உள்ளடக்கத்துக்குச் செல்

சூசன் ஜார்ஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூசன்
பிறப்புசூசன் ஜார்ஜ் மத்தன்
ஜூலை 28,1987
திருவனந்தபுரம், கேரளா
பணிதொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2007 ம் ஆண்டு முதல்

சூசன் ஜார்ஜ், இந்தியாவின், கேரள மாநிலத்தைச் சேர்ந்த தமிழ் நடிகையாவார்,[1] 2007 ம் ஆண்டு முதல் பல்வேறு தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் இவர், மைனா திரைப்படத்தின் மூலம் வெகுஜன மக்களால் பரவலாக அறியப்பட்டு "மைனா சூசன்" என்று அழைக்கப்படுகிறார்.[2][3][4]

தொழில்

[தொகு]

தொலைக்காட்சி

[தொகு]

ஜெயா தொலைக்காட்சியில் வி.ஜே.யாக காலை மலர் நிகழ்ச்சிக்காக தொகுத்து வழங்கிய தகவல் டாட் காம் என்ற நிகழ்ச்சியே சூசனது முதல் திரை நிகழ்ச்சியாகும். இவரது முதலாவது தொலைக்காட்சித் தொடர் காக்கி என்பதாகும், தென்றல் தொலைக்காட்சித் தொடரில் ஆட்டோ ஓட்டுநர் கதாபாத்திரம் முதல்ஆபீஸ் தொலைக்காட்சித் தொடரில் ஐடி திட்ட மேலாளர் வரை வரையிலான பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ள இவர், ஸ்டார் விஜய்யின் சமையல் யதார்த்த நிகழ்ச்சியான கிச்சன் சூப்பர்ஸ்டாரில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். 60 நொடி, நீங்கள் தயாரா? என்ற நிகழ்ச்சியிலும் பங்குகொண்டு அதன் இறுதிப் போட்டியாளராகவும் இருந்துள்ளார்,[5]

குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்கள்

[தொகு]

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் பங்கு குறிப்புகள்
2008 அரசங்கம் காப்பீட்டு விற்பனை முகவர்
2010 மைனா சுதா பாஸ்கர் (ஜெயிலரின் மனைவி)
அர்ஜுனன் காதலி வெளிவராத திரைப்படம்
2011 நர்த்தகி திருநங்கையின் தாய்
2013 ரா ரா புஷ்பா
தேசிங்கு ராஜா
பேச்சியக்கா மருமகன்
2014 தேவதாஸ் ஸ்டைல் மார்சடு தெலுங்கு படம்
நண்பேண்டா ரம்யாவின் விடுதி தோழி
2018 தோத்ரா பவுன்ராஜின் மனைவி
ராட்சசன் ஏசிபி லட்சுமி
2019 ராக்ஷசுடு ஏசிபி லட்சுமி தெலுங்கு படம்
ஜாக்பாட் சிறை கண்காணிப்பாளர்
2021 ஆனந்தம் விளையாடும் வீடு முத்துப்பாண்டியின் மனைவி வைரம்

தொலைக்காட்சி

[தொகு]
ஆண்டு தொடர் பங்கு சேனல்
2009 சுழியம் விஜய் தொலைக்காட்சி
2009–2010 ரோஜா கூட்டம் விஜய் தொலைக்காட்சி
2009–2013 தென்றல் கல்யாணி சன் டி.வி
2011-2012 அத்திப்பூக்கள் மேரி "கனகம்" சன் டி.வி
2012-2013 தியாகம் சுகந்தி சன் டி.வி
2012-2013 சரவணன் மீனாட்சி மல்லிகா "மேகி" விஜய் தொலைக்காட்சி
2013 60 நொடி! நீங்கள் தயாரா? தன்னை விஜய் தொலைக்காட்சி
2013-2014 அலுவலகம் சூசன் விஜய் தொலைக்காட்சி
2015–2016 7am Uyir வேந்தர் டி.வி
2015–2016 ஆண்டாள் அழகர் / பகல் நிலவு மலர்விழி விஜய் தொலைக்காட்சி
2016–2018 சரவணன் மீனாட்சி ராதிகா விஜய் தொலைக்காட்சி
2016-2017 காக்கா காக்கா ராஜ் டி.வி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kollywood Supporting Actress Suzane George Biography, News, Photos, Videos". nettv4u (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-01.
  2. "I almost got lynched: Susan". Times of India. 14 January 2014. பார்க்கப்பட்ட நாள் 24 November 2017.
  3. "Susan teams up with Amala again after Mynaa". Anupama Subramanian. தி டெக்கன் குரோனிக்கள். 13 December 2016. பார்க்கப்பட்ட நாள் 24 November 2017.
  4. Suzane George Interview | Chit Chat With Suzane George | Myna Sudha | Film Focus (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2021-07-01
  5. "Tamil Tv Show 60 Nodi Are You Ready - Full Cast and Crew". nettv4u (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூசன்_ஜார்ஜ்&oldid=3742682" இலிருந்து மீள்விக்கப்பட்டது