செங்கிஸ் கானின் வழித்தோன்றல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செங்கிஸ் கானின் வழித்தோன்றல்கள் (The Successors of Genghis Khan) என்பது ஒரு வரலாற்று நூல் ஆகும். இதை ரசீத்தல்தீன் அமாதானி என்பவர் பாரசீக மொழியில் எழுதிய ஜமி அல் தவரிக் என்ற நூலில் இருந்து யோவான் ஆன்ட்ரூ பாய்ல் என்ற ஆங்கிலேயர் 1971ஆம் ஆண்டு ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தார். இந்நூல் துருக்கிய மற்றும் மங்கோலியப் பழங்குடிகள், செங்கிஸ் கான் மற்றும் அவரது முன்னோர்கள், செங்கிஸ் கானின் வழித்தோன்றல்கள், மற்றும் இறுதியாக பாரசீகத்தின் ஈல்கான்கள் ஆகியோரைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அக்காலத்தில் வாழ்ந்தவர்கள் மற்றும் அக்கால நூல்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இது எழுதப்பட்டது. எனினும் இதை எழுதப் பயன்பட்ட அக்கால நூல்கள் தற்போது அழிந்துவிட்டன. இந்நூல் எட்டு பகுதிகளைக் கொண்டுள்ளது.[1]

உசாத்துணை[தொகு]