சூர்யா (திரை வரலாறு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சூர்யா (Suriya) என்பவர் இந்தியத் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் (திரைப்படம்) ஆவார். இவர் பெரும்பான்மையாக தமிழ் மொழித் திரைப்படங்களில் நடிப்பவர். இவரின் முதல் படமான நேருக்கு நேர் திரைப்படம் வணிக ரீதியில் வெற்றி பெற்றது.[1][2] 1997 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படத்தை வசந்த் இயக்கிருந்தார். ஆனால் இதன் பிறகு வெளியான திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெறவில்லை. குறிப்பாக காதலே நிம்மதி (1998), சந்திப்போமா (1998),பெரியண்ணா (1999),[3] பூவெல்லாம் கேட்டுப்பார் (1999). இந்தத் திரைப்படத்தில் இவருடன் இணைந்து நடித்த ஜோதிகாவை இவர் மணந்துகொண்டார்.[1][4]

2001 ஆம் ஆண்டில் பாலாவின் (இயக்குனர்) இயக்கத்தில் பிதாமகன் திரைப்படத்தில் நடித்தார். இதில் இவர் திருந்தி வாழும் முன்னாள் குற்றவாளியாக நடித்திருப்பார்.[5] இந்தப் படம் இவருக்கு விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. மேலும் இவரின் திரைப்பட வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.[6][7] 2003 இல் கௌதம் மேனன் இயக்கத்தில் காக்க காக்க திரைப்படத்தில் நடித்தார். இதில் ஒரு காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பார். இந்த இரு திரைப்படங்களும் விமர்சன , வியாபார ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது. இதன் மூலம் தமிழகத் திரைப்படத்துறை முன்னணி நாயகர்களில் ஒருவரானார்.[1][8] மேலும் 51 வது பிலிம்பேர் விருதுகளில் சிறந்த ஆண் துணை நடிகருக்கான விருதிற்கு பிதாமகன் திரைப்படத்தில் நடித்தற்காக பரிந்துரை செய்யப்பட்டது.[9] பின் பேரழகன் திரைப்படத்தில் கல்லூரி மாணவராகவும், கூன் விழுந்த நபராகவும் இரு வேடங்களில் நடித்திருப்பார். இதில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் இந்தத் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான 52 வது பிலிம்பேர் விருது பெற்றார்.[5][10] 2004 ஆம் ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் ஆய்த எழுத்து (திரைப்படம்) நடித்தார். இவர் இதில் மாணவ தலைவர் வேடத்தில் நடித்திருந்தார்.[5]

2005 ஆம் ஆண்டில் சூர்யா மாயாவி (2005 திரைப்படம்), கஜினி (திரைப்படம்) ,ஆறு ஆகிய மூன்று திரைப்படங்களில் நாயகனாக நடித்தார. கஜினியில் மறதிநோய் உள்ளவராக நடித்திருப்பார்.[7] இந்தத் திரைப்படம் பாலிவுட்டில் மொழிமாற்றம் செய்யப்பட்டு (கஜினி (2008 திரைப்படம்) அதே பெயரில் வெளியானது. மாயாவி, ஆறு ஆகிய இரு திரைப்படங்களும் வெற்றிப் படமாக அமைந்தது.[11][12] 2006 இல் சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்), 2007 இல் வேல் (திரைப்படம்) போன்றவற்றில் நடித்தார். இதில் வேல் வணிக ரீதியில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.[13][14] 2008 இல் மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் நடித்தார். இதில் தந்தை, மகன் ஆகிய இருவேடங்களில் நடித்திருப்பார். இந்தத் திரைப்படத்திற்காகவும் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்றார்.[15][16]

2009 இல் அயன் (திரைப்படம்), ஆதவன் (திரைப்படம்) ஆகிய திரைப்படங்களில் நடித்தார். 2010 ஆம் ஆண்டில் சிங்கம் திரைப்படத்தில் நடித்தார். இதில் அனுசுக்கா செட்டி உடன் நடித்திருப்பார். இந்தப் படத்தின் வெற்றியினைத் தொடர்ந்து சிங்கம் 2 , சி3 (திரைப்படம்) ஆகியவை வெளியாகின.[17] ராம் கோபால் வர்மா இயக்கத்தில் இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவான ரத்தசரித்திரம் திரைப்படத்தில் நடித்தார்.[18] ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஏழாம் அறிவு (திரைப்படம்) திரைப்படத்தில் போதி தருமன் வேடத்தில் நடித்தார். இவரது மனைவி ஜோதிகா நடித்த 36 வயதினிலே எனும் திரைப்படத்தை தயாரித்தார்.[19]


சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Srinivasan, Pavithra (20 October 2011). "Looking at Suriya's landmark films". Rediff.com. மூல முகவரியிலிருந்து 15 January 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 15 January 2017.
  2. Srinivasan, Pavithra (11 November 2008). "The best of Surya". Rediff.com. மூல முகவரியிலிருந்து 16 January 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 13 January 2017.
  3. Rangarajan, Malathi (9 June 2000). "Each step is a measured one". தி இந்து. Archived from the original on 16 January 2017. https://web.archive.org/web/20170116123648/http://www.thehindu.com/2000/06/09/stories/09090224.htm. பார்த்த நாள்: 16 January 2017. 
  4. Sudhish Kamath; Shankar, T.S.; Radhakrishnan, R.K. (11 July 2001). "Talk of the Town". The Hindu. Archived from the original on 16 January 2017. https://web.archive.org/web/20170116123338/http://www.thehindu.com/2001/07/11/stories/0411401v.htm. பார்த்த நாள்: 16 January 2017. 
  5. 5.0 5.1 5.2 Ramachandran, Naman (22 July 2013). "Singam On Song". அவுட்லுக். மூல முகவரியிலிருந்து 17 January 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 17 January 2017.
  6. Pillai, Sreedhar (24 July 2002). "A chip off the old block". The Hindu. Archived from the original on 17 January 2017. https://web.archive.org/web/20170117083719/http://www.thehindu.com/thehindu/mp/2002/07/24/stories/2002072400140200.htm. பார்த்த நாள்: 17 January 2017. 
  7. 7.0 7.1 Rajpal, Roktim (23 July 2015). "Happy Birthday Suriya: 5 performances that make him the 'Singam' of Tamil cinema". CNN-News18. மூல முகவரியிலிருந்து 17 January 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 17 January 2017.
  8. Pillai, Sreedhar (29 December 2003). "Reel of fortune". The Hindu. Archived from the original on 17 January 2017. https://web.archive.org/web/20170117085958/http://www.thehindu.com/thehindu/mp/2003/12/29/stories/2003122900170100.htm. பார்த்த நாள்: 17 January 2017. 
  9. "51st Annual Manikchand Filmfare Award winners". The Times of India. 4 June 2004. Archived from the original on 26 January 2015. https://archive.is/20150126140422/http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/51st-Annual-Manikchand-Filmfare-Award-winners/articleshow/718496.cms. பார்த்த நாள்: 28 March 2016. 
  10. Surendran, Anusha (18 April 2016). "Twice as nice". The Hindu. Archived from the original on 5 March 2017. https://web.archive.org/web/20170305081344/http://www.thehindu.com/news/cities/mumbai/entertainment/twice-as-nice/article8488429.ece. பார்த்த நாள்: 17 January 2017. 
  11. "Chennai box-office (Mar 25 – 27)". Sify (30 March 2005). மூல முகவரியிலிருந்து 19 January 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 19 January 2017.
  12. "Chennai box-office (Jan 06 – 08)". Sify (10 January 2006). மூல முகவரியிலிருந்து 19 January 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 19 January 2017.
  13. "Vel". Sify (9 November 2007). மூல முகவரியிலிருந்து 15 January 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 15 January 2017.
  14. Pillai, Sreedhar (24 October 2008). "Diwali dampeners". The Times of India. Archived from the original on 19 January 2017. https://archive.is/20170119104447/http://epaper.timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&Source=Page&Skin=TOI&BaseHref=TOICH%2F2008%2F10%2F24&PageLabel=25&EntityId=Ar02500&ViewMode=HTML&GZ=T. பார்த்த நாள்: 19 January 2017. 
  15. "56th Filmfare Awards 2008 given away". Sify (3 August 2009). மூல முகவரியிலிருந்து 19 January 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 19 January 2017.
  16. Rangarajan, Malathi (21 November 2008). "An ode to dad dearest — Vaaranam Aayiram". The Hindu. Archived from the original on 15 January 2017. https://web.archive.org/web/20170115134248/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/An-ode-to-dad-dearest-Vaaranam-Aayiram/article15400806.ece. பார்த்த நாள்: 15 January 2017. 
  17. "S3 now becomes C3 for tax-exemption!". Sify (17 January 2017). மூல முகவரியிலிருந்து 18 January 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 18 January 2017.
  18. "Birthday special: Vivek Oberoi's 5 memorable performances". Mid Day. 3 September 2015. Archived from the original on 16 January 2017. https://web.archive.org/web/20170116100205/http://www.mid-day.com/articles/birthday-special-vivek-oberois-5-memorable-performances/16506199. பார்த்த நாள்: 16 January 2017. 
  19. Menon, Vishal (3 May 2016). ""Suriya has Rs.50 crore market potential in Andhra, Telangana"". The Hindu. Archived from the original on 19 January 2017. https://web.archive.org/web/20170119131016/http://www.thehindu.com/features/cinema/gnanavel-raja-speaks-on-suriyas-24/article8551774.ece. பார்த்த நாள்: 19 January 2017. 

வெளியிணைப்புகள்[தொகு]

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் சூர்யாவின் திரைவரலாறு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூர்யா_(திரை_வரலாறு)&oldid=2800208" இருந்து மீள்விக்கப்பட்டது