சூப்பர் சிங்கர் ஜூனியர் 6

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூப்பர் சிங்கர் ஜூனியர் 6
வேறு பெயர்Super Singer Junior 6
வகைபாடுதல்
வழங்கல்மா கா பா ஆனந்த்
பிரியங்கா
நீதிபதிகள்சித்ரா
சங்கர் மகாதேவன்
எஸ். பி. பி. சரண்
கல்பனா ராகவேந்தர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்மொழி
பருவங்கள்6
அத்தியாயங்கள்54
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 50–55 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்20 அக்டோபர் 2018 (2018-10-20) –
21 ஏப்ரல் 2019 (2019-04-21)

சூப்பர் சிங்கர் ஜூனியர் 6 என்பது அக்டோபர் 20, 2018 முதல் விஜய் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பான பாட்டு போட்டி நிகழ்ச்சியாகும்.[1]இந்த நிகழ்ச்சியை மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா இணைத்து தொகுத்து வழங்குகின்றனர். இந்த பருவத்தின் நடுவர்களாக சித்ரா, சங்கர் மகாதேவன், எஸ். பி. பி. சரண் மற்றும் கல்பனா ராகவேந்தர் ஆவார்.

நிகழ்ச்சியின் முதல் அத்தியாயத்தில் நடிகை ஜோதிகா சிறப்பு விருந்தினராக காற்றின் மொழி படக்குழுவினருடன் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் 6 வயதிலிருந்து 15 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் கலந்து கொண்டு அவர்களின் பாடல் திறமையை வெளிக்காட்ட வேண்டும்.[2] இந்த பாட்டு நிகழ்ச்சி 21 ஏப்ரல் 2019 அன்று 54 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.[3]

வெற்றியாளர்கள்[தொகு]

போட்டியாளர் தரவரிசை பரிசு தொகை
கிருத்திக் வெற்றியாளர் ₹ 50, 00, 000
சுர்யா இரண்டாவது வெற்றியாளர் ₹25, 00, 000
பூவையர் மூன்றாவது வெற்றியாளர் ₹10, 00, 000

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]