சூழலியல் திறனாய்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சூழலியல் திறனாய்வு (Ecocriticism) என்பது, இலக்கியத்துக்கும் இயற்கைச் சூழலுக்கும் உள்ள உறவினை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு ஆகும். 1990களில் அமெரிக்காவில் தோற்றம் பெற்ற இது பின்னர் ஐக்கிய இராச்சியத்துக்கும் பிற நாடுகளுக்கும் பரவியது. புவியின் இயற்கைச் சூழல் தொடர்பான பிரச்சினைகளைச் சரியாகக் கையாளுவதற்கு, மனிதருக்கும் இயற்கைச் சூழலுக்கும் உள்ள தொடர்புகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்ற கருதுகோளே சூழலியல் திறனாய்வின் அடிப்படையாக உள்ளது.[1]

சிறப்பாக இலக்கியம், காட்சிக் கலைகள், இசை போன்ற பண்பாட்டுத் துறைகளிலேயே சூழலியல் திறனாய்வு கவனம் செலுத்தினாலும், இவ்விடயத்தின் தன்மை காரணமாக, சூழலியல், உயிர் அறிவியல் துறைகளோடு சூழல் வரலாறு, மெய்யியல், சமூகவியல், அறிவியல் போன்றவற்றையும் உள்ளடக்கிய பல்துறைச் செயற்பாடாகவே இது விளங்குகிறது.[1]

வரலாறு[தொகு]

1978 ஆம் ஆண்டில், வில்லியம் ரூக்கர்ட் என்பவர், "சூழலியல் திறனாய்வு" என்பதற்கு ஈடான "eco crtitcism" என்னும் சொல்லை தான் எழுதிய நூலொன்றில் முதன் முதலாகப் பயன்படுத்தினார். ஆனாலும், 1989 ஆம் ஆண்டில் ஒரு கல்லூரி மாணவியான செரில் கிலாட்பெல்டி என்பவர் மேற்கத்திய இலக்கியக் கழகத்தின் கூட்டமொன்றில் வாசித்த கட்டுரையில் இச் சொல்லைப் பயன்படுத்திய பின்னரே இது பரவலான அறிமுகத்தைப் பெற்றது. இன்று இத்துறையில் முக்கியமான ஒருவராக விளங்கும் இவர் தொடர்ந்தும் சூழலியல் திறனாய்வின் வளர்ச்சிக்குப் பெரிய பங்கு ஆற்றியுள்ளார். 1992 ஆம் ஆண்டில் இலக்கியம் மற்றும் சுற்றுச் சூழல் கல்விக்கான சங்கம் நிறுவப்பட்டபோது அதில் துறை நிறுவனராகப் பங்களிப்புச் செய்தார். 1996 ஆம் ஆண்டில் அரோல்டு ஃபுரோம் (Harold Fromm) என்பவருடன் சேர்ந்து சூழலியல் திறனாய்வு தொடர்பான தொகுப்பு நூலொன்றையும் வெளியிட்டார்.[2]

"சூழலியல் திறனாய்வின் ஒரு நூற்றாண்டு - 1864-1964" (A Century of Early Ecocriticism - 1864-1964) என்னும் ஆங்கில நூலை எழுதியதன் மூலம், டேவிட் மாசல் (David Mazal) என்பவர் சூழலியல் திறனாய்வுக்கு ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியைக் கொடுத்தார். தொடர்ந்து பலரும் இதன் வளர்ச்சிக்குப் பெரிதும் பங்களிப்புச் செய்துள்ளனர். லாரென்சு புவெல் (Lawrence Buel) என்பார் இது தொடர்பில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.[2]

குறிப்புக்கள்[தொகு]

  1. 1.0 1.1 Whate is Ecocriticism - European Association for the Study of Literature, Culture and Environment
  2. 2.0 2.1 பஞ்சாங்கம், க., 2011. பக். 354.

உசாத்துணைகள்[தொகு]

  • பஞ்சாங்கம், க., இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும், அன்னம், தஞ்சாவூர், 2011.
  • நடராசன், தி. சு., திறனாய்வுக் கலை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, 2009 (ஏழாம் பதிப்பு).
  • சதிஷ்,சு.," சூழலியல் திறனாய்வு நோக்கில் அகநானூற்றுக் குறிஞ்சித்திணைப் பாடல்கள் " இளமுனைவர் பட்டத்திற்காக(Master of Philosophy ) புதுவைப் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வேடு. 2011
  • சதிஷ்,சு.,"சூழலியல் திறனாய்வு நோக்கில் அகநானூறு, பல்லவி பதிப்பகம், ஈரோடு, 2017.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூழலியல்_திறனாய்வு&oldid=2746159" இருந்து மீள்விக்கப்பட்டது