செங்கனூர் ராமன் பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செங்கனூர் ராமன் பிள்ளை குரு
செங்கனூர் ராமன் பிள்ளை குரு, கதகளி நடனக்கலைஞர்
திருவிதாங்கூர் மகாராஜாவின் அரண்மனை கதகளி யோகத்தின் தலைவர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ராமன் பிள்ளை

16 ஜனவரி 1886
பிரித்தானியாவின் இந்தியாவில் உள்ள பாண்டநாடு, செங்கனூர், திருவிதாங்கூர்,
( தற்போதைய கேரளா, இந்தியா)
இறப்பு11 நவம்பர் 1980(1980-11-11) (அகவை 94)
பாண்டநாடு, செங்கனூர், கேரளா, இந்தியா
தேசியம்இந்தியன்
தொழில்கதகளி நடனக்கலைஞர், கதகளி நடன குரு

செங்கனூர் ராமன் பிள்ளை (1886-1980) என்றும் அழைக்கப்படும் குரு செங்கனூர் ராமன் பிள்ளை, என்பவர் தென்னிந்தியாவில் கேரளாவைச் சேர்ந்த புகழ்பெற்ற கதகளி கலைஞர் ஆவார். அவர் நாடக மேடைகளில் புராண கதைகளில் வரும் அநாயக பாத்திரங்களை கொண்டுவரும் அற்புதமான சித்தரிப்புக்காக அறியப்பட்டார், மேலும் கிட்டத்தட்ட அறுபத்தைந்து ஆண்டுகால வாழ்க்கையில் திருவிதாங்கூர் மகாராஜாவின் அரண்மனை கதகளி யோகத்தின் தலைவராக இருந்தார்.[1]

1886 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி செங்கனூரில் பிறந்த ராமன் பிள்ளை, அபிநயத்திற்கு (நடிப்பு) முக்கியத்துவம் அளிக்கும் கப்பிலிங்கட் எனப்படும் கதகளி தெற்கு பாணியில் நிபுணராக இருந்தார். அவர் தெக்கன் சித்தயிலுல்லா அபயாச கிராமங்கள் எழுதியுள்ளார், இது தெற்கு பாணி கதகளியின் முக்கிய பயிற்சி கையேடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

வரலாறு[தொகு]

பிள்ளை 1885 ஆம் ஆண்டு கோட்டயம் மாவட்டம் செங்கனூரில் பிறந்தார். இவர் கதகளி ஒப்பனை கலைஞர் பச்சு பிள்ளையின் மகனாவார் . 13 வயதில், புகழ்பெற்ற தகழி கேசவப் பணிக்கர் களரியில் சேர்ந்து, தகழி கொச்சு நீலகண்ட பிள்ளை, அம்பலப்புழா குஞ்சு கிருஷ்ண பணிக்கர், 'தமயந்தி' நாணு பிள்ளை, மாத்தூர் குஞ்சுப் பிள்ளை பணிக்கர் ஆகியோரிடம் பயிற்சி பெற்றார். 20 வயதில், அவர் கிச்சக்காவின் முக்கிய பாத்திரத்தில் நடித்தார். 1926 இல், திருவிதாங்கூர் மகாராஜா அவரை அரண்மனை நடனக் கலைஞராக நியமித்தார், மேலும் அவர் அரச கதகளியின் முக்கிய குருவானார் .சிறிய வேடங்களுக்குக்கூட முக்கியத்துவமும் மரியாதையும் கொடுத்த பிள்ளை, 89 வயது வரை சுமார் எழுபத்தைந்து ஆண்டுகள் கேரள கதகளி காலையிலும் நாடக மேடைகளிலும் ஆட்சி செய்தார். அவர் தனது ஆசிரியர்கள், அவரது சமகாலத்தவர்கள் மற்றும் அவரது சீடர்களுடன் இணைந்து பல்வேறு நாடகங்களை நிகழ்த்தியுள்ளார்.

செங்கனூர் எப்போதும் எதிர் நாயகனாக நடித்தார், ராமன் பிள்ளை துரியோதனன், ராவணன் மற்றும் கீச்சகன், ஜராசந்தன், பாணன் மற்றும் கம்சன் போன்ற பாத்திரங்களில் தலைசிறந்தவர். அவர் ஹனுமான், ஹம்சம் மற்றும் கருப்பு தாடி கொண்ட காதலன் (மரக்காட்டி) ஆகவும் நடித்தார்.

ராமன் பிள்ளையின் முன்னணி சீடர்களில் மடவூர் வாசுதேவன் நாயர், ஹரிபாட் ராமகிருஷ்ண பிள்ளை, மாங்கொம்பு சிவசங்கர பிள்ளை, குரு கோபிநாத், சென்னிதலா செல்லப்பன் பிள்ளை ஆகியோர் அடங்குவர். அவர்கள் அனைவரும் குருகுல முறைப்படி அவரிடம் படித்தவர்கள்.

செங்கனூர் ராமன் பிள்ளை என்ற ஆவணப்படம் அவரது வாழ்க்கை மற்றும் பங்களிப்புகளை விவரிக்கிறது. அவர் நவம்பர் 11, 1980 இல் இறந்தார்.

விருதுகளும் கௌரவங்களும்[தொகு]

1971 இல் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள அவர், 1963 இல் சங்கீத நாடக அகாடமி விருதையும் பெற்றுள்ளார்.[2]

புத்தகங்கள்[தொகு]

1973ல் வெளிவந்த தெக்கன் சித்தயிலுல்லா அபயாச கிரமங்கள் இவர் எழுதியதாகும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "குரு செங்கனூர் ராமன் பிள்ளை".
  2. "SNA Awardees' List". Sangeet Natak Akademi. 2016. Archived from the original on 31 March 2016. பார்க்கப்பட்ட நாள் 5 February 2016.
  3. "தெக்கன் சித்தயிலுல்லா அபயாச கிரமங்கள்".
"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்கனூர்_ராமன்_பிள்ளை&oldid=3845157" இலிருந்து மீள்விக்கப்பட்டது