சு. ராஜசெல்வி
சு. ராஜசெல்வி இலங்கை கிளிநொச்சியை வசிப்பிடமாக கொண்ட ஒரு பெண் படைப்பாளி. இவரின் நாலு அடிக்கவிதைகள் பலராலும் ஈர்க்கப்பட்டவை. கிளிநொச்சியில் வெளிவந்த ஈழநாதம்(வெள்ளிநாதம் ) பத்திரிகையில் படத்திற்கான கவிதைப்போட்டிகளில்இவரது சுமார் இருநூற்றி எண்பது கவிதைகள் பிரசுரமாகியுள்ளன.அதில் நாற்பது கவிதைகள் பரிசுக்குரியவையாகவும் எஞ்சியவை பாராட்டுக்குரியவையாகவும் பிரசுரமாகின. இவரின் முப்பதிற்கும் மேற்பட்ட விஞ்ஞான கட்டுரைகள் விழி மருத்துவ இதழில் பிரசுரமாகியிருந்தது. இவர் ஒரு வலைப்பதிவரும் கூட. இவரது சிலகவிதைகள் வானொலியில் ஒலிபரப்பாயிருக்கிறது. நிகழ்வுகளிலும் கவிதை வாசித்திருக்கிறார். சு.ராஜசெல்வி, ரா.சுஜந்தன் , எஸ் ஆர் எஸ் , சு.செல்வி, எஸ்.ஆர்.செல்வி, எஸ்.ராஜி ஆகிய பெயர்களில் இவர் எழுதியிருக்கிறார்.
1998 ஆம் ஆண்டு வட கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தினால் வட கிழக்கு மாகாண பாடசாலைக்கிடையிலான கையெழுத்து சஞ்சிகைப்போட்டியில் கிளிநொச்சி சென் தெரேசா பெண்கள் கல்லூரியின் "வளர்பிறை" கையெழுத்து சஞ்சிகை இரண்டாம் இடத்தைப்பெற்றுக்கொண்டது. இச்சஞ்சிகையின் வழிகாட்டி ஆசிரியைக்கான சான்றிதழை இவர் பெற்றுக்கொண்டார். பாடசாலை வாத்திய( Band) அணியில் Melodica இசைக்கருவியை வாசிப்பவராக இருந்திருக்கிறார்.
முகநூலுக்கூடான திறந்த இலக்கியப்போட்டிகளில் கவிதைகளுக்காக, புகைப்படங்களுக்காக , சிறுகதைகளுக்காக வெற்றியாளர் சான்றிதழ்கள் பெற்றிருக்கிறார். தடாகம் கலை இலக்கியவட்டம் நடாத்திய உலகம் தழுவிய கவிதைப்போட்டியில் (100 வது மாதம்) மூன்றாவது இடத்தையும் கவின்கலை பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் கா.சுஜந்தன் அவர்களின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிவந்த நூல்கள்[தொகு]
- கை விளக்கு (சிறுவர் நூல்) - 2010