சூப்பர் சிங்கர் 7

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூப்பர் சிங்கர் (பருவம் 7)
வழங்கியவர்பிரியங்கா
மா கா பா ஆனந்த்
நடுவர்கள்பி. உன்னிகிருஷ்ணன்
அனுராதா ஸ்ரீராம்
சுஜாதா மோகன்
பென்னி தயாள்
நாடுஇந்தியா
நிகழ்வுகளின் எண்.57
வெளியீடு
தொலைக்காட்சி நிறுவனம்விஜய் தொலைக்காட்சி
வெளியீடு27 ஏப்ரல் 2019 (2019-04-27) –
10 நவம்பர் 2019 (2019-11-10)
பருவ காலவரிசை
← முன்னையது
பருவம் 6

சூப்பர் சிங்கர் 7 என்பது விஜய் தொலைக்காட்சியில் 27 ஏப்ரல் முதல் 10 செப்டம்பர் 2019 ஆம் ஆண்டு வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பான உண்மைநிலை பாட்டு போட்டி நிகழ்ச்சி ஆகும்.[1] இது எயார்டல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் வரிசையில் ஏழாவது பருவம் ஆகும்.[2] ஆசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் இரண்டாவது முறையாக இந்த நிகழ்ச்சித் தொடருக்கு விளம்பரதாரராக முன்வந்தனர்.[3]

இந்த நிகழ்ச்சியை மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேசுபாண்டே மீண்டும் தொகுத்து வழங்கினர். இந்நிகழ்ச்சியின் நடுவர்களாக பிரபல பின்னணி பாடகர்களான உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், சுவேதா மோகன் மற்றும் பென்னி தயாள் ஆகியோர் செயல்பட்டனர். இசை இயக்குனர் அனிருத் ரவிச்சந்திரன் இந்த பருவத்தின் நிகழ்ச்சியின் விளம்பரத்தூதராக இருந்தார். வெற்றியாளருக்கு திரைப்படத்தில் அனிருத்தின் இசையில் பாட வாய்ப்பு வழங்கப்படும் என்பது சிறப்புக்குரியதாய் இருந்தது. இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றவர்களில் புன்யா, முருகன், விக்ரம், கௌதம் மற்றும் சாம் விஷால் ஆகியோர் அடங்குவர். இவர்களில் முருகன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். விக்ரம் இரண்டாவது இடத்தில் இருந்தார். மூன்றாம் இடத்திற்கு புன்யா மற்றும் சாம் விஷால் ஆகியோர் சமநிலையில் இருந்தனர். கிராண்ட் ஃபைனலில் அனிருத் , சாம் விஷால் மற்றும் புன்யா ஆகியோருக்கும் தனது இசையமைப்பின் கீழ் பாடுவதற்கான வாய்ப்பை வழங்கப்போவதாக அறிவித்தார்.

இந்த பருவத்தின் வெற்றியாளராக முருகன் என்ற மூக்குத்தி முருகன் என்பவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு, 50 லட்சம் மதிப்புள்ள வீட்டை அருண் எக்செல்லோ நிறுவனத்திடமிருந்து பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூப்பர்_சிங்கர்_7&oldid=3245603" இருந்து மீள்விக்கப்பட்டது