சூடானிய உறவுமுறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சூடானிய உறவுமுறைப் பெயரிடல் வகை தற்காலத்தில் சூடானை அண்டியுள்ள ஆப்பிரிக்கக் கண்டப் பகுதிகளில் காணப்படுகின்றது. இம்முறையைக் கடைப்பிடிக்கின்ற சமுதாயங்கள் பொதுவாகத் தந்தைவழி மரபுமுறைச் சமுதாயங்களாகவும், பெருமளவு படிமுறையமைப்பைக் கொண்டனவாகவும் உள்ளன. பண்டைய ஐரோப்பாவிலும் இன்று வேறு முறைகளைக் கடைப்பிடிக்கும் பல சமுதாயங்களில் சூடானிய முறை பயன்படுத்தப்பட்டு வந்ததையும் அறிய முடிகின்றது. இன்று இறந்த மொழியாக உள்ள இலத்தீன், பழைய ஆங்கிலம் என்பன இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

உறவுமுறைகளுக்குப் பெயரிடும் ஆறு முறைகளில் ஒன்றான சூடானிய முறையை விளக்கும் படம்.

பெற்றோரின் தலைமுறையைச் சேர்ந்த தந்தை, தாய், தந்தையின் சகோதரர்கள், தாயின் சகோதரர்கள், தந்தையின் சகோதரிகள், தாயின் சகோதரிகள் ஆகிய ஆறு வகை உறவுமுறைகளும், பேசுனரின் தலைமுறையைச் சேர்ந்த சகோதரர்கள், சகோதரிகள், தந்தையின் சகோதரர்களின் பையன்கள் (மகன்கள்}, தந்தையின் சகோதரரின் பெண்கள், தந்தையின் சகோதரியின் பையன்கள், (மகள்கள்), தந்தையின் சகோதரியின் பெண்கள், தாயின் சகோதரர்களின் பையன்கள் (மகன்கள்}, தாயின் சகோதரரின் பெண்கள், தாயின் சகோதரியின் பையன்கள், (மகள்கள்), தாயின் சகோதரியின் பெண்கள் ஆகிய 10 வகை உறவுமுறைகளும் சேர்ந்த 16 வித உறவுமுறைகளுக்கும் தனித்தனி உறவுப்பெயர்கள் இருப்பதே சூடானிய முறையின் சிறப்பு அம்சமாகும்.


இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூடானிய_உறவுமுறை&oldid=1342089" இருந்து மீள்விக்கப்பட்டது