உள்ளடக்கத்துக்குச் செல்

செக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனைத்து உருசிய அசாதாரண ஆணையம்
Всероссийская чрезвычайная комиссия (உருசியம்)
செக்காவின் 5 ஆண்டுகளை நினைவுகூரும் சின்னம்
துறை மேலோட்டம்
அமைப்பு20 திசம்பர் 1917; 108 ஆண்டுகள் முன்னர் (1917-12-20)
கலைப்பு6 பெப்ரவரி 1922; 104 ஆண்டுகள் முன்னர் (1922-02-06)
பின்வந்த அமைப்பு
  • மாநில அரசியல் இயக்குநரகம்
வகைஇரகசிய காவல்துறை
உளவுத்துறை முகமை
தலைமையகம்
அமைப்பு தலைமைகள்
  • பெலிக்ஸ் ஜெர்ஜின்ஸ்கி (1917–1918)
  • ஜெக்காப்ஸ் பீட்டர்ஸ் (1918) (பொறுப்பு)
  • பெலிக்ஸ் ஜெர்ஜின்ஸ்கி (1918–1922)
மூல அமைப்புமக்கள் ஆணையர் மன்றம்

அனைத்து உருசிய அசாதாரண ஆணையம் (All-Russian Extraordinary Commission) பொதுவாக செக்கா என அழைக்கப்படும் இது சோவியத் ஒன்றியத்தின் முதல் இரகசிய காவல் அமைப்பாகும்.[a] இது 20 டிசம்பர் அன்று உருசிய சோவியத் கூட்டாட்சி சோசலிசக் குடியரசின் மக்கள் ஆணையர்கள் மன்றத்தால் பெலிக்ஸ் ஜெர்சின்ஸ்கி தலைமையில்நிறுவப்பட்டது.[1] 1922இல் உருசிய உள்நாட்டுப் போர் முடிவடையும் போது, செக்காவில் குறைந்தது 2,00,000 பணியாளர்கள் இருந்தனர்.

முதலாளித்துவ வர்க்கத்தினர் மற்றும் மதகுருமார்கள் போன்ற "வர்க்க எதிரிகளிடமிருந்து" அக்டோபர் புரட்சியைப் பாதுகாப்பதற்காக வெளிப்படையாக உருவாக்கப்பட்ட செக்கா, விரைவில் போல்செவிக் கட்சியின் ஆட்சியின் அனைத்து அரசியல் எதிரிகளுக்கும் எதிராகப் பயன்படுத்தப்படும் ஒரு அடக்குமுறைக் கருவியாக மாறியது. அந்த அமைப்பு, எதிர்-உளவுத்துறை, செஞ்சேனையின் விசுவாசத்தைக் கண்காணித்தல், நாட்டின் எல்லைகளைப் பாதுகாத்தல் மற்றும் மனித, தொழில்நுட்ப உளவுத் தகவல்களைச் சேகரித்தல் ஆகிய பொறுப்புகளைக் கொண்டிருந்தது. விளாதிமிர் லெனினின் வழிகாட்டுதலின் பேரில், செக்காக்கள் பெருமளவிலான கைதுகள், சிறைவாசம், சித்திரவதை மற்றும் விசாரணையின்றி மரணதண்டனைகளை நிகழ்த்தினர்; இது பின்னர் "செம்பயங்கரவாதம்" என்று அறியப்பட்டது. அது குலாக் தொழிலாளர் முகாம் அமைப்பைக் கண்காணித்தது. உணவுப் பொருட்களைக் கைப்பற்றியது. மேலும் தொழிலாளர்கள், விவசாயிகளின் கிளர்ச்சிகளை அடக்கியது. மதிப்பீடுகள் பரவலாக வேறுபட்டாலும், செக்கா அமைப்பு குறைந்தபட்சம் 50,000 முதல் 200,000 பேர் வரை தூக்கிலிட்டதற்குப் பொறுப்பாக இருந்தது.

சோவியத் இரகசியக் காவல் அமைப்புகளின் நீண்ட வரிசையில் முதன்மையானதான செக்கா, பாதுகாப்புச் சேவையை சோவியத் அரசியலில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கும் அமைப்பாக நிலைநிறுத்தியது. அது பிப்ரவரி 1922-ல் கலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக அரசு அரசியல் இயக்குநரகம் நிறுவப்பட்டது. சோவியத் காலம் முழுவதும், இரகசியக் காவல் அமைப்பின் உறுப்பினர்கள் "செக்கிகள்" என்றே அழைக்கப்பட்டனர்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Steinberg, Mark D. (2001). Voices of Revolution, 1917. London and New Haven: Yale University Press. pp. 265–266. ISBN 978-0-300-09016-1.

நூலாதாரங்கள்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. (உருசியம்: Всероссийская чрезвычайная комиссия, ஒ.பெ Vserossiyskaya chrezvychaynaya komissiya, பஒஅ: [fsʲɪrɐˈsʲijskəjə tɕrʲɪzvɨˈtɕæjnəjə kɐˈmʲisʲɪjə]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=செக்கா&oldid=4603457" இலிருந்து மீள்விக்கப்பட்டது