சூரியச் சுழற்சி 19

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூரியச் சுழற்சி 19
சூரியச் சுழற்சி 19 காலத்தில் தெரிந்த ஒரு சூரியத் துறுத்து (11 ஏப்ரல் 1959).
சூரியப்புள்ளித் தரவு
தொடக்க நாள்ஏப்ரல் 1954
இறுதி நாள்அக்டோபர் 1964
காலம் (வருடங்கள்)10.5
அதிக கணிப்பு201.3
அதிக கணிப்பு மாதம்மார்ச்சு 1958
குறைந்த கணிப்பு9.6
Spotless days227
சுழற்சிக் காலம்
முன் சுழற்சிசூரியச் சுழற்சி 18 (1944-1954)
அடுத்த சுழற்சிசூரியச் சுழற்சி 20 (1964-1976)

சூரியச் சுழற்சி 19 (Solar cycle 19) என்பது 1755 ஆம் ஆண்டிற்குப் பின்னர் சூரியனின் மேற்பரப்பில் உள்ள சூரியப் புள்ளிகளின் செயற்பாட்டை விரிவாகப் பதிவு செய்யத் தொடங்கியபிறகு வகைப்படுத்தப்பட்ட பத்தொன்பதாவது சூரியச் சுழற்சியாகும்[1][2]. இச்சுழற்சி 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி 1964 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையில் 10.5 ஆண்டுகளுக்கு நீடித்ததது. இச்சுழற்சிக் காலத்தின் உச்சத்தில் அனைத்துலக புவியியற்பியல் ஆண்டு அனுசரிக்கப்பட்டது.

பனிரெண்டு மாதங்களின் சராசரி அடிப்படையில், சூரியச் சுழற்சி 12 இன் சூரியப் புள்ளிகளின் மாதாந்திர எண்ணிக்கை அதிகப்பட்சமாக 201.3 (பதிவுகளில் இதுவே அதிகப்பட்சம்)[3]) எண்ணிக்கையும் (மார்ச்சு1958) குறைந்த பட்சமாக 9.6 என்ற எண்ணிக்கையுமாக கணக்கிடப்பட்டது[4]. மேலும், இச்சுழற்சிக் கலத்தில் தோராயமாக 227 நாட்கள் சூரியப்புள்ளிகள் எதுவும் காணப்படாமல் இருந்ததாக கணக்கிடப்பட்டது.

தீவிர நிகழ்வுகள்[தொகு]

பிப்ரவரி 1956 ல் ஏற்பட்ட புவிகாந்தப்புயல் வானொலி தகவல் தொடர்பில் தலையிட்டு இட்ர்பாட்டை உண்டாக்கியது. மற்றும் ஆங்கிலேய நாட்டின் தொடர்பு இழந்த நீர்மூழ்கி கப்பல் அச்சரானைத் தேடும் படலமும் இதனால் நிகழ்ந்தது[5].

11 1958 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 அன்று நிகழ்ந்த செறிவான சிவப்பு வைகறைக் காட்சிகள் ஐரோப்பாவின் மக்களிடம் பீதியை உண்டாக்கியது. இதே காட்சி அமெரிக்காவின் பல நகரங்களிலும் இதுவரை தென்புறத்தில் 40 பாகை அட்சரேகைப் பகுதிகளில் தென்பட்டது. இந்த புவிகாந்தப் புயல் வட அமெரிக்கா முழுவதிலும் வானொலி ஒலிபரப்பில் ஒரு இருட்டடிப்பை ஏற்படுத்தியது.

1960 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 மற்றும் 1961 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆகிய நாட்களில் இதுபோன்ற வைகறை காட்சிகள் நியூயார்க் நகரம் முழுவதும் காணப்பட்டது[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kane, R.P. (2002). "Some Implications Using the Group Sunspot Number Reconstruction பரணிடப்பட்டது 2012-12-04 at Archive.today". Solar Physics 205(2), 383-401.
  2. "The Sun: Did You Say the Sun Has Spots?". Space Today Online. பார்க்கப்பட்ட நாள் 12 August 2010.
  3. Dodson, Helen W.; Hedeman, E. Ruth; Mohler, Orren C. (August 1974). "Comparison of activity in solar cycles 18, 19, and 20". Reviews of Geophysics 12 (3): 329–341. doi:10.1029/RG012i003p00329. 
  4. SIDC Monthly Smoothed Sunspot Number. "[1] பரணிடப்பட்டது 2014-03-28 at the வந்தவழி இயந்திரம்"
  5. Amsterdam Evening Recorder, 24 February 1956
  6. http://www.solarstorms.org/SRefStorms.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரியச்_சுழற்சி_19&oldid=3793934" இலிருந்து மீள்விக்கப்பட்டது