உள்ளடக்கத்துக்குச் செல்

செங்கலம் சிறுகண் காலிலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செங்கலம் சிறுகண் காலிலி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
இக்தியோபிடே
பேரினம்:
இனம்:
யூ. இன்டரப்டசு
இருசொற் பெயரீடு
யூரியோதைப்ளசு இன்டரப்டசு
சேசாச்சர், 1939

யூரியோதைப்ளசு இன்டரப்டசு (Uraeotyphlus interruptus) என்பது பொதுவாக செங்கலம் சிறுகண் காலிலி என்று அழைக்கப்படுகிறது. இது இக்தியோபிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுகண் காலிலி சிற்றினம் ஆகும். இது தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி ஆகும். மேலும் இது கேரளத்தில் உள்ள செங்கலம் கிராமம் எனும் இதன் மாதிரியமைவிடத்திலிருந்து மட்டுமே அறியப்படுகிறது.[2]

விளக்கம்

[தொகு]

யூரியோதைப்ளசு இன்டரப்டசு என்பது இடைப்பட்ட அளவுடைய ஒரு சிறுகண் காலிலி ஆகும். இதன் நீளம் 185 mm (7.3 அங்) இருக்கும். இதன் உடலில் 162 மடிப்புகள் (வளையங்கள்) காணப்படுகின்றன. முதன்மை வளையங்கள் உடலின் பிற்பகுதியில் மட்டுமே முதுகைக் கடக்கின்றன; அடிவயிற்றுப் பகுதியில் கழிவுத் துளைக்கு முன்பகுதியில் மட்டுமே கடக்கின்றன. இதன் கழுத்துப் பட்டை பகுதி தலைப்பகுதியை விட சற்று அகலமானது. இரண்டு கழுத்துப் பட்டைகளும் முதுகுப்புறத்தில் முழுமையாக இணைந்தும், வயிற்றுப்புறத்தில் தனித்தனியாகப் பிரிந்தும் காணப்படுகின்றன. இதன் கண்கள் தெளிவாகத் தெரியக்கூடியவை. கீழ்நோக்கிய உணர்நீட்சி மூக்குத்துளைக்குக் கீழே அமைந்துள்ளது. இதன் உடலின் மேற்பகுதி அடர் ஊதா நிறத்திலும், கீழ்ப்பகுதி சற்று வெளிர் நிறத்திலும் இருக்கும். உடலின் வளையங்கள் வெள்ளைக் கோடுகளால் குறிக்கப்பட்டுள்ளன. இவை உடலின் பிற்பகுதியில் அடிவயிற்றின் கீழ் மூன்றில் ஒரு பகுதியில் மிகவும் தெளிவாகத் தெரிகின்றன.[3]

வாழிடமும் பாதுகாப்பும்

[தொகு]

யூரியோதைப்ளசு இன்டரப்டசு என்பது தளர்வான மண்ணோடு தொடர்புடைய நிலத்தடியில் வாழும் சிற்றினமாகும். கடல் மட்டத்திலிருந்து 400 m (1,300 அடி) உயரத்தில் உள்ள ஒரு இரப்பர் தோட்டத்தில் இதற்கான மாதிரிச் சேகரிக்கப்பட்டது. வழக்கமாக இச்சிற்றினத்தின் இயற்கை வாழிடம் ஈரப்பதம் நிறைந்த பசுமைமாறாக் காடுகளாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இது நிலத்தில் முட்டையிட்டு, நீரிலுள்ள சிற்றோடைகளில் வாழும் இளம் உயிரிகளைக் கொண்ட முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் நீர்நில வாழும் உயிரியாகக் கருதப்படுகிறது.[1]

இச்சிற்றினத்திற்கு ஏற்படும் குறிப்பிட்ட அச்சுறுத்தல்கள் எதுவும் அறியப்படவில்லை. இருப்பினுனும், இது சூழலுக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் திறன் கொண்டதாகத் தெரிவதால், வாழிட மாற்றங்களால் கணிசமான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளாமல் இருக்கலாம். இது எந்தவொரு பாதுகாக்கப்பட்ட பகுதியிலும் வாழ்வதாகப் பதிவாகவில்லை.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 Sushil Dutta, Gopalakrishna Bhatta, David Gower, Mark Wilkinson, Oommen V. Oommen (2004). "Uraeotyphlus interruptus". IUCN Red List of Threatened Species 2004. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T59654A11976510.en. https://www.iucnredlist.org/species/59654/11976510. பார்த்த நாள்: 20 November 2021.
  2. Frost, Darrel R. (2019). "Uraeotyphlus interruptus Pillai and Ravichandran, 1999". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. Retrieved 31 August 2019.
  3. Venkataraman, K.; Chattopadhyay, A. & Subramanian, K.A., eds. (2013). Endemic Animals of India (Vertebrates). Kolkata: Zoological Survey of India. 235 pp.+26 plates. [Uraeotyphlus interruptus: p. 136]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Uraeotyphlus interruptus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்கலம்_சிறுகண்_காலிலி&oldid=4636047" இலிருந்து மீள்விக்கப்பட்டது