செங்கர் ஆறு

செங்கர் ஆறு (Sengar River) இந்தியாவின் வட இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் பாயும் யமுனை ஆற்றின் துணை ஆறாகும்.
ஆற்றின் பாதை
[தொகு]அலிகார் மாவட்டத்தில் உள்ள ஆதவன் ஏரிக்கு அருகில் செங்கர் ஆறு உருவாகிறது. இட்டாவா மாவட்டம், மைன்புரி மாவட்டம் மற்றும் கான்பூர் மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் வழியாகப் பாய்ந்து பின்னர் கல்பி நகரம் மற்றும் அமீர்ப்பூர் நகரங்களுக்கிடையில் யமுனையுடன் இணைகிறது. செங்கர் ஆற்றின் மொத்த நீளம் 304 கிமீ (190 மைல்கள்) ஆகும்..[1] இந்த ஆறு இட்டாவா மாவட்டத்தில் யமுனை நதிக்கு இணையாகப் பாய்ந்து அமிர்தபூருக்கு அருகில் சிர்சா ஆற்றுடன் இணைகிறது. கான்பூர் மாவட்டத்தில் பாறை வெளியடுக்குடன் சேர்ந்து ஒரு செழுமையான நிலப்பகுதியை உருவாக்குகிறது. இட்டாவா மற்றும் கான்பூர் மாவட்டங்களில் உள்ள செங்கர் படுகையின் பெரும்பகுதி சிவப்பு களிமண் காணப்படுகிறது.[2][3] கான்பூர் மாவட்டத்திற்கான 1878 ஆம் ஆண்டு தீர்வு அறிக்கை, ஆற்றின் ஓரங்களில் தொடர்ச்சியான பள்ளத்தாக்குகள் உள்ளன, அவை ஆற்றின் அருகிலுள்ள மண்ணின் வளத்தை மோசமாக பாதித்தன என்று குறிப்பிடுகிறது.[3]
பெயரியல்
[தொகு]செங்கர் ஆறு முதலில் பேசிண்டு என்று அழைக்கப்பட்டது. இடைக்காலத்தில் கன்னோசி வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து இட்டாவாவின் பெரும்பகுதியைக் கைப்பற்றிய பின்னர் செங்கர் இராசபுத்திரர்களின் பெயரிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.[4]
வரலாறு
[தொகு]செங்கர் ஆற்றின் அடித்தளத்தை கனாரின் பிசூக்கு தேவ் என்றும் அழைக்கப்படும் மன்னர் விசோக்கு தேவ் செங்கர் நாட்டினார். முன்னதாக இந்த நகரம் (அவுரையா) மேவ் சாதி மக்களால் ஆளப்பட்டது. விசோக்கு தேவ் 20,000 மியோக்களைக் கொன்று இங்கு அவருடைய இராச்சியத்தை நிறுவினார்.
செங்கர் ஆற்று வரலாற்றுடன் தொடர்புடைய ஒரு நாட்டுப்புறப் பாடல் உள்ளது. இப்பாடல் அதன் வரலாற்றுத்தன்மையைக் காட்டுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Smith, George (1882). The Geography of British India, Political & Physical. John Murray. p. 170.
sengar river.
- ↑ "District Gazetteer - Etawah (Uttar Pradesh)". Retrieved 13 September 2013.
- ↑ 3.0 3.1 Wright, F N (1878). FINAL REPORT ON THE SETTLEMENT OF THE CAWNPORE DISTRICT. pp. 1, 147.
- ↑ Bingley, A H (1899). Handbook on Rajputs. New Delhi: Asian Educational Services. p. 121. ISBN 9788120602045.