சூரிய உப்பு நீர் வடிகட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூரிய உப்பு நீர் வடிகட்டி (Solar still) என்பது உப்பு நீரைக் குடிநீராக, சூரிய ஆற்றலின் உதவியுடன் மாற்ற உதவும் ஒரு சூரியக் கருவியாகும்.[1] கலனில் சேகரிக்கப்பட்ட உப்பு நீர் சூரிய ஆற்றலின் உதவியால் ஆவியாகிறது. மேலே உள்ள கண்ணாடியில் இந்த நீராவி பட்டு குளிர்ச்சி அடைந்து தூய நீராக கலனில் சேகரமாகிறது. கண்ணாடி அல்லது தூய நெகிழித்தகடு சரிவாக இருப்பதால் நீர் சேகரிப்பு சாத்தியமாகிறது. பல வகையான சூரிய உப்பு நீர் வடிகட்டிகள் உள்ளன. ஒரு பக்க சாய்வு, இரு பக்க சாய்வு வடுகட்டிகள் மற்றும் பெரிய அளவிலான வடிகட்டிகள் உள்ளன.

இந்த செயல்முறையினால் உப்புகள் மற்றும் கன உலோகங்கள் போன்ற அசுத்தங்கள் நீக்கப்படுகின்றன. மேலும் நுண்ணுயிரிய உயிரினங்களும் நீக்கப்படுகின்றன. இறுதியில் தூய காய்ச்சி வடிகட்டிய நீர் கிடைக்கிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "How Does a Solar Still Work?". Sciencing (ஆங்கிலம்). 2022-09-03 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Solar Water Distillation". Safe Drinking Water Foundation (ஆங்கிலம்). 2022-09-03 அன்று பார்க்கப்பட்டது.