செகானி ககண்டவாலா
செகானி ககண்டவாலா (Shehani Kahandawala) ( சிங்களம்: ෂෙහානි කහඳවල (பிறப்பு: 24 பெப்ரவரி 1995), என்பவர் ஒரு இலங்கை தொலைக்காட்சி நடிகை, தொலைக்காட்சி தொகுப்பாளர், பாடகி, வடிவழகி ஆவார். [1] குழந்தை தொலைக்காட்சி தொகுப்பாளராகத் தொலைக்காட்சித் துறையில் நுழைந்த இவர், பின்னர் சுஜாதா, சண்டா பினி வஸ்ஸா , சிஹினி ஆகிய தொலைக்காட்சித் தொடர்கள் மூலம் பிரபல தொலைக்காட்சி நடிகைகளில் ஒருவரானார். [2] [3]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]இவர் 1995 பிப்ரவரி 24 அன்று கொழும்பில் அக்குடும்பத்தின் ஒரே குழந்தையாகப் பிறந்தார். இவரின் தந்தை பெயர் வசந்த கஹந்தவல, தாய் பெயர் தமரா பெரேரா என்பவராவார். இவரின் தாய் ஒரு இல்லத்தரசி ஆவார். பள்ளிப் பருவத்தில், இவர் நாடகம் அல்லது இசை போன்ற எவற்றிலும் ஈடுபடவில்லை. [4] இருப்பினும், பள்ளியில் உயர்தர வகுப்பு (A/L) வரை இசையை ஒரு பாடமாகப் பயின்றார். இவரின் தந்தையைப் போலவே இவரின் பாட்டியும் நன்றாகப் பாடும் திறன் கொண்டவராக இருந்தார். [5]
தொழில்
[தொகு]2013 ஆம் ஆண்டில், டிவி டெரானா தொலைக்காட்சியில் ஒரு பகுதிநேர தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய செகானி, ட்ரிம் ட்ரிம் என்ற குழந்தைகளுக்கான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். [6] அதே காலகட்டத்தில், சஷிகா நிசன்சாலா பாடிய ஓபா மா ஹமுவுனா டா என்ற இசைக் காணொளியில் தோன்றினார். [7] அந்தப் பாடலின் மூலம், இவர் பொதுமக்களிடையே மிகவும் பிரபலமடைந்தார், மேலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் பல இசைக் காணொளிகளில் தொடர்ந்து தோன்றினார். [2] பின்னர் அதே ஆண்டில், சமரா ஜனராஜ் பீரிஸ் இயக்கத்தில் வெளியான ஆசிட் என்ற தொலைக்காட்சி தொடரில் "செனுரி" என்ற பாத்திரத்தில் நடித்து தொலைக்காட்சித் தொடரில் அறிமுகமானார். [8] [9]
2015ஆம் ஆண்டில், 'சுஜாதா' என்ற தொலைக்காட்சித் தொடரில், முன்பு அத்தலைப்புக் கதாபாத்திரத்தில் நடித்த நேஹாரா பீரிசுக்குப் பதிலாக நடிக்க இவர் அழைக்கப்பட்டார். [10] அந்தத் தொடரில், இவர் "சுஜாதா" என்ற முதன்மைப் பாத்திரத்தில் நடித்தார், அது இவருக்கு பெரும் புகழைப் பெற்றது. [4] அந்தத் தொடர் இவரது நடிப்பு வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. [11] [9] 2016 ஆம் ஆண்டில், வர்ணா என்ற தொடரில் நடித்தார். 2017 ஆம் ஆண்டில், இவர் சண்டா பினி வாசா என்ற தொடரில் தோன்றி "மாதவி" என்ற பாத்திரத்தில் நடித்தார்.[2] அதே ஆண்டில், ஹிரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹிரு சூப்பர் ஹீரோ என்ற உண்மைநிலை நிகழ்சியில் தொகுப்பாளராகப் பணியாற்றினார். பின்னர் இவர் மல் ஹத்தாய் என்ற நகைச்சுவைத் தொடரில் இணைந்து "ஆஸ்வரி" என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். [12]
2018 ஆம் ஆண்டில், ஹிரு மெகா ஸ்டார்ஸ் என்ற உண்மைநிலை நிகழ்ச்சியின் இரண்டாம் பருவத்தில் இவர் பங்கேற்றார். [13] அதே ஆண்டில், நேபரயா, பேக்கேஜ் ஆகிய இரண்டு தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தார். [5] இதற்கிடையில், 2019 ஆம் ஆண்டில் இலங்கைக்கான அதிகாரப்பூர்வ 'லக்ஸ்' தூதராக நியமிக்கப்பட்ட இவர், ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்ற பயிலரங்கிலும் பங்கேற்றார். [14] அதே ஆண்டில், ரோமேஷ் சுகதபால பாடிய "மிஹிரவி" என்ற இசைக் காணொளியில் இவர் தோன்றினார். பின்னர் பாலிவுட் பாடகர் ராஜ்தீப் சாட்டர்ஜி பாடிய "அஞ்சானா" என்ற இந்தி பாடலில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். [15]
2020 ஆம் ஆண்டில், இவர் சிஹினி என்ற தொலைக்காட்சி தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார். [16] [17]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "I was a lover, but not now - popular actress Shehani Kahandawala". saaravita. Retrieved 2020-12-06.
- 1 2 3 "Likes to do any character". Dinamina. Archived from the original on 2018-01-19. Retrieved 2020-12-06.
- ↑ "Everyone is still talking about Sujatha". Lankadeepa. Retrieved 2020-12-06.
- 1 2 "Shehani Kahandawala: Focusing on acting and singing". Daily Mirror. Retrieved 2020-12-06.
- 1 2 "When you have a relationship, you are more likely to be single - Shehani Kahandawala". Sarasaviya. Retrieved 2020-12-06.
- ↑ "Likes bad characters - Shehani Kahandawala". gossiplankahotnews. Retrieved 2020-12-06.
- ↑ ""I play within my limits" - Shehani Kahandawala". nowshowing. Retrieved 2020-12-06.
- ↑ "Want to save character - Actress Shehani Kahandawala". gossiplankahotnews. Retrieved 2020-12-06.
- 1 2 "Sujatha's story". Divaina. Retrieved 2020-12-06.
- ↑ "I did not forcibly take away the character played by Nehara". Lankadeepa. Retrieved 2020-12-06.
- ↑ "Life with Love". saaravita. Retrieved 2020-12-06.
- ↑ "Now I am a lover - Shehani Kahandawala". Hiru FM. Retrieved 2020-12-06.
- ↑ "There are more to come in the future". Hiru TV. Retrieved 2020-12-06.
- ↑ "Sri Lankan beauty resembling Kylie Jenner". eonline. Retrieved 2020-12-06.
- ↑ "Shehani For a Bollywood video". Sarasaviya. Retrieved 2020-12-06.
- ↑ "Shehani walks back to television". Divaina. Retrieved 2020-12-07.
- ↑ "My love story is over". Aruna. Retrieved 2020-12-07.