செங்குத்து பாரா காந்தப் பிணைப்பு
செங்குத்து பாரா காந்தப் பிணைப்பு (Perpendicular Paramagnetic bond) என்பது சாதாரண வளிமண்டல நிலைமைகளின் கீழ் காணப்படாத ஓர் அசாதரண வகையான வேதியியல் பிணைப்பு ஆகும்.[1] மிக அதிகமான காந்த வெளிகளில் மட்டுமே இவ்வேதியியல் பிணைப்பு உருவாகிறது. பொதுவாக, அணுக்கள் மற்றும் மூலக்கூறுகள் காந்த வெளியில் இணை நிலையில் இருப்பது இயல்பாகும். ஆனால் மிக வலுவான காந்தப் புலங்களில் மூலக்கூறுகள் இணை நிலைக்குப் பதிலாக செங்குத்து நிலைக்குத் திரும்புகின்றன. வெண் குறுமீன் போன்ற விண்மீன்களில் 105 டெசுலா என்ற மிக வலுவான காந்தப்புலம் இருப்பதால் திரும்பும் மூலக்கூறுகளின் எலக்ட்ரான்கள் இடையே ஒரு கவர்ச்சி விசை தோன்றும் என்றும், இவ்விசையே செங்குத்து பாரா காந்தப் பிணைப்பு என்றும் கருதப்பட்டது.[2] மிகவும் வலுவான காந்தப்புலத்தில், மூலக்கூறுகளில் உள்ள கிளர்வடைந்த எலக்ட்ரான்கள் நிலைப்படுத்தப்படுகின்றன. , இதனால் இந்த மூலக்கூறுகள் காந்தப்புலத்திற்கு இணையாக இருப்பதை கைவிட்டு அதற்கு செங்குத்தாக அமைந்திருக்கின்றன.[3] பொதுவாக ஒரு வெண்குறுமீன் நட்சத்திரத்திற்கு அருகில் உள்ள தீவிர வெப்பநிலையில், மிகவும் பொதுவான மூலக்கூறு பிணைப்புகள் உருவாக முடியாது. மாறாக ஏற்கனவே உள்ளவையும் சிதைவடைகின்றன.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lange, K. K.; Tellgren, E. I.; Hoffmann, M. R.; Helgaker, T. (19 July 2012). "A Paramagnetic Bonding Mechanism for Diatomics in Strong Magnetic Fields". Science 337 (6092): 327–331. doi:10.1126/science.1219703. பப்மெட்:22822146. Bibcode: 2012Sci...337..327L.
- ↑ 2.0 2.1 Yirka, Bob (July 202012). "Chemists discover new type of molecular bond near white dwarf stars". phys.org (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2018-12-24.
{{cite web}}: Check date values in:|date=(help) - ↑ Merali, Zeeya (19 July 2012). "Magnetic fields boost atoms' bonding skills". Nature. doi:10.1038/nature.2012.11045 இம் மூலத்தில் இருந்து 20 July 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120720200709/http://www.nature.com/news/stars-draw-atoms-closer-together-1.11045.