செங் ஹே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
செங் ஹே
மலேசியா, மலாக்கா மாநகரத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ள செங் கேயின் சிலை
பிறப்பு 1371
யுன்னான், சீனா
இறப்பு 1433
பணி ஆசிய பயணி
பட்டம் பெருங்கடலின் கடற்படை அதிகாரி

செங் ஹே (1371–1433) ஒரு ஹூயி இனச் சீனக் கடலோடியும், நாடுகாண் பயணியும், இரஜதந்திரியும், கப்பல் தலைவரும் ஆவார். இவரது பயணங்கள் அனைத்தும் கூட்டாக மேற்குப் பெருங்கடலுக்கு செங் ஹே என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. இப் பயணங்கள் 1405 தொடக்கம் 1433 ஆண்டுவரை இடம் பெற்றவையாகும்.

வாழ்க்கை[தொகு]

செங் ஹே 1371 ஆம் ஆண்டு, மிங் வம்சத்தினருடனான போரில், யுவான் வம்சத்தினரின் இறுதிக் கோட்டையாக விளங்கிய இன்றைய யுனான் மாகாணத்தில் பிறந்தார். பெரும்பாலான ஹுயி மக்களைப்போலவே செங் ஹேயும் ஒரு முஸ்லிம் ஆவார். மிங் வரலாற்றின்படி, இவருடைய உண்மையான பெயர் "மா சன்பாவோ" என்பதுடன், இவருடைய இடம் குன்யாங் எனப்பட்ட இன்றைய ஜின்னிங்கும் ஆகும். இவர் சாமு எனப்படும் சாதியைச் சேர்ந்தவர்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்_ஹே&oldid=2226716" இருந்து மீள்விக்கப்பட்டது