகிப்தின் பார்வோனாக கொண்டுவந்ததில் இவளுக்கு முக்கிய பங்கு உள்ளது[1]. இவளது மகனுடன் ஆரம்பிக்கும் எகிப்தின் வரலாற்றில், பழைய எகிப்திய இராச்சியத்தின் ஒரு பகுதியாக இப்போதைய வரலாற்றாய்வாளர்கள் வகுத்துள்ளார்கள்.

2008 ஆம் ஆண்டு வரையில், ஆறாவது வம்சத்தினரில் செசெஷெட்டின் பிரமிது மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை[2]. இவ்வாண்டில் செசெஷெட்டின் பிரமிது எனக்கருதப்படும் பிரமிதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்[3].

கண்டுபிடிப்பு[தொகு]

2008, நவம்பர் 8 இல் எகிப்தின் தொல்லியல் ஆய்வாளர், சாஹி ஹவாஸ், சக்காரா என்ற இடத்தில் 4.300 ஆண்டுகள் பழமையான செசெஷெட்டின் 5 மீட்டர் உயர பிரமிட் ஒன்றைத் தமது குழுவினர் கண்டுபிடித்திருப்பதாக அறிவித்தார்[4]. இந்த சமாதி எகிப்தில் இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட பண்டைய பிரமிதுகளில் 118 ஆவது ஆகும்.

எகிப்திய பெண் அரசிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செசசத்து&oldid=3555484" இருந்து மீள்விக்கப்பட்டது