சூரிய-ஐதரசன் ஆற்றல் சுழற்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூரிய-ஐதரசன் ஆற்றல் சுழற்சி (Solar–hydrogen energy cycle) என்பது சூரிய சக்தியில் இயங்கும் மின்பகுப்பியைப் பயன்படுத்தி தண்ணீரை ஐதரசன் மற்றும் ஆக்சிசனாக மாற்றுகின்ற வகை ஆற்றல் சுழற்சியாகும். இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் ஐதரசன் மற்றும் ஆக்சிசன் வாயுக்கள் சேகரிக்கப்பட்டு சூரிய ஒளி கிடைக்காதபோது மின்சாரம் தயாரிக்க எரிபொருள் மின்கலத்தால் பயன்படுத்தப்படுகின்றன [1].

செயல்பாட்டு[தொகு]

ஒளிமின்னழுத்த அமைப்புகள் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றுகின்றன. கிடைக்கும் மின்சாரம் நுகர்வுக்குப் பின்னரும் அதிகமாக எஞ்சியிருந்தால் அம்மின்சாரம் கணினியுடன் இணைக்கப்பட்ட சாதனங்களால் கடத்தப்பட்டு இச்சுழற்சியில் ஒரு மின்பகுப்பியை இயக்கப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மின்பகுப்பி தண்ணீரை ஐதரசனாகவும் ஆக்சிசனாகவும் மாற்றுகிறது. இந்த வாயுக்கள் சேகரிக்கப்பட்டு சூரிய ஒளி கிடைக்காதபோது மின்சாரம் தயாரிக்க எரிபொருள் மின்கலத்தால் பயன்படுத்தப்படுகின்றன [1].

சிறப்பம்சங்கள்[தொகு]

கரிம மென்படல சூரிய மின்கலங்களுடன் சூரிய-ஐதரசன் ஆற்றல் சுழற்சியை இணைத்துக் கொள்ள முடியும் [2]. இதேபோல நுண்படிக சிலிக்கன் மென்படல சூரிய மின்கலங்களையும் [3], ஒளிமின்னழுத்த சூரிய மின்கலங்களைப் பயன்படுத்தியும் இணைத்துக் கொள்ளலாம். இத்தகைய சூரிய சக்திகள் ஐதரசன் உற்பத்திக்காக [4] 1972 ஆம் ஆண்டு முதலே இணைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன [5] [5]. இவை சூரிய ஒளியை நேரடியாக இரசாயன சக்தியாக மாற்றும் திறன் கொண்டவையாகும் [5]

ஐதரசன் அயோடைடின் பயன்[தொகு]

இந்த சுழற்சியில் பயன்படுத்தப்படும் எரிபொருளான நீருக்கு மாற்றாகப் பயன்படுத்த ஐதரசன் அயோடைடின் நீரிய கரைசல் எரிபொருளாக முன்மொழியப்பட்டது. ஐதரசன் அயோடைடுவைப் பிரிப்பது தண்ணீரைப் பிரிப்பதை விட எளிதானது ஆகும். ஏனெனில் அதன் கிப்சு சிதைவுக்கான ஆற்றல் மாற்றம் குறைவாக உள்ளது. எனவே சிலிக்கான் ஒளிமின்னழுத்த மின்வாய்கள் ஐதரசன் அயோடைடை ஐதரசன் மற்றும் அயோடினாக எந்த வெளிப்புற சார்பும் இல்லாமல் சிதைக்க முடிகிறது. [5]

நன்மைகள்[தொகு]

  • இந்த சுழற்சியில் இருந்து வெளியேறுவது தூய்மையான நீர் மட்டுமே என்பதால் சூரிய-ஐதரசன் ஆற்றல் சுழற்சி மாசு ஏதுமில்லாத ஒரு சுழற்சியாக கருதப்படுகிறது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Schatz Solar Hydrogen Project". schatzlab.org. Archived from the original on 2011-03-26. பார்க்கப்பட்ட நாள் 2011-06-18. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. Nakato, Y.; Jia, G.; Ishida, M.; Morisawa, K.; Fujitani, M.; Hinogami, R.; Yae, S. (10 June 1998). "Efficient Solar-to-Chemical Conversion by One Chip of n-Type Silicon with Surface Asymmetry". Electrochem. Solid-State Lett. (Osaka, Japan: Electrochemical Society) 1 (2): 71–73. doi:10.1149/1.1390640. http://scitation.aip.org/getabs/servlet/GetabsServlet?prog=normal&id=ESLEF6000001000002000071000001&idtype=cvips&gifs=yes&ref=no. பார்த்த நாள்: 2011-07-20. 
  3. Yae, Shinji; Kobayashi, Tsutomu; Abe, Makoto; Nasu, Noriaki; Fukumuro, Naoki; Ogawa, Shunsuke; Yoshida, Norimitsu; Nonomura, Shuichi et al. (15 February 2007). "Solar to chemical conversion using metal nanoparticle modified microcrystalline silicon thin film photoelectrode". Solar Energy Materials and Solar Cells (Japan: ScienceDirect) 91 (4): 224–229. doi:10.1016/j.solmat.2006.08.010. 
  4. Fujishima, Akira; Honda, Kenichi (7 July 1972). "Electrochemical Photolysis of Water at a Semiconductor Electrode". Nature (Japan: Nature Publishing Group) 238 (1): 37–38. doi:10.1038/238037a0. பப்மெட்:12635268. 
  5. 5.0 5.1 5.2 5.3 "Water splitting to produce solar hydrogen using silicon thin film". spie.org. பார்க்கப்பட்ட நாள் 2011-08-30.


.