சூரிய ஒளிக்கற்றைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூரிய ஒளிக்கற்றை பிரேசில் நாட்டில்

சூரிய ஒளிக்கற்றைகள் (Crepuscular rays) என்பது, வளிமண்டல ஒளியியலில், சூரியன் இருக்கும் வானத்தின் புள்ளியில் சூரிய ஒளியின் கதிர்கள் பிரகாசமாய் ஒளிர்வதாக தோன்றும். இக்கதிர்கள், மேகங்களின் இடைவெளியில் செல்லும் (குறிப்பாக (முகிற் கூட்டத் திரள்) அல்லது மற்ற பொருள்களுக்கு நடுவில் செல்லும், கருத்த மேக-நிழல் பகுதிகளில் இருந்து பிரிக்கப்பட்ட சூரிய ஒளி வீசும் காற்று தூண்கள் ஆகும். ஒரு புள்ளியில் குவிவதைப் போல தோன்றினாலும் கதிர்கள் சூரிய ஒளியின் அச்சுக்கு இணையானவை. இவற்றின் வெளிப்படையான குவிதல் என்பது தொலைநோக்கின் விளைவு.

மெல்லொளி[1] நேரங்களில் (வைகறை மற்றும் அந்தி வேளைகளில்) சூரிய ஒளிக்கற்றைகள் தோன்றுகின்றன, அப்பொழுதுதான் வெளிச்சம் மற்றும் இருட்டுக்கு இடையேயான முறன் மிக வெளிப்படையாக தோன்றும்.

எதிர் சூரியக்கதிர்கள்[தொகு]

எதிர் சூரியக்கதிர்கள் சில நேரங்களில் வானத்தின் குறுக்காக நீண்டு காணப்படும் மற்றும் சூரிய-எதிர் புள்ளியில்[2] குவிவது போல் தோன்றும், இப்புள்ளி வானத்தில் சூரியனுக்கு நேரெதிர் புள்ளியில் தோன்றும். சூரிய ஒளிக்கற்றைகள் போன்று எதிர் சூரியக்கதிர்கள் எளிதில் தென்படுவதில்லை.

நிறம்[தொகு]

சூரிய ஒளிக்கற்றைகள் பொதுவாக செம்மஞ்சள் நிறமாக தோன்றும் ஏனென்றால் சூரிய உதயம் மற்றும் சூரிய மறைவின் போது கதிர்கள் நன்பகலை விட 40 மடங்கு அதிக காற்றுக்கு நடுவில் பயணிக்க வேண்டும்.

படத்தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Edens, Harald. "Crepuscular rays". Weather Photography lightning, clouds, atmospheric optics & astronomy. http://www.weatherscapes.com/album.php?cat=optics&subcat=crepuscular_rays. பார்த்த நாள்: November 1, 2011. 
  2. Cowley, Les. "Anti-solar (anti-crepuscular) rays". Atmospheric Optics. http://www.atoptics.co.uk/atoptics/anti1.htm. பார்த்த நாள்: March 19, 2015. 

குப்பு:துப்புரவு முடிந்த கோயம்புத்தூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரிய_ஒளிக்கற்றைகள்&oldid=3838026" இருந்து மீள்விக்கப்பட்டது