செக்ஸ் அண்ட் தி சிட்டி
| செக்ஸ் அண்ட் தி சிட்டி | |
|---|---|
| வகை |
|
| உருவாக்கம் | டேரன் ஸ்டார் |
| மூலம் | கேண்டஸ் புஷ்னெல் எழுதிய புதினம் |
| நடிப்பு |
|
| பின்னணி இசை |
|
| நாடு | அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
| மொழி | ஆங்கிலம் |
| பருவங்கள் | 6 |
| அத்தியாயங்கள் | 94 |
| வெளியிணைப்புகள் | |
| இணையதளம் | |
செக்ஸ் அண்ட் தி சிட்டி (Sex and the City) என்பது ஒரு அமெரிக்க காதல் நகைச்சுவை-நாடகத் தொலைக்காட்சித் தொடராகும். இது எச்பிஓ தொலைக்காட்சிக்காக டேரன் ஸ்டார் என்பவரால் உருவாக்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு கேண்டஸ் புஷ்னெல் எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. இது ஜூன் 6,1998 அன்று அமெரிக்காவில் திரையிடப்பட்டது. மேலும் ஆறு பருவங்களில் 94 அத்தியாயங்களுடன் பிப்ரவரி 22,2004 அன்று முடிவடைந்தது.
கதைச் சுருக்கம்
[தொகு]இந்தத் தொடர் நியூயார்க் நகரில் வசிக்கும் தெரு அறிவுள்ள செய்தித்தாள் பத்தியாளர் கேரி பிராட்ஷா (சாரா ஜெசிகா பார்க்கர்), பாலியல் ரீதியாக தாராளவாதக் கண்ணோட்டம் கொண்ட மக்கள் தொடர்பு நிபுணர் சமந்தா ஜோன்ஸ் (கிம் கேட்ரால்), சற்று பழமைவாதக் கண்ணோட்டம் கொண்ட கலைப் பொருட்கள் விற்பனையாளர் சார்லோட் யார்க் (கிறிஸ்டின் டேவிஸ்) மற்றும் வஞ்சக குணம் கொண்ட வழக்கறிஞர் மிராண்டா ஹோப்ஸ் (சிந்தியா நிக்சன்) நான்கு பெண் நண்பர்களின் வாழ்க்கையைப் பின்தொடர்கிறது.
பாராட்டுகள்
[தொகு]செக்ஸ் அண்ட் தி சிட்டி தொடர் அதன் கதாபாத்திரங்கள் மற்றும் கருப்பொருள்களுக்காக பாராட்டுகளையும் விமர்சனங்களையும் பெற்றது.[1] இது ஏழு பிரதானநேர எம்மி விருது, எட்டு கோல்டன் குளோப் விருதுகள் மற்றும் மூன்று ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றது. இந்தத் தொடர் என்டர்டெயின்மென்ட் வீக்லியின் "நியூ டிவி கிளாசிக்ஸ்" பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது.[2] மேலும் இது எல்லா காலத்திலும் சிறந்த தொலைக்காட்சி தொடர்களில் ஒன்றாக மேற்கோள் காட்டியது.[3][4][5] இது உலகளவில் சிண்டிகேஷனில் ஒளிபரப்பாகிறது.
திரைப்படங்கள்
[தொகு]செக்ஸ் அண்ட் தி சிட்டி வெற்றியைத் தொடர்ந்து செக்ஸ் அண்டு தி சிட்டி (2008) மற்றும் செக்ஸ் அந்து தி சிட்டி 2 (2010) என்ற தலைப்பில் திரைப்படங்களும் வெளியானது. மேலும்,சி. டபிள்யூ தொலைக்காட்சி நிறுவனம் தி கேரி டைரீஸ் (2013–14) என்ற ஒரு முன் தொடர் தொலைக்காட்சித் நிகழ்ச்சியையும் வெளியானது. அதன் தொடர்ச்சியான தொடரான, அண்ட் ஜஸ்ட் லைக் தட்..., டிசம்பர் 9, 2021 அன்று எச்பிஓ மாக்சில் கேட்ரல் இல்லாமல் வெளியானது.... , .[6][7]
ஒளிபரப்பு
[தொகு]பொதுவாக ஒளிபரப்பு நிறுவனங்கள் புறக்கணிக்கும் ஞாயிற்றுக்கிழமை இரவுகளில், பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அந்த நிகழ்ச்சியை எச்பிஓ ஒளிபரப்பத் திட்டமிட்டது. மேலும், ஆண்டு முழுவதும் தொடர்ந்து மதிப்புமிக்க நாடகங்களையும் நகைச்சுவைகளையும் ஒளிபரப்பி வரும் தனது பிரபலமான ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ச்சி வரிசையை உருவாக்க, 'செக்ஸ் அண்ட் தி சிட்டி' மற்றும் 'தி சோப்ரானோஸ்' போன்ற தொடர்களைப் பயன்படுத்தியது..[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Nussbaum, Emily (July 29, 2013). "Difficult Women: How ‘Sex and the City’ Lost its Good Name பரணிடப்பட்டது திசம்பர் 16, 2019 at the வந்தவழி இயந்திரம்". New Yorker.
- ↑ "The New Classics: TV". Entertainment Weekly. June 18, 2007. Archived from the original on July 16, 2014. Retrieved February 5, 2012.
- ↑ Poniewozik, James (September 6, 2007). "The 100 Best TV Shows of All-TIME". Time. Archived from the original on October 16, 2011. Retrieved March 4, 2010.
- ↑ Bruce Fretts (December 23, 2013). "TV Guide Magazine's 60 Best Series of All Time". TVGuide.com. Archived from the original on October 3, 2016. Retrieved April 20, 2020.
- ↑ "The 100 Greatest TV Shows of All Time". Variety. December 20, 2023.
- ↑ Piña, Christy (2023-06-17). "Cynthia Nixon Says 'And Just Like That' "Felt Very Different" Without Kim Cattrall: "You're Not Walking Around on Eggshells"". The Hollywood Reporter (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-06-17.
- ↑ Wagmeister, Ramin Setoodeh,Elizabeth; Setoodeh, Ramin; Wagmeister, Elizabeth (May 31, 2023). "'Sex and the City' Shocker: Kim Cattrall to Return as Samantha Jones With 'And Just Like That…' Cameo (EXCLUSIVE)".
{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Lindbergh, Ben; Arthur, Rob (November 8, 2022). "When Was HBO's Best Sunday Night?". The Ringer. Retrieved December 30, 2025.