சூரஜ்குண்டு மேளா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சூரஜ்குண்டு மேளா என்பது கலைப்பொருட்களை காட்சிப்படுத்தும் விழாவாகும். இந்த திருவிழா இந்திய மாநிலமான அரியானாவிலுள்ள சூரஜ்குண்டு என்ற இடத்தில் நடைபெறும். இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரியின் முதல் இரண்டு வாரங்களுக்கு நடக்கிறது. நாட்டுப்புறப் பாடகர்களும், நடனக் கலைஞர்களும் கலை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இதை பார்க்க ஆண்டுதோறும் ஆயிரக்கணாக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். உள்ளூர் மக்களின் கைவண்ணத்தில் செய்யப்படும் கலைப்பொருட்களும், கைவினைப் பொருட்களும் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. அத்துடன் பல்வேறு வகையான உணவுவகைகளும் பரிமாறப்படுகின்றன.[1]

கருப்பொருள்[தொகு]

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு இந்திய மாநிலத்தை முன்னிறுத்தி விழா நடத்தப்படும்.[2] ஆண்டு வாரியாக முன்னிறுத்தப்பட்ட மாநிலங்களின் பட்டியலை கீழே காண்க.

ஆண்டு மாநிலம்
1987 -----
1988 -----
1989 ராஜஸ்தான்
1990 மேற்கு வங்காளம்
1991 கேரளம்
1992 மத்தியப் பிரதேசம்
1993 ஒடிசா
1994 கர்நாடகம்
1995 பஞ்சாப்
1996 இமாச்சலப் பிரதேசம்
1997 குஜராத்
1998 வடகிழக்கு மாநிலங்கள்
1999 ஆந்திரப் பிரதேசம்
2000 ஜம்மு காஷ்மீர்
2001 கோவா
2002 சிக்கிம்
2003 உத்தராகண்ட்
2004 தமிழ்நாடு
2005 சத்தீஸ்கர்
2006 மகாராஷ்டிரா
2007 ஆந்திரப் பிரதேசம்
2008 மேற்கு வங்காளம்
2009 மத்தியப் பிரதேசம்

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரஜ்குண்டு_மேளா&oldid=2916329" இருந்து மீள்விக்கப்பட்டது