சூரக்கோட்டை பரமநாத அய்யனார் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சூரக்கோட்டை பரமநாத அய்யனார் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் அருகே அமைந்துள்ள அய்யனார் கோயில்களில் ஒன்றாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் தஞ்சாவூருக்குத் தென்கிழக்கே 8 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

மூலவர்[தொகு]

தமிழ்நாட்டில் கிராமப்புறக் காவல் தெய்வங்களாக அந்ந்த ஊரில் எல்லையில் யானையையும், குதிரையையும், மதுரைவீரனையும் கொண்டு அய்யனார் கோயிலும், பிடாரியம்மன் கோயிலும், விநாயகர் கோயிலும் காணப்படுவதுண்டு. இங்குள்ள மூலவர் பரமநாத அய்யனார், பூரணை புஷ்கலையுடன் ஒரு காலை மடக்கியபடி அமர்ந்த நிலையில் உள்ளார்.[1]

பிற சிலைகள்[தொகு]

மதுரை வீரன், பொம்மி மற்றும் வெள்ளையம்மாளுடன் சன்னதியில் எழுந்தருளியுள்ளார். இக்கோயிலில் முனீசுவரன், பேச்சியம்மன், நாகப்பன் முதலியோர் சன்னதிகள் உள்ளன. கன்னிமூலையில் மங்கள விநாயகரும் உள்ளனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. திருக்கோயில்கள் வழிகாட்டி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014
  2. அய்யனார் கோயில்கள்

வெளி இணைப்புகள்[தொகு]