செக்காலை நாடகக் கலாமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செக்காலை நாடகக் கலாமன்றம் என்பது இந்திய நாட்டில் தமிழ்நாடு மாநிலத்தில் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி நகரில் முற்காலத்தில் நடந்துவந்த நாடக மன்றம் ஆகும். தமிழ்நாட்டில் நடந்துவந்த நாடகங்களில் வரலாற்றில் இந்த மன்றமும் ஒரு மைல் கல் என்று குறிப்பிடப்படுகிறது. [1]

அமைப்பு[தொகு]

இது கிராமங்களில் நடக்கும் திருவிழாக்களில் வள்ளித் திருமணம், சத்தியவான் சாவித்திரி, பவளக்கொடி, அல்லி அர்ஜுனா போன்ற நாடகங்களை நடத்தி மக்களை மகிழ்விக்கும் மன்றமாக இருந்துள்ளது.

இந்த நாடகம் நடக்கும்போது மேடையில் மைக் செட் என்பது இருக்காது. அதற்கு மாற்றாக பின்பாட்டுப் பாடுபவர்கள் மேடையின் பின்புறம் மர நாற்காலியில் ஏறி நின்றுகொண்டு கொட்டகையின் உச்சியில் கட்டப்பட்டுள்ள கயிற்றைப் பிடித்துக்கொண்டு உரத்தகுரலில் கத்திப்பாட வேண்டும். இவர்களின் குரல் திடலின் கடைகோடிவரைச்சென்று கேட்கும். வெளிச்சத்திற்காக மட்டும் நடிகர்களின் தலைக்கு மேலே ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கு தொங்க விடப்பட்டிருக்கும்.

நடிகர்கள்[தொகு]

இந்த மன்றத்தினை துவங்க காரண கர்த்தாவாக இருந்தததாகக் கூறப்படுபவர் ஃபிலமன் சாமி என்பவர் ஆவார். தமிழ் நடிகைகளின் முன்னோடியாக திகழும் மனோரமா இந்த நாடக மேடையில் முதன் முதலில் நடித்தார்.

பெயர் மாற்றம்[தொகு]

பின்னாளில் இந்த நாடக மன்றம் செந்தமிழ் இளைஞர் மன்றம் என்ற பெயரில் சமூக நாடகங்களை நடத்தி மக்களை மகிழ்வித்தது.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்[தொகு]