சூளகிரி சின்னாறு நீர்தேக்கம்
சூளகிரி சின்னாறு நீர்தேக்கம், கிருட்டிணகிரி மாவட்டத்தில் சூளகிரி சின்னாற்றின் குறுக்கே எம்பள்ளி அருகே இத்தேக்கம் அமைந்துள்ளது. இந்த அணை 1986 இல் 95 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது. இதன் கொள்ளளவு 81 மில்லியன் கன அடி.[1] இந்த அணையில் சின்னாறு, பேரிகை ஏரி, பன்னப்பள்ளி ஏரி, அத்திமுகம் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்து வரும் உபரி நீர் சேமித்து வைக்கப்பட்டு விவசாயத்திற்கு திறந்துவிடப்படுவது வழக்கம். இதன் நீர்பிடிப்புப் பரப்பு 143.62 ச.கி.மீ ஆகும். அணையின் மொத்த உயரமான 37 அடியில் 33 அடிக்கு தண்ணீர் வந்தால், அணையின் இடதுபுறம் உள்ள மாரண்டப்பள்ளி, கிருஷ்ணகவுன்பள்ளி, தாசம்பட்டி, இண்டிகானூர் கிராமங்களும், வலதுபுறம் வேம்பள்ளி, கூரக்கனப்பள்ளி, கொள்ளப்பள்ளி, சென்னப்பள்ளி, சுண்டகிரி, அலகுபாவி, எலசமாக்கனப்பள்ளி, சின்னசென்னப்பள்ளி, பந்தர்குட்டை, கரகண்டப்பள்ளிஉள்ளிட்ட கிராமங்களுக்கும் தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும்.[2]
குறிப்புகள்
[தொகு]- ↑ http://www.wrd.tn.gov.in/Reservoir_details.pdf
- ↑ எஸ்.கே.ரமேஷ்/ஜோதி ரவிசுகுமார் (11 செப்டம்பர் 2017). "12 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பும் சின்னாறு அணை, நிரம்பி வழிகிறது தளி பெரிய ஏரி: விவசாயிகள் மகிழ்ச்சி". செய்தி. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 11 செப்டம்பர் 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)