சூட்டிகை மெய்நிகர் கற்றல் வகுப்பறை செயல்திட்டம் (Smart Virtual Classroom Project)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


இந்தியாவில் தெரிவு செய்யப்பட்ட குஜராத்,ராஜஸ்தான்,ஆந்திரப் பிரதேசம்,ஹரியானா,தமிழ் நாடு, இமாச்சலப் பிரதேசம் மற்றும் திரிபுரா ஆகிய ஏழு மாநிலங்களில் முதன் முறையாக சோதனை முயற்சியாக இச்செயல்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஏழு மாநிலங்களில் உள்ள 50 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் கட்டுப்பாட்டின் கீழ் 3500 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சூட்டிகை மெய்நிகர் கற்றல் வகுப்பறை வசதியை நிறுவுவதே இச்செயல்திட்டத்தின் நோக்கம் ஆகும். நாட்டின் கடைக்கோடி மற்றும் கிராமப்புறங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கும் தரமான கல்வியை வழங்குவதே இச்செயல் திட்டத்தின் குறிக்கோள்.

 இந்த செயல்திட்டத்தின் நோக்கமானது ஒரு வகுப்பறையை தொழில்நுட்பத்தால் செயல்படும் வகுப்பறையாக(Technology Enabled Classroom) உருவாக்குவதே ஆகும்.அதற்கு கணினிகளை ஒருங்கிணைத்தும், வெண்பலகைகளைப் பயன்படுத்தி ஊடாடல் (Interactive)முறையில் பாடம் நடத்தியும்,படவீழ்த்தியைப் பயன்படுத்தியும், சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட மென்பொருள்கள் பயன்படுத்தியும் , காணொளி உரையாடல்கள் நிகழ்த்தியும் தொழில்நுட்பத்தால் செயல்படும் வகுப்பறையாக உருவாக்க வாய்ப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன.இச்செயல்திட்டத்தை செயல்படுத்த, முதற்கட்டமாக மின்சார வசதி,இணைய வசதி,இட வசதி இவற்றைக் கொண்டிருக்கும் பொருத்தமான எண்ணிக்கையுள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும் அவற்றோடு தொடர்புடைய அதே வசதிகளைக் கொண்ட பள்ளிகளும் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் தெரிவு செய்யப்பட்டன. 
  கற்றல் கற்பித்தலை கணினி, வெண்பலகைகள், படம் காட்டும் கருவிகள், சிறப்பு மென்பொருட்கள், காணொளி கருத்தரங்குக்கள் போன்றவைகளைக் கொண்டு ஒருங்கிணைக்கும் வாய்ப்புகளை  நல்கி தொழில் நுட்ப வகுப்பறைகளை உருவாக்கும்  நோக்கத்தோடு துவங்கப்பட்ட ஒரு செயல்திட்டமே  சூட்டிகை மெய்நிகர் கற்றல் வகுப்பறை செயல்திட்டம் ஆகும்.மாநில அளவில் தெரிவு செய்யப்பட்ட பள்ளிகள் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தோடு இணைந்து இச்செயல்திட்டத்தை  நடைமுறைப்படுத்த காணொளிக் கருத்தரங்குக்களை SCERT நடத்தும். நாட்டின் தொலைதூரங்களிலிருக்கும் கிராமப்புறத்தில் பயிலும் மாணவர்களிளின் கல்வித்தரத்தினை மேம்படுத்துவதற்காக இந்த  திட்டம் அமலாக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல் மற்றும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மாநில அளவிலான ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களின் திறன்களை வளர்க்கவும் இந்த திட்டம்  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

சூட்டிகை மெய்நிகர் கற்றல் வகுப்பறை செயல்திட்டமானது (Smart Virtual Classroom) மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்ச்சி நிறுவனத்தை (DIET) வழிகாட்டியாக கொண்டு செயல்படுகிறது. உயர்தரம் வாய்ந்த தொழில்நுட்ப கருவிகளைக் கொண்டு நிறுவப்பட்ட படபிடிப்புக் கூடத்திலிருந்து (studio) ஒளிபரப்பப்படும் கல்வி நிகழ்ச்சிகளானது அந்த படப்பிடிப்புக் கூடத்தோடு இணையதளம் மூலம் இணைக்கப்பட்ட பள்ளிகளில் நேரடியாக ஒளிபரப்பபடுகிறது. ஆசிரியர்களும் மாணவர்களும் நிகழ்ச்சியில் காணொளிக் கலந்துரையாடலில் உள் நுழைந்து (logged) ஊடாடும் வெண்பலகை (Interactive White Board), பட வீழ்த்தி , கணினி ஆகியவைகள் உதவியோடு மெய்நிகர் வகுப்பறைச் சூழலில் கற்றுக்கொள்கிறார்கள்.இந்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய மின்னணுவியல் தகவல் மற்றும் தொழில்நுட்ப துறையின் நிறுவனமான கல்வி மற்றும் ஆராய்ச்சி வலைப்பின்னல் (ERNET) வழியே இந்த செயல்திட்டத்தினை நடைமுறைப்படுத்துகிறது. இந்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையானது (DeitY) இந்த செயல்திட்டத்திற்கான நிதி ஆதாரங்களை வழங்குகிறது. மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கிறது. மின் வழிக்கற்றல் (e learning) மூலமாக கல்வி சம்மந்தமான காணொளிகளை பார்ப்பது, மைய சேவையகத்தில் சேமித்து வைத்திருக்கும் காணொளிகளை தரவிறக்கிப் பார்ப்பது (Download), காணொளிக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு பிற பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடுவது, பல்வேறு விதமான பங்களிப்புகளை பகிர்ந்துகொள்வது, பதிவு செய்து வைக்கப் பட்டிருக்கும் காணொளிகளையும் (Recorded videos) , ஒலிப்பதிவுகளையும் (audios) பயன்படுத்துவது என மாணவர்களுக்கான பயன்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆசிரியர்களுக்கு இது ஒரு முற்றிலும் வேறுபட்ட களம். அவர்கள் மெய்நிகர் கற்றல் வகுப்பறைச் சூழலில் இருப்பதால் மாணவர்களுடன் நேரடியாக பயணிக்க முடியாத ஒரு சூழ்நிலை இருக்கிறது. ஆனாலும் பொதுவான வலைப்பின்னல் மூலமாக மாணவர்களுடன் இடைவினை புரிவதும் ஒரு அருமையான தருணம் தான். நேரலையாக ஒளிபரப்பப்படும் இந்த பாடங்கள் பதிவுசெய்து வைக்கப்படுவதால் மாணவர்கள் எந்த நேரத்திலும் அவற்றைப் பயன்படுத்தலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் அவற்றைக் கண்டுகளிக்கலாம். சூட்டிகை மெய்நிகர் வகுப்பறை மூலம் நேரலை வகுப்பு ஒரே நேரத்தில் பல பள்ளிகளில் நடைபெறுவதால் ஆசிரியர் பற்றாக்குறையினையும் சரிசெய்யலாம்.

      இந்த செயல்திட்டத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் வலுவான மாநிலமாக தமிழ்நாடு மாற்றுவதற்கும் அறிவுப் பொருளாதாரத்தில் ஏற்றம் பெறச்செய்வதற்கும் முயற்சியெடுக்க வேண்டும். ஒவ்வொரு பயனாளியும் இந்த செயல்திட்டத்தை அனைவருக்கும் எடுத்துச் சென்று கிராமப்புற கடைகோடியில் இருக்கும் மாணவர்களுக்கும் தரமான கல்வியை கொண்டு செல்லப் பாடுபட வேண்டும்.


முலம் ERNET வழங்கிய கைேயடு