செங்குத்து அச்சுத் தேற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தளம் போன்ற, மெல்லிய பொருள்களுக்கு செங்குத்து அச்சுத் தேற்றம் அல்லது செங்குத்து அச்சு விதி (Perpendicular axis theorem) பொருந்தும். தளப்பொருள்களுக்கு மட்டுமின்றி உருளை போன்ற முப்பரிமாணப் பொருள்களுக்கும் இத்தேற்றத்தைப் பயன்படுத்தலாம்.

கூற்று[தொகு]

இத்தேற்றத்தின் படி, பொருளின் தளத்திற்கு செங்குத்தான திசையில் உள்ள அச்சினைப் பொறுத்த நிலைமத் திருப்புத்திறனானது அந்த தளத்தின் மீது அமைந்த, ஒன்றுக்கொன்று செங்குத்தான இரு அச்சுகளைப் பற்றிய நிலைமைத் திருப்புத்திறன்களின் கூடுதலுக்கு சமமாகும். இங்கு குறிப்பிட்டுள்ள மூன்று அச்சுகளும் ஒன்றுக்கொன்று செங்குத்தாகவும் ஒரே புள்ளியில் சந்திக்குமாறும் அமைந்திருக்கும்.

விளக்கம்[தொகு]

XY-தளத்தில் அமைந்த மெல்லிய பொருளொன்றைக் கருதவும். புள்ளி O வழியே செல்லும் X, Y மற்றும் Z அச்சைப் பற்றிய நிலைமத் திருப்புத்திறன்கள் முறையே Ix, Iy மற்றும் Iz என வைத்துக் கொண்டால் செங்குத்து அச்சுத் தேற்றத்தின் படி,[1]


சான்றுகள்[தொகு]