செங்கற்பட்டுச் சிறுமணி
| செங்கற்பட்டுச் சிறுமணி |
|---|
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| வகை |
| பாரம்பரிய நெல் வகை |
| காலம் |
| 160 - 165 நாட்கள்[1] |
| மகசூல் |
| எக்டேருக்கு சுமார் 1,800 கிலோ |
| தோற்றம் |
| பண்டைய நெல் வகை |
| மாநிலம் |
| தமிழ் நாடு |
| நாடு |
செங்கற்பட்டுச் சிறுமணி (Chengalpattu Sirumani) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகையாகும். தென்னிந்திய உணவு வகைகளான சோறு மற்றும் தட்டை வடிவத்தில் தயார் செய்து பயன்படுத்தும் அவல்[2] எனப்படும் இந்திய நொறுக்குத்தீனி வகைக்கும் ஏற்ற இரகமாக உள்ள இதன் தானியம் தடித்தும், (மோட்டா இரகம்) அரிசி வெள்ளை நிறத்திலும் காணப்படுகிறது.[1]மேலும் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின் செங்கல்பட்டு பகுதியை பூர்வீகமாகக் கொண்டது என கூறப்படுகிறது.[2]
காலம்
[தொகு]நீண்ட கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 160 - 165 நாட்களில் முதிர்வடைவதாக கூறப்படுகிறது. சம்பா பருவத்தில் நடவு செய்யக்கூடிய இந்நெல் இரகம், நாற்றங்கால் வயது 40 - 45 நாட்களாக உள்ளது.[1]
சாகுபடி
[தொகு]நாற்று விட்டு நடவு முறையில் சாகுபடி செய்யப்படும் இது, களிமண் மணல் கலந்த களிமண், மற்றும் வண்டல் மண் போன்ற நிலங்களில் பயிரிட ஏற்றதாக கூறப்படுகிறது. மேலும் நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கு ஏற்ற இரகமாக உள்ள இந்நெல் இரகம், முதிர்ந்த நிலையில் மிதமாக சாய்ந்துவிடக்கூடியதாகும்.[1]
மகசூல்
[தொகு]சராசரியாக 125 சதமமீட்டர் உயரமும், அதிகபட்சமாக 148 சதமமீட்டர் உயரமும் வளரக்கூடிய இந்த இரக நெற்கதிர்களின் நீளம், 23.4 - 26.6 சதம மீட்டராகவும், நெற்கதிரில் உள்ள நெல்மணிகளின் எண்ணிக்கை 127 - 156 என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் ஆயிரம் நெல்மணிகளின் எடை 22.389 கிராம் உள்ள இந்நெல் வகை, நெல்லின் மகசூல் ஒரு எக்டேருக்கு சராசரியாக 1,500 கிலோவாகவும் (20 மூடைகள்), வைக்கோலின் மகசூல் 1,800 (60 கட்டுகள்) கிலோவாகவும் உற்பத்தித் திறன் கொண்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.[1]
நெல்மணியின் இயல்பு
[தொகு]செங்கற்பட்டுச் சிறுமணியின் நெல்மணிகளின் இயல்பானது, பூக்கும் பருவத்தில் இளம் பச்சை நிறமாகவும், பால்பிடிக்கும் நேரத்தில் கரும்பச்சையாகவும், முதிர்ச்சிப் பருவத்தில் மஞ்சள் நிறத்தில் கருமை நிற நீண்ட வரிகளுடன் காணப்படும்.[1]
வெளி இணைப்பு
[தொகு]சான்றுகள்
[தொகு]- 1 2 3 4 5 6 "பாரம்பரிய நெல் இரகங்கள் - பக்கம் 60-61" (PDF). nammanellu.com (தமிழ்) - சனவரி 2001. Retrieved 2025-07-12.
- 1 2 "Chengalpattu Sirumani Aval". www.evani.co (ஆங்கிலம்) - © 2023 - 2025. Retrieved 2025-07-12.