சூப்பர் சிங்கர் (பகுதி 6)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சூப்பர் சிங்கர் (பகுதி 6)
வகை பாடும் நிகழ்வு
தொகுத்தளிப்பு பிரியங்கா
மா கா பா ஆனந்த்
நடுவர்கள் பி. உன்னிகிருஷ்ணன்
அனுராதா ஸ்ரீராம்
சுவேதா மோகன்
பென்னி தயாள்
நாடு இந்தியா
மொழி தமிழ்மொழி
பருவங்கள் எண்ணிக்கை 5
தயாரிப்பு
நிகழ்விடங்கள் தமிழ் நாடு
ஒளிபரப்பு நேரம் தோராயமாக அங்கம் ஒன்று 40–45 நிமிடங்கள்
ஒளிபரப்பு
மூல அலைவரிசை ஸ்டார் விஜய்
மூல ஓட்டம் 21 சனவரி 2018 (2018-01-21) – ஒளிபரப்பில்

சூப்பர் சிங்கர் விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான ஒரு பாட்டு நிகழ்ச்சி ஆகும். இது சூப்பர் சிங்கர் வரிசையில் 6வது பகுதி. 2006ஆம் ஆண்டில் தமிழகத்தின் குரல் தேடல் என தொடங்கிய இந்நிகழ்ச்சி, தற்போது உலக அளவில் உள்ள தமிழர்கள் பங்கேற்கும் ஒரு நிகழ்ச்சியாகிவிட்டது. இந்நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பூட்ட, தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் இணைகிறார் மற்றும் இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவருக்கு தனது இசையில், பாடும் ஒரு அரிய வாய்ப்பு கிடைக்கப் போகிறது’ என்று அறிவித்துள்ளார்.[1][2]

இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக பி. உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், சுவேதா மோகன், பென்னி தயாள் ஆகியோர் பங்கேற்கின்றனர். பிரியங்கா மற்றும் மா கா பா ஆனந்த் தொகுத்து வழங்குகின்றார்கள்.

நடுவர்கள்[தொகு]

இவற்றைப் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]