உள்ளடக்கத்துக்குச் செல்

சூணைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூணைட்டு
Zunyite
கூர்மையான பழுப்பு சிவப்பு சூனைட்டின் பிரமிடுகள், சில்வர் சிட்டி, உட்டா, அமெரிக்காவில் கிடைத்தது.(அளவு: 5.5 x 5 x 3.5 cm)
பொதுவானாவை
வகைசோரோசிலிக்கேட்டுகள்
வேதி வாய்பாடுAl13Si5O20(OH,F)18Cl
இனங்காணல்
நிறம்சாம்பல் வெண்மை, தசை சிவப்பு; மெல்லிய பிரிவில் நிறமற்றது section]]
படிக இயல்புபடிகம் - நன்கு உருவான நுண்ணிய அளவிலான படிகங்களாகக் காணப்படுகிறது.
படிக அமைப்புசம அளவு
இரட்டைப் படிகமுறல்{111} இல் ஊடுறுவும்
பிளப்புதெளிவானது {111}
முறிவுசமமற்றது
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை7
மிளிர்வுபளபளக்கும்
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஉள்ளடக்கங்களுடன் ஒளிபுகும் மற்றும் கசியும்
ஒப்படர்த்தி2.874(5) (meas.) 2.87 - 2.90 (calc.)
ஒளியியல் பண்புகள்சம உருவம்
ஒளிவிலகல் எண்n = 1.592 - 1.600
பிற சிறப்பியல்புகள்புற ஊதா ஒளியில் சிவப்பாக ஒளிரும்
மேற்கோள்கள்[1][2][3]

சூணைட்டு (Zunyite) என்பது Al13Si5O20(OH,F)18Cl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். அலுமினியம், சிலிக்கான், ஐதரசன், குளோரின், ஆக்சிசன் மற்றும் புளோரின் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இக்கனிமம் உருவாகிறது.

பன்னாட்டு கனிமவியல் சங்கம் சூணைட்டு கனிமத்தை என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.Znu[4]

தோற்றம்

[தொகு]

அதிக அலுமினியக் களிப்பாறைகளிலும் நீர்வெப்ப ரீதியாக மாற்றப்பட்ட எரிமலைப் பாறைகளிலும் சூணைட்டு கனிமம் காணப்படுகிறது. இது பைரோபைலைட்டு, காவோலிணைட்டு, அலுணைட்டு, டையசுபோர், உரூட்டைல், பைரைட்டு, ஏமடைட்டு மற்றும் குவார்ட்சு ஆகியவற்றுடன் இணைந்து சூணைட்டு காணப்படுகிறது.[1]

சூணைட்டு கனிமம் 1884 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கொலராடோவின் சான் இயூவான் மாகாணத்தில் உள்ள சில்வர்டன் மாவட்டத்தில் உள்ள இதன் கண்டுபிடிப்பு தளமான சூனி சுரங்கத்தின் நினைவாக சூணைட்டு எனப் பெயரிடப்பட்டது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Handbook of Mineralogy
  2. 2.0 2.1 Mindat.org
  3. Web Mineral
  4. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சூணைட்டு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சூணைட்டு&oldid=4211588" இலிருந்து மீள்விக்கப்பட்டது