உள்ளடக்கத்துக்குச் செல்

சூரியகாந்த வியாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூரியகாந்த வியாசு
உறுப்பினர் இராசத்தான் சட்டப் பேரவை
பதவியில்
2008–2023
முன்னையவர்மோகன் மேக்வால்
தொகுதிசூர்சாகர்
பதவியில்
2003–2008
முன்னையவர்ஜூகல் காப்ரா
பின்னவர்கைலாசு பான்சாலி
தொகுதிசோத்பூர்
பதவியில்
1990–1998
முன்னையவர்பைரத் மால்
பின்னவர்ஜூகல் காப்ரா
தொகுதிசோத்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1938-02-23)23 பெப்ரவரி 1938
சோத்பூர், ஜோத்பூர் சமஸ்தானம், இந்தியா
இறப்பு25 செப்டம்பர் 2024(2024-09-25) (அகவை 86)
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்சோத்பூர், இந்தியா
பணிசமூகப்பணி

சூரியகாந்த வியாசு (Suryakanta Vyas)(23 பிப்ரவரி 1938 - 25 செப்டம்பர் 2024) என்பவர் பாசத்துடன் ஜிஜி என்று அழைக்கப்பட்டவர் இந்திய அரசியல்வாதியும் இராசத்தானில் உள்ள புஷ்கர்ண பிராமணச் சமூகத்தில் ஒரு நபராகவும் இருந்தார். இவர் இராசத்தான் சட்டமன்றத்தில் ஆறு முறை சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்துள்ளார். 2008ஆம் ஆண்டு சூர்சாகர் சட்டமன்றத் தொகுதிக்கு மாறுவதற்கு முன்பு ஜோத்பூர் தொகுதியிலிருந்து மூன்று முறை போட்டியிட்டார்.[1]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

வியாசு இராசத்தான் சட்டமன்ற உறுப்பினராக ஆறு முறை பணியாற்றியுள்ளார். இவரது முதல் மூன்று பதவிக்காலத்தில், 1990, 1993 மற்றும் 1998ஆம் ஆண்டுகளில் ஜோத்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2008, 2013 மற்றும் 2018 இராசத்தான் சட்டமன்றத் தேர்தல்களில் சூர்சாகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2]

இறப்பு

[தொகு]

வியாசு 25 செப்டம்பர் 2024 அன்று தனது 86 வயதில் இறந்தார்.[3][4]

விருதுகள்

[தொகு]

சமூகத்தின் வளர்ச்சிக்கான பங்களிப்புகளுக்காக வியாசு பலமுறை கௌரவிக்கப்பட்டார். ஜோத்பூர் தொகுதியிலும் இராசத்தான் சட்டமன்றத்திலும் மிகவும் பிரபலமான நபர்களில் ஒருவராக இவர் இருந்தார். தனது சொற்பொழிவுத் திறமைக்குப் பெயர் பெற்ற இவர், 2012ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத்தில் சிறந்த உறுப்பினராகவும் அங்கீகரிக்கப்பட்டார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "भाजपा की वरिष्ठ नेता सूर्यकांता व्यास का निधन, 6 बार विधायक रहीं 'जीजी' ने अस्पताल में तोड़ा दम". Navbharat Times (in இந்தி). Retrieved 2024-09-26.
  2. "Jodhpur’s ‘Jiji’, 6-time BJP MLA Suryakanta Vyas passes away". The Times of India. 2024-09-26. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-8257. https://timesofindia.indiatimes.com/city/jodhpur/jodhpurs-jiji-6-time-bjp-mla-suryakanta-vyas-passes-away/articleshow/113694650.cms.
  3. "Suryakanta Vyas Passes Away: BJP Leader and Former Jodhpur MLA Dies at 86". www.lokmattimes.com. Retrieved 2024-09-25.
  4. "Former Jodhpur MLA Suryakanta Vyas passed away". Zoom News (in ஆங்கிலம்). 2024-09-25. Retrieved 2024-09-25.
  5. "12 sitting, former MLAs felicitated as best MLAs for different yrs in Raj". 7 March 2018. https://www.business-standard.com/article/pti-stories/12-sitting-former-mlas-felicitated-as-best-mlas-for-different-yrs-in-raj-118030700002_1.html.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரியகாந்த_வியாசு&oldid=4234807" இலிருந்து மீள்விக்கப்பட்டது