சூரியேந்து தத்தா
தோற்றம்
சூரியேந்து தத்தா (Suryendu Dutta) என்பவர் இந்தியாவின் மும்பையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் புவி அறிவியல் துறையில் பேராசிரியராக உள்ளார். வண்டல்கள், கச்சா எண்ணெய்கள், தாவர வளர்சிதை மாற்றம், களிப்பாறை வளிமம், தொல்லுயிரெச்சத் தோற்ற இயல், புரோட்டின் படிவுமாற்றம், இலிக்னின் வளர்சிதை மாற்றம் ஆகிய பிரிவுகளில் இவரது ஆராய்ச்சி ஆர்வம் இருந்தது.[1] 2001 ஆம் ஆண்டு கொல்கத்தாவின் இயாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டு புவியியலில் முது அறிவியல் பட்டம் பெற்றார். 2003 ஆம் ஆண்டு மும்பை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் புவி ஆய்வுத் துறையில் முதுநிலை தொழில்நுட்ப அறிவியல் பட்டம் பெற்றார், 2006 ஆம் ஆண்டு ஜெர்மனியின் ஆர்.டபிள்யூ.டி.எச். ஆச்சென் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.[1]
விருதுகள்
[தொகு]தத்தாவுக்கு வழங்கப்பட்ட கௌரவங்கள் மற்றும் விருதுகள் பின்வருமாறு:
- 2020 ஆம் ஆண்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி சுவரூப் பட்நாகர் பரிசு[2]
- 2017 ஆம் ஆண்டில் சுவர்ணசெயந்தி உறுப்பினர் கௌரவம்
- 2017 ஆம் ஆண்டில் தேசிய புவி அறிவியல் விருது
- 2017 ஆம் ஆண்டில் பேராசிரியர் எசு பி சுகாத்மே கற்பித்தல் சிறப்பு விருது.
- 2014 ஆம் ஆண்டில் தேசிய அறிவியல் அகாடமியின் இளைய விஞ்ஞானி விருது.
- 2013 ஆம் ஆண்டில் புலனாய்வு மற்றும் தேசிய பாதுகாப்பு கூட்டணியின் உறுப்பினர் கௌரவம்
- 2021 ஆம் ஆண்டில் 100 ஆசிய விஞ்ஞானிகள் பட்டியலில் இடம்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Dr Suryendu Dutta". IIT Bombay. IIT Bombay. Retrieved 26 October 2021.
- ↑ "Brief Profile of the Awardee". Shanti Swarup Bhatnagar Prize for Science and Technology. CSIR Human Resource Development Group. Retrieved 8 October 2021.
- ↑ "The Asian Scientist 100". Asian Scientist. Retrieved 13 March 2025.
வெளி இணைப்புகள்
[தொகு]- ORCID
- சூரியேந்து தத்தா publications indexed by Google Scholar