உள்ளடக்கத்துக்குச் செல்

செக்சி பீஸ்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செக்சி பீஸ்ட்
இயக்கம்ஜொனாதன் கிளேசர்
தயாரிப்புஜெரமி தாமஸ்
திரைக்கதைலூயிஸ் மெல்லிசு
டேவிட் ஸ்கின்டோ
இசைரோக் பான்யோஸ்
அன்கிள்
சவுத்
நடிப்புரே வின்ஸ்டோன்
பென் கிங்ஸ்லி
இயன் மெக்கேசன்
அமண்டா ரெட்மன்
ஒளிப்பதிவுஐவன் பேர்ட்
படத்தொகுப்புஜான் இசுகாட்
சாம் ஸ்னீட்
வெளியீடு2000
நாடுஐக்கிய இராச்சியம்
எசுப்பானியா
மொழிஆங்கிலம்

செக்சி பீஸ்ட் (Sexy Beast ) என்பது 2000ஆம் ஆண்டு வெளியான அவல நகைச்சுவைக் குற்றத் திரைப்படமாகும். இது ஜொனாதன் கிளேசர் இயக்கியது (அவர் திரைப்பட இயக்குநராக அறிமுகமானது), லூயிசு மெல்லிசு, டேவிட் சிண்டோ ஆகியோரால் எழுதப்பட்டது.[1] ரே வின்ஸ்டோன், பென் கிங்ஸ்லி மற்றும் இயன் மெக்சேன் ஆகியோர் நடித்துள்ளனர்.

செக்சி பீஸ்ட் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது, மேலும் கிங்ஸ்லியின் நடிப்பிற்காக அவர் சிறந்த துணை நடிகருக்கான அகாடமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.[2] டோட்டல் ஃபிலிம் அனைத்து காலத்திற்குமான 15 வது சிறந்த பிரித்தானியப் படமாக செக்ஸி பீஸ்டைப் பெயரிட்டது. படப்பிடிப்பு முடிந்த சிறிது நேரத்திலேயே புற்றுநோயால் இறந்த காவன் கெண்டால் நடித்த கடைசி படம் இதுவாகும்.[3]

கதைச் சுருக்கம்

[தொகு]

முன்னாள் குற்றவாளியான கேரி "கால்" டோவ், தனது மனைவி டீடீயுடன் ஸ்பெயின் கடற்கரைப் பகுதியில் அமைதியான ஓய்வு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அவரது நண்பர் ஐட்ச் மற்றும் அவரது மனைவி ஜாக்கியும் அருகில் வசிக்கின்றனர். இந்த அமைதியை குலைக்கும் வகையில், லண்டன் குற்ற உலகைச் சேர்ந்த வன்முறை குணம் கொண்ட லோகன் கால் வசிக்கும் வீட்டிற்கு வருகிறார். குற்றத் தலைவன் டெட்டி பாஸ் திட்டமிட்டுள்ள வங்கிக் கொள்ளையில் கால் பங்கேற்க வேண்டும் என்று டான் வற்புறுத்துகிறார். கால் மீண்டும் குற்ற வாழ்க்கைக்கு திரும்ப விரும்பாததால் மறுக்கிறார். ஆனால் டானின் மிரட்டலும் வன்முறையும் அதிகரிக்கின்றன. இறுதியில் இருவருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்படுகிறது. பின்னர் கால் லண்டனுக்குச் சென்று கொள்ளைத் திட்டத்தில் ஈடுபடுகிறார். கொள்ளை வெற்றிகரமாக நடந்தாலும், பழைய குற்ற உலகின் ஆபத்துகளும் அச்சங்களும் அவரை மீண்டும் சூழ்கின்றன. இறுதியில் கால் தனது குடும்பத்துடன் மீண்டும் ஸ்பெயினுக்கு திரும்பி அமைதியான வாழ்க்கையைத் தொடர முயல்கிறார்.

கதை மாந்தர்

[தொகு]
  • கேரி 'கால்' டோவ் என்ற கதாபாத்திரத்தில் ரே வின்ஸ்டோன், ஓர் ஓய்வு பெற்ற குற்றவாளி, டீடியை திருமணம் செய்து கொண்டு ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க எசுப்பானியாவுக்குச் சென்றார்
  • டான் லோகனாக பென் கிங்ஸ்லி,
  • டெடி பாசாக இயன் மெக்சேன்
  • டீடி டோவ் ஆக அமண்டா ரெட்மேன்
  • ஜேம்ஸ் ஃபாக்ஸ் ஹாரி- வங்கியாளர்
  • ஐட்ச் கதாபாத்திரத்தில்- காவன் கெண்டால்
  • எசுப்பானியச் சிறுவன் என்ரிக் கதாபாத்திரத்தில் அல்வாரோ மோன்ஜே

வரவேற்பு

[தொகு]

143 விமர்சனங்களின் அடிப்படையில் அழுகியத் தக்காளி இந்தத் திரைப்படம் 87% ஒப்புதல் மதிப்பீட்டைக் கொண்டுள்ளது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Rosenstock, Ben (March 14, 2024). "The Best Gangster Movies and TV Shows". TIME. Retrieved October 30, 2025.
  2. "Sir Ben's Sexy honour". BBC News. 31 December 2001. http://news.bbc.co.uk/1/hi/entertainment/film/1734960.stm.
  3. Anastasia, George; Macnow, Glen (27 September 2011). The Ultimate Book of Gangster Movies: Featuring the 100 Greatest Gangster Films of All Time. Running Press. ISBN 9780762443703 via Google Books.
  4. "Sexy Beast". Rotten Tomatoes. Retrieved 5 December 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=செக்சி_பீஸ்ட்&oldid=4555238" இலிருந்து மீள்விக்கப்பட்டது