செக்ஸ்.காம்
Type of site | இணைய ஆபாசக் கலை |
|---|---|
| Owner | குளோவர் ஹோல்டிங்ஸ் லிமிடெட் |
| Created by | Sex.com குழு |
| URL | www |
| Commercial | ஆம் |
| Registration | இல்லை |
| Launched | மே 9, 1994[1][2] |
| Current status | செயல்பாட்டில் உள்ளது |
Sex.com(செக்ஸ்.காம்) என்பது தற்போது க்ளோவர் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமான ஓர் இணையத் திரளம்(domain) மற்றும் வலைவாசல் ஆகும். இணைய வரலாற்றிலேயே திரளப் பெயர்களின் உரிமையியல் குறித்து மிகவும் விளம்பரப்படுத்தப்பட்ட சட்டப் போராட்டங்களில் ஒன்றாக இந்த திரளப் பெயர் திகழ்ந்தது. இச்சட்ட வழக்கைத் தொடர்ந்து கவனித்து வந்த பத்திரிகையாளர் கீரன் மெக்கார்த்தி, இதைப் பற்றி Sex.com என்ற பெயரிலேயே ஒரு புத்தகத்தை எழுதி 2007 இல் வெளியிட்டார்.
கேரி கிரெமென் (1994–1995)
[தொகு]1994 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், மேட்ச்.காம் (Match.com) மற்றும் கிளீன் பவர் ஃபைனான்ஸ் ஆகிய நிறுவனங்களை நிறுவிய தொழிலதிபரான கேரி கிரெமென், 'நெட்வொர்க் சொல்யூஷன்ஸ்' நிறுவனத்தின் மூலம் Sex.com என்ற திரளப் பெயரைப் பதிவு செய்தார்.[2]
ஸ்டீபன் எம். கோஹன் மற்றும் சட்டப் போராட்டம் (1995–2006)
[தொகு]1995 அக்டோபர் 18 அன்று, நெட்வொர்க் சொல்யூஷன்ஸ் (Network Solutions) நிறுவனம், அசல் உரிமையாளரின் அனுமதியின்றி இந்த திரளப் பெயரை ஸ்டீபன் எம். கோஹனுக்கு மாற்றியது. கோஹன் போலி தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்கள் மற்றும் போலியான கடிதங்களைப் பயன்படுத்தி, தவறான பிரதிநிதித்துவம் மூலம் இந்த திரளக் கட்டுப்பாட்டைப் பெற சில காலமாக முயன்று வந்தவர் ஆவார்.
இறுதியாக, அவர் ஒரு போலித் தொலைநகலை (Fax) சமர்ப்பித்ததன் மூலம், நெட்வொர்க் சொல்யூஷன்ஸ் நிறுவன ஊழியர் ஒருவரை திரளத்தின் உரிமை விபரங்களை மாற்றும்படி வற்புறுத்திச் சம்மதிக்க வைத்தார். திரளத்தின் கட்டுப்பாட்டைப் பெற்ற பிறகு, கோஹன் விளம்பரங்கள் நிறைந்த ஒரு இணையதளத்தை உருவாக்கினார்; அது ஒரு நாளைக்கு 25 மில்லியன் வருகையாளர்களைப் பெற்றது. இதன் மூலம் அவருக்குக் கிடைத்த கிளிக்-த்ரூக்கள் மற்றும் இதர விளம்பரக் கட்டணங்கள் வழியாக, மாதத்திற்கு 50,000 டாலர் முதல் 500,000 டாலர் வரை வருமானம் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. திரளத்தை மீண்டும் மீட்டெடுப்பதற்காக கிரெமென் பல சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார்; அதே நேரத்தில், கோஹன் ஆன்லைன் கிளாசிஃபைட்ஸ் (OCI) நிறுவனத்திடமிருந்து இந்த திரளைத்தைத் தான் சட்டப்பூர்வமாகப் பெற்றதாக வாதிட்டார். இதனைத் தொடர்ந்து, இணைய சட்ட வல்லுநரான சார்லஸ் கரியோன் தலைமையில் ஐந்து ஆண்டுகள் நீண்ட கடுமையான சட்டப் போராட்டம் நடைபெற்றது.[3]

இறுதியாக, நவம்பர் 2000 இல் கிரெமென் இந்த வழக்கில் வெற்றி பெற்றார். நெட்வொர்க் சொல்யூஷன்ஸ் நிறுவனம் அந்த திரளத்தை மீண்டும் வாதியான கிரெமெனிடமே ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.[4]கிரெமென் எதிர்(vs) கோஹன் வழக்கின் பதிவுகளின்படி, ஏப்ரல் 2001 இல் கோஹன் 25 மில்லியன் டாலரை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிடப்பட்டது. மேலும், கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றம் கிரெமெனுக்கு ஏற்பட்ட வருமான இழப்பிற்காக கூடுதலாக 40 மில்லியன் டாலர் வழங்க உத்தரவிட்டது; இதன் மூலம் ஒட்டுமொத்தத் தீர்ப்புத் தொகை 65 மில்லியன் டாலராக உயர்ந்தது.
கோஹன் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ததுடன், தனது வணிகத்தை மதிப்பீடு செய்ய அனுமதிக்க மறுத்தார். அவர் நீதிமன்றத்திற்குத் தவறான தகவல்களை வழங்கியதுடன், தனது சொத்துக்களைச் சட்டவிரோதமாக அமெரிக்க அதிகார வரம்பிற்கு வெளியே (வெளிநாடுகளுக்கு) மாற்றியபடியே, தனது பெரும்பாலான நிறுவனங்கள் திவாலாகிவிட்டதாக அறிவித்தார். அவருக்கு எதிராக நீதிமன்றத்தால் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டபோது, கோஹன் மெக்சிகோவிற்குத் தப்பி ஓடினார். கிரெமென் அவரைக் கண்டுபிடிப்பதற்கான தகவலுக்கு 50,000 டாலர் வெகுமதி அளிப்பதாக அறிவித்தார். இருப்பினும், கோஹன் தொடர்ந்து தலைமறைவாக இருந்தபடியே தனது மேல்முறையீடுகளைத் தாக்கல் செய்து வந்தார்; ஆனால் அவை அனைத்தும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டன.[5]
பின்னர் அக்டோபர் 2005 இல், குடியேற்ற விதிகளின் மீறல்களுக்காக மெக்ஸிகோவின் டிஜுவானா (Tijuana) நகரில் கோஹன் கைது செய்யப்பட்டு அமெரிக்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.[6]
கிரெமென், நெட்வொர்க் சொல்யூஷன்ஸ் நிறுவனத்திற்கு எதிரான தனது வழக்கை வெளியில் வெளியிடப்படாத ஒரு தொகை உடன்படிக்கையின் மூலம் தீர்த்துக் கொண்டார். கோஹன் தனக்கு விதிக்கப்பட்ட 67 மில்லியன் டாலர் தீர்ப்புத் தொகையைச் செலுத்துவதைத் தொடர்ந்து தவிர்த்து வருவதுடன், தான் ஏழ்மையில் (வறுமையில்) இருப்பதாக நீதிமன்றத்தில் வாதிட்டு வந்தார்.
ஆயினும், கோஹன் பணத்தை மறைப்பதற்காகத் தனது சகோதரர், மகள், முன்னாள் மனைவி மற்றும் முன்னாள் வழக்கறிஞர் உட்பட ஏழு தனிநபர்களையும், பன்னிரண்டு நிறுவனங்களையும் பயன்படுத்தியதற்கான ஆதாரங்களுடன், 2006 ஆம் ஆண்டு முதல் பலமுறை நீதிமன்றங்கள் கிரெமெனுக்கு ஆதரவாகவே தீர்ப்பளித்துள்ளன. அவரது சகோதரருக்கு எதிரான நீதிமன்ற வழக்கு தற்போதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.[7][8]
எஸ்காம் எல்எல்சி (Escom LLC)
[தொகு]Sex.com திரளத்தின் பெயர், சனவரி 2006 இல் 'எஸ்காம் எல்எல்சி' (Escom LLC - வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனம்) என்ற நிறுவனத்திற்கு விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.[9] 14 மில்லியன் டாலர் மதிப்பிலான இந்த விற்பனை, வரலாற்றிலேயே மிகவும் விலையுயர்ந்த திரளம் விற்பனைகளில் ஒன்றாகப் பரவலாகக் குறிப்பிடப்படுகிறது.[10]
பிப்ரவரி 18, 2010 அன்று, இந்த திரளத்தின் பெயரை ஒரு கடனுக்கான சொத்துப் பறிமுதல் ஏலத்தில் விற்பனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.[11] மார்ச் 18, 2010 அன்று ஏலம் நடைபெறுவதற்கு ஒரு நாளுக்கு முன்பு, 'எஸ்காம் எல்எல்சி' நிறுவனத்திற்குச் கடன் வழங்கியவர்கள், திரளத்தின் பெயர் ஏலத்தின் மூலம் அதன் மதிப்பு குறைவதைத் தடுப்பதற்காக, அந்நிறுவனத்திற்கு எதிராக ஒரு 'கட்டாய அத்தியாயம் 11 திவால் மனுவை' தாக்கல் செய்தனர்.[12] பின்னர், மைக் மான் என்பவரின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த திரளந்தின் பெயர் ஏலத்திற்காக 'செடோ' என்ற இணைய ஏல நிறுவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
க்ளோவர் ஹோல்டிங்ஸ் லிமிடெட் (2010–2012)
[தொகு]அக்டோபர் 20, 2010 அன்று, 'செடோ' நிறுவனம் இந்த திரளத்தின் பெயர் ஏலத்தை வெற்றிகரமாக முடித்து, அதனை 13 மில்லியன் டாலர் விலைக்கு 'க்ளோவர் ஹோல்டிங்ஸ் லிமிடெட்' நிறுவனத்திற்கு விற்பனை செய்ய ஒப்புதல் அளிக்குமாறு கலிபோர்னியா நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.[13] இந்த விற்பனை இறுதி செய்யப்பட்டு அனைத்து கடன் வழங்குநர்களாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதைத் தீர்மானிப்பதற்கான திவால்நிலை விசாரணை அக்டோபர் 27, 2010 அன்று நடைபெற்றது.[14]
பின்னர் நவம்பர் 18, 2010 அன்று, செடோ நிறுவனம் வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில் இந்த புதிய விற்பனை விலையை முறைப்படி உறுதிப்படுத்தியது. மேலும், அச்செய்திக்குறிப்பில் 2006 ஆம் ஆண்டின் அசல் கொள்முதல் விலை 14 மில்லியன் டாலர் அல்ல, மாறாக அது 11.5 மில்லியன் டாலர் மட்டுமே என்றும் திருத்தி அறிவித்தது.[15]
ஆபாசக் கலைக்கான பின்டெரெஸ்ட் (2012–தற்போது வரை)
[தொகு]Sex.com இணையதளம் மே 2012 இல் புதிய பொலிவுடன் மீண்டும் தொடங்கப்பட்டது. இம்முறை அது தன்னை "ஆபாசக் கலைக்கான பின்டெரெஸ்ட்" (Pinterest for Porn) என்று சந்தைப்படுத்திக் கொண்டது.[16]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sex.com WHOIS, DNS, & Domain Info - DomainTools". WHOIS. 2016. Archived from the original on 2014-01-10. Retrieved 2016-02-21.
- 1 2 "THE SORDID SAGA OF SEX.COM". Wired. 1999. Archived from the original on 2019-04-03. Retrieved 2019-04-03.
- ↑ McCarthy, Kieren (2007). Sex.com: One Domain, Two Men, Twelve Years and the Brutal Battle for the Jewel in the Internet's Crown. Quercus. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-905204-66-3
- ↑ 99 F. Supp. 2d 1168 (N.D. Cal. 200), aff’d, 2002 WL 2017073 (9th Cir. Aug. 30, 2002)
- ↑ "$50,000 Reward For Arrest Of Man Who Stole Sex.Com". Offshore-e-com. 5 June 2001 இம் மூலத்தில் இருந்து 5 October 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111005075018/http://www.offshore-e-com.com/asp/story/story.asp?storyname=3850.
- ↑ "Sex.com thief arrested". The Register. 28 October 2005 இம் மூலத்தில் இருந்து 10 March 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110310133603/http://www.theregister.co.uk/2005/10/28/sexdotcom_cohen_arrested/.
- ↑ Pardon, Rhett (2011-12-23). "Former Sex.com Owner Still Chasing $65M Unpaid Judgment". XBIZ.com. Archived from the original on 2013-10-04. Retrieved 2012-08-03.
- ↑ Pardon, Rhett (2010-11-17). "Sex.com Sale For $13 Million". Domains.com. Archived from the original on 2012-07-05. Retrieved 2012-08-28.
- ↑ "Sex.com Sold for $14 Million". 20 January 2006 இம் மூலத்தில் இருந்து 5 April 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110405212401/http://www.thewhir.com/web-hosting-news/012006_Sex_com_Sold_for_14_Million.
- ↑ Tom Merritt (29 May 2009). "Top 5 most expensive domain names". cNET.com. Archived from the original on 17 March 2011. Retrieved 17 April 2011.
- ↑ Strong, Adam (18 February 2010). "Sex.com Goes In To Foreclosure". Domain Name News இம் மூலத்தில் இருந்து 31 December 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101231100843/http://www.domainnamenews.com/domain-sales/sexcom-foreclosure/7208.
- ↑ Dunn, John (18 March 2010). "Sex.com sale halted by bankruptcy". Techworld இம் மூலத்தில் இருந்து 26 June 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110626080509/http://news.techworld.com/personal-tech/3217747/sexcom-sale-halted-by-bankruptcy.
- ↑ "Sex Sells! (well everyone knows that already)". Namemon.com. 20 October 2010 இம் மூலத்தில் இருந்து 26 February 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110226110104/http://namemon.com/auctions/47-sedo/113-sex-sells.
- ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2010-11-05. Retrieved 2010-10-20.
{{cite web}}: CS1 maint: archived copy as title (link) - ↑ Business Wire(17 November 2010). "Escom Sells Sex.com with Sedo for Record $13 Million". செய்திக் குறிப்பு.
- ↑ Pardon, Rhett (2012-05-02). "Sex.com Sale For $13 Million". Tech Crunch. Archived from the original on 2012-08-28. Retrieved 2012-08-28.
வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம்
- வழக்கு பற்றிய ஸ்டார்ட்அப் போட்காஸ்ட் அத்தியாயம்வழக்கு பற்றிய அத்தியாயம்