சூரிய வெப்ப ஈட்டக் குணகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூரிய வெப்ப ஈட்டக் குணகம் (solar heat gain coefficient) அல்லது சூரிய வெப்ப ஈட்டக் கெழு என்பது, கட்டிடம் ஒன்றில் உள்ள சாளரமொன்றில் நேரடியாகப் படும் மொத்த சூரிய ஆற்றலுக்கும், சாளரத்தின் ஊடாகச் செல்லும் வெப்ப ஆற்றலுக்கும் இடையிலான விகிதம் ஆகும். முன்னர் சாளரங்களின் இதே செயற்பாட்டின் அளவீடாக இருந்த நிழற்றுக் குணகத்துக்குப் பதிலாக தற்காலத்தில் இது பயன்படுகின்றது. கண்ணாடிகளின் வகை, அவற்றின் நிறம், அவற்றின் மீது பூசப்படுகின்ற பூச்சின் வகை போன்றவை இந்த அளவீட்டின் மீது தாக்கத்தைக் கொண்டுள்ளன. இதில் சாளரங்கள் மீது படும் ஆற்றல், உட் செல்லும் ஆற்றல் என்பவற்றைக் கணிக்கும்போது கண்ணாடிப் பகுதியில் மட்டுமன்றி அவற்றின் சட்டங்கள் உட்பட எல்லாப் பகுதிகளும் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.


இது ஒரு விகிதம் ஆகையால் இதற்கு அலகு இல்லை. 1.00 க்கும் 0.00 க்கும் இடைப்பட்ட ஒரு எண்ணினால் குறிக்கப்படுகின்றது. இதன் அளவு குறையும்போது சாளரங்கள் உள்ளே விடும் வெப்ப ஆற்றலின் அளவும் குறைவாக இருக்கும். அதனால் அவற்றின் நிழற்றுத்திறன் கூடும்.