சூப்பர் மாம் 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூப்பர் மாம் 2
சூப்பர் மாம் 2.jpg
வகைவிளையாட்டு
போட்டி
நிகழ்ச்சி
வழங்கல்அர்ச்சனா
சாரா
நாடுஇந்தியா
மொழிதமிழ்மொழி
பருவங்கள்2
அத்தியாயங்கள்16
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்சபரேஷ்
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 50–60 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்10 நவம்பர் 2019 (2019-11-10) –
8 மார்ச்சு 2020 (2020-03-08)
Chronology
தொடர்புடைய தொடர்கள்சூப்பர் மாம்

சூப்பர் மாம் 2 என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் நவம்பர் 10, 2019 முதல் மார்ச்சு 8, 2020 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பான குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் கலந்து கொண்ட ஒரு பொழுதுபோக்கு குடும்ப விளையாட்டு போட்டி நிகழ்ச்சி ஆகும்.[1] இது 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பான சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியின் இரண்டாம் பருவம் ஆகும்.

இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளினி அர்ச்சனா மற்றும் அவரது மகள் சாரா இணைத்து தொகுத்து வழங்குகின்றார்கள்.[2][3]இந்த பருவத்தில் சின்னத்திரை பிரபலங்கள் அவரது குழந்தைகளுடன் கலந்துக்கொண்டனர். இதில் அம்மாவுக்கும் குழந்தைக்கும் பல்வேறு போட்டிகள் வைத்து, அதில் யார் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அவர்கள் தான் சூப்பர் மாம் என்ற பட்டம் வெல்லுவார். இந்த பருவத்தின் வெற்றியாளர் அகிலா மற்றும் அவரது மகள் தனவிருத்திகா, இரண்டாவது வெற்றியாளர் காயத்ரி மற்றும் அவரது மகன் தருண் ஆகும்.

போட்டியாளர்கள்[தொகு]

 • சாந்தி - தாரக்
 • அனிஷா - சாஷா
 • காயத்ரி - தருண்
 • நித்யா - போஷிகா
 • சுலபா - சாம்ரித்
 • ஜானகி - மாக்ஷி
 • தேவி - யுவினா
 • நீபா - ஸ்ரேயா
 • ஆர்த்தி - தியோ
 • அகிலா - தனவிருத்திகா

மேற்கோள்கள்[தொகு]

 1. "'Super Mom 2' to premiere soon". timesofindia.indiatimes.com.
 2. "ஜீ தமிழ் டிவியின் சூப்பர் மாம் சீசன் 2 நீங்க ரெடியா?". tamil.oneindia.com.
 3. "Archana and her daughter Zaara are co-hosting the show Super Mom". timesofindia.indiatimes.com.

வெளி இணைப்புகள்[தொகு]

ஜீ தமிழ் : இரவு மாலை 8 மணி நிகழ்ச்சிகள்
முன்னைய நிகழ்ச்சி சூப்பர் மாம் 2
(10 நவம்பர் 2019 - 8 மார்ச்சு 2020)
அடுத்த நிகழ்ச்சி
- -
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூப்பர்_மாம்_2&oldid=3249256" இருந்து மீள்விக்கப்பட்டது