சூரியச் சுழற்சி 15

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூரியச் சுழற்சி 15
பதினைந்தாவது சூரியச் சுழற்சியின் போது பதிவு செய்யப்பட்ட சூரியப் புள்ளிகள்(23 சனவரி 1923).
சூரியப்புள்ளித் தரவு
தொடக்க நாள்ஆகத்து 1913
இறுதி நாள்ஆகத்து 1923
காலம் (வருடங்கள்)10.0
அதிக கணிப்பு105.4
அதிக கணிப்பு மாதம்ஆகத்து 1917
குறைந்த கணிப்பு5.6
Spotless days534
சுழற்சிக் காலம்
முன் சுழற்சிசூரியச் சுழற்சி 14 (1902-1913)
அடுத்த சுழற்சிசூரியச் சுழற்சி 16 (1923-1933)

சூரியச் சுழற்சி 15(Solar cycle 15) என்பது 1755 ஆம் ஆண்டிற்குப் பின்னர் சூரியனின் மேற்பரப்பில் உள்ள சூரியப் புள்ளிகளின் செயற்பாட்டை விரிவாகப் பதிவு செய்யத் தொடங்கியபிறகு வகைப்படுத்தப்பட்ட பதினைந்தாவது சுழற்சியாகும்.[1][2] இச்சுழற்சி 1913 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் தொடங்கி 1923 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் வரையில் 10 ஆண்டுகளுக்கு நீடித்ததது. பனிரெண்டு மாதங்களின் சராசரி அடிப்படையில், சூரியச் சுழற்சி 15 இன் சூரியப் புள்ளிகளின் மாதாந்திர எண்ணிக்கை அதிகப்பட்சமாக 105.4 எண்ணிக்கையும் (ஆகத்து 1917) குறைந்த பட்சமாக 5.6 எண்ணிக்கையுமாக கணக்கிடப்பட்டது[3] . மேலும், இச்சுழற்சிக் கலத்தில் தோராயமாக 534 நாட்கள் சூரியப்புள்ளிகள் எதுவும் காணப்படாமல் இருந்ததாக கணக்கிடப்பட்டது[4][5][6] . 1921 ஆம் ஆண்டு 13 -15 நாட்களில் அதிகாமான புவிகாந்தப் புயல்கள் தகவல் தொடர்பை பெரிதும் பாதித்தன. கிழக்கு அமெரிக்கப் பகுதிகளில் வைகறை தோற்றக் காட்சிகளும் பாதிக்கப்பட்டன[7]

பதினைந்தாவது சூரியச் சுழற்சிக் காலத்தில் 1918 மார்ச்சு, ஆகத்து 1905 , அக்டோபர் 1909 மற்றும் 1920 ஆம் ஆண்டு மார்ச்சு மாதங்களில் புவிகாந்தப் புயல்கள் தொலைவரிச் செய்தி அனுப்பும் திட்டத்தைப் பாதித்தன. 1921 ஆம் ஆண்டு மே மதத்தில் நிகழ்ந்த சூரியப் பேரோளி நியூயார்க் தொடருந்து போக்குவரத்து சமிக்ஞைகளைப் பாதித்தது."[8]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரியச்_சுழற்சி_15&oldid=3793931" இருந்து மீள்விக்கப்பட்டது