சு. பழனிச்சாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சு. பழனிசாமி (S. Palanisamy)(திசம்பர் 7, 1936) என்பவா் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகைப் புதூரைச் சார்ந்தவர். இவர் பள்ளிக் கல்வியினை மேட்டுப்பாளையம் மகாஜன பள்ளியில் பயின்றுள்ளார். 1977 மற்றும் 1980 தேர்தல்களில் மேட்டுப்பாளையம் தொகுதியிலிருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டுத் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-06-26.
  2. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._பழனிச்சாமி&oldid=3554880" இலிருந்து மீள்விக்கப்பட்டது