சூ விளையாட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூ விளையாட்டு நாட்டுப்புறச் சிறுவர் ஆடும் விளையாட்டு. தற்காலத்தில் விதிமுறைகளுடன் ஆசிய அளவில் போட்டி விளையாட்டாக நடைபெறும் போட்டி விளையாட்டு கோ-கோ போன்றது இது.

கோ-கோ விளையாட்டில் அணிக்கு 9 பேர் என இரண்டு அணிகள் விளையாடும். ஒரு அணியிலுள்ள 8 பேரும் ஒரே வரிசையில் பக்கவாட்டில் திசைமாறி அமர்ந்திருப்பர். ஒன்பதாமவர் தொடுபவர். எதிர் அணியினர் மூவர் மூவராகக் களமிறங்கி அமர்திருப்போருக்கு இடையில் ஓடுவர். தொடுபவர் ஓடுபவர்களைத் தொடவேண்டும். ஒவ்வொரு மூவரைத் தொடுவதற்கும் 7 நிமிடம். பொத்தம் 21 நிடிடங்களில் எத்தனைப் பேரைத் தொடுகிறார் என்பது வெற்றிப்புள்ளி. எந்த அணி அதிக வெற்றிப்புள்ளி எடுக்கிறதோ அது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

கோ-கோ விளையாட்டில் 8 அமர்வு-இடங்களின் இரு முனையிலும் கம்பம் நடப்பட்டிருக்கும். தொடுபவர் அதனைச் சிற்றிக்கொண்டு ஓடவேண்டும். ஓடும்போது அமர்ந்திருக்கும் தன் அணியில் எவரை வேண்டுமானாலும் உசுப்பி விட்டுவிட்டுத் தான் அவ்விடத்தில் அமர்ந்துகொள்ளலாம். கம்பத்தைத் தொட்டபின்னர் திசைமாறி ஓடித் தொடலாம்.

சூ விளையாட்டில் கம்பம் இல்லை. இரு முனைகளிலும் அமர்ந்திருப்பவர் தலையைத் தொட்டுத் திரும்புவேண்டும். அணிக்கு இத்தனை பேர் என்னும் வரையரை இல்லை. இரு அணிகளிலும் சமமான எண்ணிக்கையில் விளையாடுவோர் இருப்பர். ஓடுவோர் அணியிலுள்ள எல்லாரும் ஒரே சமயத்தில் களமிறங்கி ஒடுவர். இதுதான் வேறுபாடு; மற்றபடி இரண்டு ஆட்டங்களிலும் விளையாடும் முறைமை ஒன்றுதான். வெற்றி தொடுவோரின் எண்ணிக்கையைப் பொறுத்தது அன்று. அனைவரும் தொடப்படாமல் எந்த அணி அதிக நேரம் விளையாடுகிறது என்பதைப் பொறுத்தது.

மேலும் பார்க்க[தொகு]

கருவிநூல்[தொகு]

  • ஞா. தேவநேயப் பாவாணர், தமிழர் விளையாட்டுக்கள், சைவ சித்தாந்த சூற்பதிப்புக் கழகம் வெளிநீடு, 1954
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூ_விளையாட்டு&oldid=2901249" இலிருந்து மீள்விக்கப்பட்டது