சூலு தீவுக்கூட்டம்
புவியியல் | |
---|---|
ஆள்கூறுகள் | 6°N 121°E / 6°N 121°E |
அருகிலுள்ள நீர்ப்பகுதி | |
முக்கிய தீவுகள் | |
பரப்பளவு | 4,068 km2 (1,571 sq mi) |
நிர்வாகம் | |
மக்கள் | |
மக்கள்தொகை | 1,996,970 |
அடர்த்தி | 313 /km2 (811 /sq mi) |
சூலு தீவுக்கூட்டம் (ஆங்கிலம்: Sulu Archipelago; தவுசூக்: سُوگْ ஜாவி: كڤولاوان سولو பிலிப்பினோ: (Kapuluan ng Sulu) என்பது பிலிப்பீன்சு நாட்டின் தென்மேற்கில், பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவுக்கூட்டம் ஆகும்.[1]
இந்தத் தீவுக்கூட்டம் சுலாவெசி கடல் (Celebes Sea) பகுதியின் வடக்கு எல்லையையும்; சுலு கடல் (Sulu Sea) பகுதியின் தெற்கு எல்லையையும் உருவாக்குகிறது. சுலு தீவுக்கூட்டம் சில சமயங்களில் பசுல்தா (Basulta) என்றும் குறிப்பிடப்படுகிறது.
பொது
[தொகு]
|
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆதாரம்: Philippine Statistics Authority (2015) |
சுலு தீவுக்கூட்டம் மிண்டனாவோ (Mindanao) தீவுக் குழுவிற்குள் உள்ளன. இந்தத் தீவுக் குழுவிற்குள் பாசிலான், சூலு, தாவி தாவி மாநிலங்கள் உள்ளன. இந்தத் தீவுக்கூட்டம் போர்னியோவுக்கும் பிலிப்பீன்சுக்கும் இடையே ஒரு நிலப் பாலம் அல்ல.[2]
அவ்வாறுதான் பலரும் நினைக்கிறார்கள். மாறாக, இது கடலின் அடிப்பகுதியின் டெக்டோனிக் (Tectonic) பெரும் பாறைகளின் நகர்வால் ஏற்பட்ட பாறை முகடுகளாகும் (Submarine Ridges).
இப்பகுதியில் உள்ள பெரிய நகராட்சிகள் ஜோலோ (Jolo) தீவில் உள்ளன. பலவான் (Palawan) எனும் பெரும் தீவு வடக்கில் உள்ளது. மேற்கில் மிண்டனாவோ (Mindanao) மாநிலத்தின் சம்பொவாங்கா தீபகற்பம் (Zamboanga Peninsula) உள்ளது. அத்துடன் போர்னியோ தீவின் வடகிழக்கில் உள்ள பகுதி முன்பு சூலு சுல்தானகத்தின் பகுதிகளாக இருந்தது.[3]
சுலு தீவுக்கூட்டத்தில் தவுசூக் மொழி (Tausug Language) பரவலாகப் பேசப் படுகிறது. யாக்கான் மொழி (Yakan Language) பாசிலான் தீவில் (Basilan Island) முதன்மையாகப் பேசப்படுகிறது.
வரலாறு
[தொகு]1521-இல் பெர்டினென்ட் மகலன் (Ferdinand Magellan) என்பவர், கிழக்கு பிலிப்பீன்சு பகுதியில் இருந்த சமர் (Samar) எனும் இடத்திற்கு வருகை தந்தார். அதுவே எசுப்பானியக் காலனி ஆதிக்கத்தின் ஆரம்பமாக அமைந்தது. 1543-இல், எசுப்பானிய நாடுகாண் பயணியான ருய் லோபேஸ் டி வில்லாபோஸ் (Ruy López de Villalobos) என்பவர் எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு (Philip II of Spain) அரசருக்குக் கௌரவமளிக்கும் பொருட்டு இந்தத் தீவுக் கூட்டத்திற்கு லாஸ் ஐலாஸ் பிலிப்பினாஸ் (Las Islas Filipinas) எனப் பெயரிட்டார்.
மெக்சிக்கோ நகரத்தில் இருந்து மிகுவெல் லோபேஸ் டி லெகாஸ்பி (Miguel López de Legazpi) என்பவரின் வருகையுடன் 1565-இல் இந்தத் தீவுக் கூட்டத்தின் முதலாவது எசுப்பானியக் குடியிருப்பு நிறுவப்பட்டது. பிலிப்பீன்சு 300 ஆண்டுகளுக்கும் மேலாக எசுப்பானியப் பேரரசின் பகுதியாக இருந்தது.[4]
மயாபாகித்து பேரரசு
[தொகு]சுலு தீவுக்கூட்டம் ஒரு காலத்தில் மயாபாகித்து பேரரசின் (Majapahit Empire) ஒரு பகுதியாக இருந்தது. 1365-இல் எழுதப்பட்ட "நகரகிரேதாகமம்" (Nagarakretagama) எனும் சாவக நூலின் படி, "சோலோட்" (Solot) என்ற பெயரில் சுலு தீவுக்கூட்டம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் பிறகு, 1578-இல் சுதந்திரம் பெறுவதற்கு முன்பு புரூணை சுல்தானகத்தின் ஒரு பகுதியாக மாறியது.[5]
எசுப்பானிய இராணுவ ஆக்கிரமிப்பு
[தொகு]சுலு தீவுக்கூட்டத்தின் மீது எசுப்பானியக் கிழக்கிந்தியா (Spanish East Indies) ஆட்சியை, எசுப்பானியர்கள் திணிக்கத் தொடங்கியபோது, பல்வேறான மோதல்கள் ஏற்பட்டன. தவிர காலனித்துவ பிலிப்பீன்சு காலத்தின் (1565 - 1946) போது, சூலு சுல்தானகத்திற்கு எதிரான எசுப்பானிய இராணுவ ஆக்கிரமிப்புகள் தொடங்கப்பட்டன.
1899 - 1913-ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக, தென்மேற்கு பிலிப்பீன்சில் உள்ள மோரோ மக்களின் பகுதிகளில் சுதந்திர இயக்கம் (Moro Independence Movement) உருவானது. அதனைத் தொடர்ந்து பற்பல மோரோ கிளர்ச்சிகளும் (Moro Rebellion) தோன்றின. இன்றும் தொடர்கின்றன.
மேலும் காண்க
[தொகு]- மலேசியா-பிலிப்பீன்சு எல்லை
- முசுலிம் மிண்டனாவோ தன்னாட்சிப் பகுதி
- அபு சயாப்
- பிலிப்பினோ மக்கள்
- மலுக்கு கடல்
- சாவகக் கடல்
மேற்கோள்
[தொகு]- ↑ C.Michael Hogan. 2011. "Celebes Sea". In P. Saundry & C. J. Cleveland (eds.). Encyclopedia of Earth. National Council for Science and the Environment. Washington, D.C.
- ↑ Scott, William Henry (1984). "1. Archeology". Prehispanic Source Materials for the Study of Philippine History. Quezon City: New Day. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 971-10-0227-2.
- ↑ Wernstedt, Frederick L.; Spencer, Joseph Earle (1967). The Philippine Island world: a physical, cultural, and regional geography. University of California Press. p. 37. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-03513-3.
- ↑ "History of Cebu". Cebu City Tour. பார்க்கப்பட்ட நாள் 22 பெப்ரவரி 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Ring, Trudy; Salkin, Robert M; La Boda, Sharon (January 1996). International Dictionary of Historic Places: Asia and Oceania. Taylor & Francis. pp. 160–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-884964-04-6.
மேலும் படிக்க
[தொகு]- William Larousse; Pontificia Università gregoriana. Centre "Cultures and Religions." (2001). "Chapter Two. Muslim–Christian Relatrions -- the Moro Wars : 1565–1898". A local Church living for dialogue: Muslim-Christian relations in Mindanao-Sulu, Philippines : 1965-2000. Editrice Pontificia Università Gregoriana. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-88-7652-879-8.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் சூலு தீவுக்கூட்டம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.