உள்ளடக்கத்துக்குச் செல்

சூலிச்சேரி

ஆள்கூறுகள்: 10°35′35″N 76°11′23″E / 10.593020°N 76.189610°E / 10.593020; 76.189610
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூலிச்சேரி
Choolissery
குடியிருப்புப் பகுதி
சூலிச்சேரி Choolissery is located in கேரளம்
சூலிச்சேரி Choolissery
சூலிச்சேரி
Choolissery
இந்தியாவின் கேரளாவில் அமைவிடம்
சூலிச்சேரி Choolissery is located in இந்தியா
சூலிச்சேரி Choolissery
சூலிச்சேரி
Choolissery
சூலிச்சேரி
Choolissery (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°35′35″N 76°11′23″E / 10.593020°N 76.189610°E / 10.593020; 76.189610
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்திருச்சூர்
மொழிகள்
 • அலுவல்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுகே.எல்-

சூலிச்சேரி (Choolissery) என்பது இந்தியாவின் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியாகும்.[1] நெல் வயல்களால் சூழப்பட்டுள்ள இக்கிராமம் திருச்சூர் நகரத்திலிருந்து 5 நிமிட பயண தூரத்தில் உள்ளது. சூலிச்சேரி முன்பு ஓய்வூதியதாரர்களின் சொர்க்கமாகக் கருதப்பட்டது, ஆனால் சமீபத்தில் இது திருச்சூர் நகரத்திற்கு அருகிலுள்ள முக்கிய குடியிருப்பு மையங்களில் ஒன்றாக மாறியுள்ளது. நகர மையம், மருத்துவமனைகள், நெடுஞ்சாலைகள், பள்ளிகள் போன்றவற்றுக்கு இங்கிருந்து எளிதாக அணுக முடியும். சூலிச்சேரியின் பசுமையான நெல் வயல்கள் காரணமாக இன்னும் புதிய மாசுபடாத காற்று மற்றும் தண்ணீரை இங்கிருந்து அனுபவிக்க முடியும். அவனூர் கிராமப் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியாக உள்ளது.

போக்குவரத்து

[தொகு]

சூலிச்சேரி சாலை மற்றும் தொடருந்து மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. திருச்சூரில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அருகிலும் உள்ளது. திருச்சூர் தொடருந்து நிலையம் 7 கிலோமீட்டர் தொலைவிலும் , பொங்குன்னம் தொடருந்து நிலையம் 5.5 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளன.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 2008-12-08. Retrieved 2008-12-10.
  2. "GOVERNMENT MEDICAL COLLEGE, THRISSUR". Archived from the original on 2013-05-18.

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூலிச்சேரி&oldid=4340044" இலிருந்து மீள்விக்கப்பட்டது